புரோக்கோலி டிப்(Broccoli Dip)புரோக்கோலியில் அதிக அளவு விட்டமின்ஸ் மற்றும் நார்சத்து இருக்கின்றது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.


இந்த டிப் , பச்சை காய்கறிகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். கடைகளில் கிடைக்கும் ரான்ச், ப்ளூ சீஸ் போன்றவையினை தவிர்த்து இப்படி ஆரோக்கியமாக சாப்பிடுவது நல்லது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· புரோக்கோலி – 1 கப்
· தயிர் – 1 கப்
· எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)
· பொடியாக நறுக்கிய சிவப்பு வெங்காயம் – 1/4 கப்
· உப்பு – 1/4 தே.கரண்டி
செய்முறை :
v புரோக்கோலியினை மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து மைக்ரோவேவில் 3 நிமிடங்கள் வைத்து வேகவிடவும்.
v வேகவைத்த புரோக்கோலியினை சிறிது நேரம் ஆறவிடவும்.
v பிறகு புரோக்கோலி + தயிர் + எலுமிச்சை சாறு + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
v அரைத்த கலவையுடன் வெங்காயம் சேர்த்து கலக்கவும்.
v சுவையான புரோக்கோலி டிப் ரெடி. இதனை 2 – 3 மணி நேரம் ப்ரிஜில் வைத்து பிறகு காய்களுடன் சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு :
இந்த புரோக்கோலி டிப்பினை, செய்து 6 – 8 மணி நேரம் ப்ரிஜில் வைத்து சாப்பிடலாம்.


இந்த டிப்புடன் காரட், காளிப்ளவர், செலரி, குடைமிளகாய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா தான் இருக்கு பாக்க..

ஹர்ஷினி அம்மா said...

கண்ட கண்ட டிப்பை காசுகுடுத்து வாங்கி அதிக கலோரின்னு அப்படியே ஃப்ரிஜ்லில் இருக்கும்....புரோக்கோலி டிப் நல்லா இருக்கு ஆரோக்கியமானதும் கூட :-)

Saro said...

Wonderful idea Geetha! I'll definitely try this.

கீதா ஆச்சல் said...

//கண்ட கண்ட டிப்பை காசுகுடுத்து வாங்கி அதிக கலோரின்னு அப்படியே ஃப்ரிஜ்லில் இருக்கும்// உண்மை தான் ஹர்ஷினி அம்மா...நானும் அப்படி தான்...அதனால தான் தேவைப்படும் பொழுது இந்த் டிப்பினை செய்துகொள்வது.

இதே டிப்பினை தயிர்க்கு பதிலாக Sour Creamயில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் சரஸ்வதி. மிகவும் சுவையாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

//நல்லா தான் இருக்கு பாக்க..

//பாக்க மட்டும் இல்லை அண்ணா...சாப்பிடவும் நல்லா தான் இருக்கும்...ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...