ஈஸி கத்திரிக்காய் பொரியல் (Brinjal Poriyal)

கத்திரிகாய் மிகவும் குறைந்த கலோரி உள்ள காய். இதில் அதிக அளவு தண்ணீர் உள்ளது.
· கத்திரிகாயில் Potassium, கல்சியம், நார்சத்து மற்றும் விட்டமின்ஸ் உள்ளன்.
· இது டயபெட்டிக் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
· கத்திரிகாயினை எப்பொழுதும் பொரிப்பது நல்லது அல்ல…பொரிப்பதால் அது எண்ணெய் அதிகம் எடுத்து கொண்டு…நிறைய கலோரியினை எற்படுத்துவிடும்.
· கத்திரிகாயினை எப்பொழுதும் தோல் நீக்கி சமைக்க கூடாது.


எப்பொழுதும் கத்திரிகாயினை வெங்காயம் , தக்காளி என்று சேர்த்து பொரியல் செய்யாமல் இப்படி ஒருமுறை சமைத்து பாருங்கள்… இந்த கத்திரிகாய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். இதில் சோம்பு + ரசப்பொடியினை சேர்த்து சமைத்து இருப்பதால் மிகவும் சுவையாக வித்யாசமாக இருக்கும்.

இதனை கலந்த சாதம், சாம்பார், ரசம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கத்திரிக்காய் – 1/4 கிலோ
· நசுக்கிய பூண்டு பல் – 2
· ரசப்பொடி – 1 தே.கரண்டி, உப்பு - தேவையான அளவு
முதலில் தாளிக்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· சோம்பு – 1 தே.கரண்டி
கடைசியில் சேர்க்க :
· பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
v கத்திரிக்காயினை பெரிய பெரிய நீள துண்டுகாளாக வெட்டி கொள்ளவும்.
v ஒரு நாண்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து பின் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
v பிறகு நீளமாக வெட்டி வைத்துள்ள கத்திரிக்காயினை போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கி ரசப்பொடியினை சேர்க்கவும்.

v நன்றாக கத்திரிகாயினை கிளறிவிட்டு, தட்டு போட்டு முடி வேகவிடவும்.
v கத்திரிகாய் நன்றாக வெந்தவுடன், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


குறிப்பு :
ரசப்பொடியிற்கு பதிலாக சாம்பார் பொடியையும் சேர்த்து செய்யலாம். அது ஒரு தனி சுவையாக இருக்கும்.

15 comments:

பிரபாகர் said...

மேடம், ஒவ்வொரு சமையல் குறிப்பிலும் அசத்துகிறீர்கள். நிறைய எழுதுங்கள்.

பிரபாகர்.

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி பிரபாகர்.

கண்டிப்பாக செய்து பாருங்கள்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

mmm.. looks good.. thx

Unknown said...

வாழக்காய் பொரியல் போலவே இதுவும் ஈஸியா இருக்கும் போல தெரியுது,சீக்கிரம் ட்ரை செய்து பார்க்கிறேன்,நன்றி கீதா!!

வால்பையன் said...

என்னைப் போல் சோம்பேறிகளுக்கு
“ஓசி கத்திரிக்காய் பொறியல்” கிடைக்குமா!?


ஹிஹிஹிஹி

GEETHA ACHAL said...

நன்றி ராஜ் அண்ணா.

GEETHA ACHAL said...

ஆமாம் தாமரை, இதுவும் அதே போல சுவையாக தான் இருக்கும்.

கண்டிப்பாக செய்து பாருங்கள்.

GEETHA ACHAL said...

//என்னைப் போல் சோம்பேறிகளுக்கு
“ஓசி கத்திரிக்காய் பொறியல்” கிடைக்குமா!?///
வாங்க எங்க வீட்டிற்கு கண்டிப்பாக ஓசி கத்திரிகாய் பொரியல் மட்டும் கிடைக்கும் வால்பையா...

Anonymous said...

//வாங்க எங்க வீட்டிற்கு கண்டிப்பாக ஓசி கத்திரிகாய் பொரியல் மட்டும் கிடைக்கும் வால்பையா...//

அதென்ன மட்டும்!
அப்போ சோத்துக்கு பக்கத்துவீட்டுக்கு போறதா!?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//வாங்க எங்க வீட்டிற்கு கண்டிப்பாக ஓசி கத்திரிகாய் பொரியல் மட்டும் கிடைக்கும் வால்பையா...//

அதென்ன மட்டும்!

அப்போ சோத்துக்கு பக்கத்துவீட்டுக்கு போறதா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

GEETHA ACHAL said...

////வாங்க எங்க வீட்டிற்கு கண்டிப்பாக ஓசி கத்திரிகாய் பொரியல் மட்டும் கிடைக்கும் வால்பையா...//

அதென்ன மட்டும்!
அப்போ சோத்துக்கு பக்கத்துவீட்டுக்கு போறதா!?
//
வால்பையன் ஒசி கத்திரிகாயினை தான் கேட்டாங்க...
அவருக்கு Supportஆ பேசரவங்க...பெயர் எழுதி இருக்கலாம் அல்லவா...anonymous Friend

வால்பையன் said...

அதுவும் நான் தான்!

தெரியாம அனானி கிளிக் ஆகிருச்சு!

SUFFIX said...

//கத்திரிகாயில் Potassium, கல்சியம், நார்சத்து மற்றும் விட்டமின்ஸ் உள்ளன். //

அப்படியா? புதிய தகவல், செய்முறையும் நல்லா இருக்கு.

GEETHA ACHAL said...

////கத்திரிகாயில் Potassium, கல்சியம், நார்சத்து மற்றும் விட்டமின்ஸ் உள்ளன். //

அப்படியா? புதிய தகவல், செய்முறையும் நல்லா இருக்கு//

நன்றி ஷஃபிக்ஸ்..கண்டிப்பாக செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

Anonymous said...

மேடம் மிகவும் அருமையாக உள்ளது
K.RUKMANI
ICU QUEEN
K.G.Hospital
Coimbatore

Related Posts Plugin for WordPress, Blogger...