கத்திரிக்காய் சாண்ட்விட்ச்(Brinjal Sandwich)


எப்பொழுதும் பிரெட் சாண்ட்விட்ச் சாப்பிட்டு போரடித்துவிட்டாதா?...வாங்க இந்த கத்திரிக்காய் சாண்ட்விட்சினை சாப்பிடுங்கள்…பிரெட்டிற்கு பதிலாக கத்திரிகாயினை வைத்து செய்த சாண்ட்விட்ச் இது.
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ கத்திரிக்காய் – 2
§ உப்பு + மிளகு தூள் – தேவையான அளவு
§ முட்டை – 3
§ ஸ்பினாச் கீரை(Spinach Leaves) – 1 கப்
§ சீஸ்(Cheese) – 3 Sclies
செய்முறை :
அவனை 400F மூற்சுடு செய்யவும். கத்திரிகாயினை வட்டவட்ட 1 இன்ச் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
உப்பு + மிளகு தூளினை , கத்திரிகாயின் மீது தூவிவும். இதனை அவனில் வைக்கும் ட்ரேயி அடுக்கு வைக்கவும்.

பிறகு மூற்சுடு செய்த அவனில் 15 நிமிடங்கள் வைத்து வேகவிடுவும்.

இப்பொழுது கத்திரிக்காய் (ப்ரெட்) ரெடி.

முட்டை + தேவையான உப்பு + மிளகு தூள் சேர்த்து முட்டை அம்லேட் செய்து வைத்து கொள்ளவும்.

முட்டை அம்லேட்யினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

இப்பொழுது கத்திரிகாயின் மீது முட்டை அம்லேட் துண்டுகள் + ஸ்பினாச் கீரை + சீஸ் வைத்து அதன் மீது மற்றொமொரு கத்திரிக்காய் துண்டினை வைக்கவும். இப்பொழுது சுவையான கத்திரிகாய் சாண்டவிட்ச்.

குறிப்பு:
அவன் இல்லாதவர்கள் , கத்திரிகாயினை தோசை கல்லில் போட்டு வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.
சாண்ட்விட்ச் Toothpick வைத்து குத்துகொள்ளவும்
உங்கள் கற்பனை திறனுக்கு எற்றாவாறு இதனை செய்து கொள்ளலாம்.

16 comments:

Mrs.Menagasathia said...

ஹா ஹா சூப்பர் கீதா!!உங்க கற்பனைவளம் வாழ்க!!

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி மேனகா. உங்களை போன்றார்களின் ஊக்கம் தான் என்னை மேலும் இது போல செய்ய துண்டுகின்றது. நன்றி.

Ammu Madhu said...

கீதா அக்கா,

கலக்கறீங்க போங்க!!சூப்பர் பிரசண்டேஷன்.

அன்புடன்,
அம்மு.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி அம்மு. அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

Saro said...

Wow! Thats so innovative Geetha. I will try soon.

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க இது? கலக்குறீங்க !!!

manjula said...

geetha looks so nice kalakuringey

Thamarai selvi said...

பார்க்க அழகா இருக்கு கீதா!!!ஆனால் இந்த மாதிரி சாண்ட்விச் நான் இதுக்கு முன்னால எங்கயும் பார்த்த மாதிரி கூட இல்ல,,,கலக்குங்க...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி சரஸ்வதி. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி மஞ்சுளா...அடிக்கடி இந்த பக்கம் வாங்க..

கீதா ஆச்சல் said...

//ஆனால் இந்த மாதிரி சாண்ட்விச் நான் இதுக்கு முன்னால எங்கயும் பார்த்த மாதிரி கூட இல்ல//
மிகவும் நன்றி தாமரை.
ஆமாம் பா..எதாவது டிப்பரண்டாக செய்ய வேண்டும் என்று எண்ணி செய்தது.
நன்றி.

Priyanka said...

வணக்கம்ங்க.. :) என் பதிவுக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி... :) நான் தமிழ் வலையுலகத்துக்கு புதுசு! உங்க பதிவுகள இப்போ தான் பாக்குறேன்... :( ரொம்ப நல்லா இருக்குங்க... :) :)

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியங்கா..

நிலாமதி said...

இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன் உங்க ஐடியா ரொம்ம்ப் நன்று. செய்து பார்க்கிறேன் . ப்திவுக்கு நன்றி

GEETHA ACHAL said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலாமதி...

Related Posts Plugin for WordPress, Blogger...