டயட் காளிஃப்ளவர் மஞ்சூரியன்(Cauliflower Manchurian - Diet)காளிஃப்ளவரில் அதிக அளவு விட்டமின் சி மற்றும் நார்சத்து இருக்கின்றது. இதில் omega- 3 fatty acid, magnesium மற்றும் விட்டமின் பி உள்ளது. இதனை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது. சக்கரை நோய் உள்ளவர்கள் இதனை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இதில் GI அளவு குறைவு.
நீங்களும் இந்த மஞ்சூரியனை செய்து உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· காளிஃப்ளவர் – 1 பெரிய பூ
· குடைமிளகாய் – 1 (பச்சை, சிவப்பு நிறம்)
· வெங்காயதாள் – 3
· தக்காளி சாஸ்/Ketchup – 1 மேஜை கரண்டி
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· தனியா தூள் – 1/2 தே.கரண்டி
· கரம்மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
காளிஃப்ளவரினை பெரிய பெரிய பூக்களாக பிரித்து எடுக்கவும். குடைமிளகாய் + வெங்காயதாளினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பிறகு காளிப்ளவரினை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.


பிறகு சேர்க்க வேண்டிய தூள் வகைகளினை காளிஃப்ளவருடன் சேர்த்து 2 – 3 நிமிடங்கள், நன்றாக கிளற வேகவிடவும்.

பிறகு காளிஃப்ளவருடன் தக்காளி சாஸுடன் சேர்த்து நன்றாக 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும். (காளிஃப்ளவரினை 3 – 4 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிவிடவும்.)

ஒரு பனில் குடைமிளகாய் + வெங்காயதாளினை போட்டு 2 நிமிடங்கள் வதக்கி அதனையும் காளிஃப்ளவருடன் சேர்த்து கலந்து மேலும் 1 நிமிடம் வேகவிட்டு அதனை பரிமாறவும்.

சுவையான காளிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி.

கவனிக்க:
காளிஃப்ளவரினை தட்டு போட்டு முடி வேகவைக்க கூடாது.
இதில் கெட்செப் சேர்ப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த மஞ்சூரியன் பெரித்து எடுத்து செய்த காளிஃப்ளவர் மஞ்சூரியன் மாதிரியே சுவையாக இருக்கும்.

9 comments:

Pavithra said...

Hi geetha.. first time to your blog..you have wonderful collection of recipes.. the manchurian looks mouthwatering. Nice clicks too. will be back often..I like your tamil patriotism (Blog in Tamil)

Saro said...

Cauliflower manchurian looks great and delicious Geetha...

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி பவித்ரா.

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சரஸ்வதி. கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

Ammu Madhu said...

ஹாய் கீதா அக்கா,

உங்களோட ஸ்பைசி காலிப்ளவர் எனக்கு ரொம்பபுடிக்கும் அதேபோல் இதுவும் டேஸ்ட்டா இருக்கும்னு நினைக்கறேன்.இப்போ தான் "காலிப்ளவர் சில்லி " செய்து முடித்தேன்..இங்கு வந்து பார்த்தால் நீங்கள் "டியட் காலிப்ளவர் மஞ்சுரியன்"செய்திருக்கீர்கள்.

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

கீதா ஆச்சல் said...

//உங்களோட ஸ்பைசி காலிப்ளவர் எனக்கு ரொம்பபுடிக்கும் அதேபோல் இதுவும் டேஸ்ட்டா இருக்கும்னு நினைக்கறேன்/// மிகவும் சந்தோசம் அம்மு...

ஒ...சில்லி காளிப்ளவரா...கலக்குங்க...எனக்கும் மிகவும் பிடிக்கும்...

இதனையும் நேரம் கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள்...

Thamarai selvi said...

கீதா அழகா இருக்கு பார்க்க,ஒரே மாதிரி காலிபிளவர் செய்து ரொம்ப போரா இருந்தது, இப்போ அடுத்த தடவ செய்து பார்க்கிறேன்..உங்க நம்பர் நான் மிஸ் பண்ணிட்டேன்ப்பா, என்னோட பழைய போன் ரிப்பேர் ஆகிட்டது புது ஃபோன் மாற்றிவிட்டேன்,அதோட எல்லார் நம்பரும் மிஸ் பண்ணிட்டேன்..எனக்கு ஒரு கால் பண்ணுங்கப்பா டை கிடைக்கும் போது..

Mrs.Menagasathia said...

டயட் மஞ்சூரியன் சூப்பர்,கலக்குங்க...

கீதா ஆச்சல் said...

கருத்துக்கு நன்றி மேனகா...

Related Posts Plugin for WordPress, Blogger...