பீர்க்கங்காய் தோல் துவையல்


பீர்க்கங்காய் தோலினை தூக்கி எறியாமல், இப்படி துவையல் செய்து சாப்பிடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

· பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் தோல் – 1 கப்

· கருவேப்பில்லை – 1 கொத்து

· புளி –சிறிதளவு

· பெருங்காயம் தூள் – 1/4 தே.கரண்டி

· உப்பு – தேவையான அளவு

· எண்ணெய் – 2 தே.கரண்டி

· கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி

· உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி

· காய்ந்த மிளகாய் – 3

செய்முறை :

v பீர்க்கங்காய் தோலினை கழுவி சிறிது நேரம் காயவிடவும்.

v கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தமிளகாய் + கடலை பருப்பு + உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

v அதன்பின், பீர்க்கங்காய் தோல் + கருவேப்பில்லை + மீதம் உள்ள 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

v வறுத்த பொருட்கள் + வதக்கிய பொருட்கள் + உப்பு + புளி + பெருங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

v சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் ரெடி. இதனை சாதம், இட்லி, தோசை, போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :

இந்த துவையலில் கொத்தமல்லி, புதினா சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

12 comments:

நட்புடன் ஜமால் said...

தோல் வைத்து சட்னிகள்

இனி எதையும் வீணாக்கத்தேவையில்லை

நன்றி.

Mrs.Menagasathia said...

சூப்பர் கீதா,நேத்து நான் சௌசௌதோல் துவையல் போட்டேன்.இன்னிக்கு நீங்க பீர்க்காங்காய்த் தோல் துவையல்.

கீதா ஆச்சல் said...

//தோல் வைத்து சட்னிகள்

இனி எதையும் வீணாக்கத்தேவையில்லை// நன்றி ஜமால். கண்டிப்பாக செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

நன்றி மேனகா.

Priya said...

Superb Geetha, i do with few sesame seeds, delicious thuvaiyal...

Pavithra said...

I too make this love this so much...

Thamarai selvi said...

ஒரே ஒரு தரம் தான் இது செய்து இருக்கேன்!! அதுவும் உங்க ரெஸிப்பி மாதிரிதான் செய்தேன், சில பீர்க்கங்காய் கசப்பா இருப்பதால் பயம் அத வாங்க! கசக்காத பீர்க்கங்காய் வாங்க ஏதாவது டுப்ஸ் இருந்தால் கொடுங்க கீதா!!

கீதா ஆச்சல் said...

//i do with few sesame seeds, delicious thuvaiyal...//நீங்கள் சொல்வது போல கண்டிப்பாக அடுத்த முறை சமைக்கும் பொழுது செய்து பார்க்கிறேன். நன்றி ப்ரியா.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவி..

Ammu Madhu said...

இதே போல் எங்க அம்மா செய்வாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்..நாளைக்கு செய்யணும்..

அன்புடன்,
அம்மு.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி தாமரை...

இது நாள்வரை, நான் வாங்கிய பீர்க்கங்காயில் அப்படி கசப்பினை நான் பார்த்துஇல்லை...(ஒரு வேலை நான் கவனித்து இல்லையா என்று தெரியவில்லை...)

நான் பீர்க்கங்காயினை சைனீஸ் கடைகளில் தான் வாங்குவேன்...

நான் வேனுமான,கண்டிப்பாக அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன் தாமரை...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

Related Posts Plugin for WordPress, Blogger...