முளைகட்டிய கொள்ளு சாலட்இந்த சாலடில், முளைகட்டிய கொள்ளினை உபயோகித்து செய்து உள்ளேன். இப்படி பயிறு வகைகளை முளைகட்டுவதால் அதிக சத்துகள் கிடைக்கின்றது. இந்த சாலட் செய்வதும் மிகவும் சுலபம். இதே போல பச்சை பயிறிலும் சாலட் செய்யலாம்.
முளைகட்ட:
கொள்ளினை 5 – 6 மணி நேரம் ஊறவைத்து அதனை நன்றாக கழுவி, ஒரு துணியில் போட்டு முடிவைக்கவும். ஒரு நாள் கழித்து பார்த்தால் முளைவிட்டு இருக்கும்.

சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ முளைக்கட்டிய கொள்ளு – 1 கப்
§ எலுமிச்சை பழம் – 1
§ உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கி கொள்ள வேண்டிய பொருட்கள் :
§ சிவப்பு வெங்காயம் – 1/4
§ பச்சை மிளகாய் – 1
§ கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
v பொடியாக நறுக்கி கொள்ள கொடுத்துள்ள பொருட்களை நறுக்கி வைக்கவும்.
v எலுமிச்சை பழத்தில் இருந்து சாறினை பிழிந்து வைத்து கொள்ளவும்.
v ஒரு பெரிய பாத்திரத்தில், கொள்ளு + எலுமிச்சை சாறு + நறுக்கிய பொருட்கள் + உப்பு சேர்த்து கலக்கவும்.

v சுவையான சத்தான கொள்ளு சாலட் ரெடி.

19 comments:

Pavithra Elangovan said...

Wow me too make this but small difference is half cook the horse gram.. will try it out without cooking next time

Nithya said...

Azhagana Tamizhil suvayana unavai paarka migavum magilchiyaaga ulladhu. :)

You have a very lovely blog. will be following you from now on. Keep it going.

Do take a peep into my blogs when you find time.

Suresh Kumar said...

நல்லா சமைக்கிறீங்க போல இருக்கு ......

வாழ்த்துக்கள்

Saranya Venkateswaran said...

ஆரோகியமான சாலட் வயகைத் தந்திருக்கிறீர்கள்.
செய்து பார்கிறேன்.

R.Gopi said...

வணக்கம் கீதா

இப்போதான் முதன் முதலாக உங்கள் வலைக்கு வருகிறேன்.....

//இந்த சாலடில், முளைகட்டிய கொள்ளினை உபயோகித்து செய்து உள்ளேன்.//

முளைகட்டிய எந்த பயிருக்கும் விசேஷ குணம் (சத்து) உண்டு என்று நினைக்கிறேன்.... குழந்தைகளுக்கு கஞ்சிமாவு தயாரிக்கும்போது கூட, இது போன்ற முளை விட்ட பயிறு வகைகளை சேர்ப்பதை பார்த்து இருக்கிறேன்...

//இதே போல பச்சை பயிறிலும் சாலட் செய்யலாம்.//

இதுவும் மிக நன்றாகவும், சத்தாகவும் இருக்கும்...

பார்த்துட்டேன்.....படிச்சுட்டேன்... ஒரு நாள் கண்டிப்பா துபாயில் பண்ணி பார்த்து விட வேண்டியதுதான்....

நேரம் கிடைக்கும்போது, என் வலைகளின் பக்கமும் வாங்க....கீதா...

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

குறை ஒன்றும் இல்லை !!! said...

Thx...

GEETHA ACHAL said...

//Wow me too make this but small difference is half cook the horse gram//தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா. நீங்கள் சொல்வதும் மிகவும் சுவையாக தான் இருக்கும்.

அப்படியும் சில சமயம் செய்வேன்.

GEETHA ACHAL said...

//Azhagana Tamizhil suvayana unavai paarka migavum magilchiyaaga ulladhu. :)//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நித்யா.

உங்களுடைய கைவண்ணம் எல்லாம் அழகாக இருக்கின்றது. Superb.

GEETHA ACHAL said...

//நல்லா சமைக்கிறீங்க போல இருக்கு ......
// எதோ எனக்கு தெரிந்ததை சமைக்கின்றேன்...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.

அடிக்கடி இந்த பக்கம் வாங்க.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சரண்யா. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபி.
//பார்த்துட்டேன்.....படிச்சுட்டேன்... ஒரு நாள் கண்டிப்பா துபாயில் பண்ணி பார்த்து விட வேண்டியதுதான்....//
கண்டிப்பாக செய்து பாருங்கள்.

நேரம் கிடைக்கும் பொழுது அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

GEETHA ACHAL said...

நன்றி ராஜ்.

Unknown said...

The Salad looks perfect. very simple and tasty...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சரஸ்வதி. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

இலா said...

Geetha.. Salad was awesome. It got everyone's appreciation and i only got to eat 1 teaspoon.We ate it fresh.. totally rocks...

GEETHA ACHAL said...

//It got everyone's appreciation and i only got to eat 1 teaspoon.We ate it fresh.. totally rocks// மிகவும் சந்தோசம் இலா.

அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

உடலிற்கும் மிகவும் நல்லது.

தெய்வசுகந்தி said...

ஆரோக்கியமான சாலட்!!!

Anonymous said...

Hi Geetha, How r u?
I really love your cooking.so many healthy recipes.Thank u so much.

please tell me Feeding mothers eat kollu (horse gram)?Its affect baby or milk?

Priya

GEETHA ACHAL said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா..

கொள்ளு சாப்பிடுவதினால் எந்த பிரச்சனையும் வராது...வாரத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்ளுங்க...நல்லது...

Related Posts Plugin for WordPress, Blogger...