சென்னா பாலக் தோசை (Channa/Chickpeas Palak Dosai)

ஸ்பினாச் கீரையில் (பாலக்) அதிக இரும்பு, கல்சியம் இருக்கின்றது. இதனை தவிர இதில் அதிக அளவு விட்டமின்ஸ் (Vitamins A, B2, B6, B9(Folic Acid), C, E & K) உள்ளது. இந்த கீரையில் அதிக அளவு போகில் ஆசிட் இருப்பத்தால் உடலிற்கு மிகவும் நல்லது.

சென்னாவில் (கொண்டைகடலை) அதிக அளவு நார்சத்து, புரோட்டின் இருக்கின்றது. இதில் Polyunsaturated Fat இருக்கின்றது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் Cholesterolலினை குறைக்க உதவுகின்றது.

இந்த தோசை அதிக சத்துகள் கொண்டது…2 வாரத்திற்கு ஒரு முறை இப்படி சாப்பிட்டால் உடலிற்கு மிகவும் நல்லது.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கொண்டைகடலை – 1 கப்

· அரிசி () பிரவுன் ரைஸ் – 1/4 கப்
· ஸ்பினாச் கீரை – 1 கப்
· காய்ந்த மிளகாய் – 3
· உப்புதேவையான அளவு
தாளித்து சேர்க்க (விரும்பினால்) :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/2 தே.கரண்டி
· உடைத்த உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
· பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
v கொண்டைக்கடலை + அரிசியினை தனி தனியாக குறைந்த்து 4 – 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
v கீரையினை கழுவி கொள்ளவும்.
v கொண்டைகடலை + கீரை + காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரிசியினை கழுவி கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v அரைத்த கலவையுடன் உப்பு + தாளித்த பொருட்கள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

v தோசை கல்லினை காயவைத்து, தோசைகளாக ஊற்றவும். (சிறிது எண்ணெயினை விரும்பினால் தோசையினை சுற்றி ஊற்றவும்.)

v ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, திருப்பிபோட்டு மேலும் 2 நிமிடம் வேகவிடவும்.

v சுவையான கொண்டைகடலை ஸ்பினாச் தோசை ரெடி. இதனை பச்சடி, சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இந்த தோசையில் எந்த வகையான கீரையினை சேர்த்து கொள்ளலாம்.
அரிசியினை கொரகொரப்பாக அரைப்பதால், தோசை நன்றாக இருக்கும்.

22 comments:

இலா said...

looks colorful... you are a potfull of ideas

கீதா ஆச்சல் said...

இலா, செய்து பாருங்கள் ...நேற்று காலையில் தான் இதனை செய்தேன்...சுவையாக வித்தியசமாக இருந்தது..அக்ஷ்தாவுக்கும் மிகவு பிடித்துவிட்டது..

செய்து பாருங்கள்...கருத்துக்கு நன்றி இலா.

Sanghi said...

palak dosa, romba super geetha..! I love ur name, my dear amma's name.! I'm following you! En blog paarunga :)

Shobana senthilkumar said...

Hi geetha,
supera differnta kalkirenga....pudhu pudhusa seyirenga...thanks for sharing...i will surely try this:)

Pavithra said...

Mmmmmmmmmmm thats so healthy dosai geetha kandipa try panren. Nanum kondai kadalai dosai panuven aanal spinach serthathu illai .. kandipa try seiyanum

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sanghi.

//I love ur name, my dear amma's name.! //மிகவும் சந்தோசம்.

அடிக்கடி இந்த பக்கம் வர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி சோபனா. கண்டிப்பாக செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

விரும்பினால், தேங்காய் துறுவல் கூட சேர்த்து கொள்ளலாம்...சுவையாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் பவித்ரா....

நானும் கொண்டைகடலையில் தோசை, இட்லி எல்லாம் செய்து இருக்கின்றேன்..

காலை நேரத்திற்காக, இதனை சிறிது மாறுதலுக்காக செய்தேன்...சுவையாக இருந்தது...

நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாவ்... பார்க்கவே அருமையா இருககுங்க..

நட்புடன் ஜமால் said...

யம்மியா இருக்கே பார்க்கையிலேயே

சீக்கிரம் செய்து பார்த்திடனும்.

------------

சென்னாவில் குருமா போன்று எதுனா சொல்லுங்களேன்.

Priya said...

I tried once idli with sprouted channa, i think making out dosa seems a delicious and better way to try dishes with channa, spinachkuda channavum kalakuthu Geetha...Wonderul dosa..

Mrs.Menagasathia said...

வாவ் கலர்புல் தோசை.செய்துடுவோம் கீதா!!

கீதா ஆச்சல் said...

நன்றி ராஜ்.

கீதா ஆச்சல் said...

//யம்மியா இருக்கே பார்க்கையிலேயே

சீக்கிரம் செய்து பார்த்திடனும்.

சென்னாவில் குருமா போன்று எதுனா சொல்லுங்களேன்//
கண்டிப்பாக செய்து பாருங்கள்...

சென்னா மாசாலாவின் லின்ங் பாருங்கள்,

http://geethaachalrecipe.blogspot.com/2009/05/blog-post.html

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...கண்டிப்பாக செய்து பாருங்கள்..

Anonymous said...

super super super நன்றி!

Geetha Achal said...

மிகவும் நன்றி.

Rathna Rosy said...

Hi geetha,

I am a silent reader of your blog.you jpe doing a great job by posting delicious
and healthy recipes.
One small doubt here ... After grinding immediately can I prepare dosa or it should take some time for fermentation? And whether this dosa can be eaten in night time,since I heard having green leaves in night makes digestion difficult. Sorry for leaving such long post

Rathna Rosy said...

Hi geetha,

I am a silent reader of your blog.you jpe doing a great job by posting delicious
and healthy recipes.
One small doubt here ... After grinding immediately can I prepare dosa or it should take some time for fermentation? And whether this dosa can be eaten in night time,since I heard having green leaves in night makes digestion difficult. Sorry for leaving such long post

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி ரத்னா...

நீங்கள் இதனை அரைத்த உடனே தோசை சூடலாம்.

விரும்பினால் வெரும் கொண்டைக்கடலை + அரிசியினை அரைத்த மாவினை புளிக்க வைத்த பிறகு செய்து பாருங்க நன்றாக இருக்கும். ஆனால் இதில் அரிசியினி அளவினை அதிகம் சேர்த்து கொண்டு கொண்டைக்கடலையினை குறைத்து கொள்ளவும் . அப்பொழுது தான் மாவு புளித்த பிறகு நன்றாக இருக்கும்.

உங்கள் விருப்பமான கீரையினை சேர்த்து செய்து பாருங்க...இதனை நான் பெரும்பாலும் காலை நேரத்திற்கு அல்லது மாலை ஸ்நாகிறாகக தான் செய்து இருக்கின்றேன்...

Rathna Rosy said...

Hi geetha,

Thanks for your quick response.
Sure I will make this dosa coming weekend!!

Related Posts Plugin for WordPress, Blogger...