ஈஸி முட்டை வறுவல்(Egg Fry)முட்டையினை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியமானது.


முட்டை வறுவலினை கலந்த சாதம், சாம்பார் , ரசம், குழம்புடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதனை சாலடுடன்(Salads) சேர்த்து சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும்..(ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்….)


அனவைரும் கண்டிப்பாக இந்த முட்டை வறுவலினை வீட்டில் செய்து இருப்போம்…ஆனால் இந்த முட்டை வறுவலின் தனிதன்மை---இதில் சோம்புதூள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து செய்தால் வித்தியசமான சுவையில் இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ வேகவைத்த முட்டை – 4
§ இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
§ சோம்புதூள் – 1/4 தே.கரண்டி
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ நல்லெண்ணெய் – 2 மேஜை கரண்டி
§ உப்பு – 1/2 தே.கரண்டி
செய்முறை :
v வேகவைத்த முட்டையினை தோல் நீக்கி இரண்டாக வெட்டி கொள்ளவும்.
v ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது + சோம்புதூள் + மஞ்சள்தூள் + மிளகாய் தூள் + உப்பு + 1 மேஜை.கரண்டி எண்ணெய் + 2 மேஜைகரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
v வெட்டிவைத்துள்ள முட்டையினை இதில் பிரட்டி 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
v தோசை கல்லினை காயவைத்து, ஊறவைத்துள்ள முட்டைகளை போட்டு அதன் மீது சிறிது நல்லெண்ணெய் ஊற்றி 2 நிமிடங்கள் வேகவிடவும்.
v முட்டைகளை திருப்பி போட்டு மேலும் 1 – 2 நிமிடங்கள் விடவும். சுவையாக முட்டை வறுவல் ரெடி.

கவனிக்க:
சில சமயம், இப்படி சமைப்பதால் முட்டை வெடிக்கும்.அதனால் முட்டையினை திருப்பி போட்டவுடன், ஒரு தட்டு போட்டுமுடி 1 – 2 நிமிடம் கழித்து அடுப்பினை நிறுத்திவிடவும்.
இஞ்சி பூண்டுவிழுதிற்கு பதிலாக நசுக்கிய பூண்டினை சேர்த்தலும் சுவையாக இருக்கும்.

17 comments:

sarusriraj said...

முட்டை வருவல் இந்த முரையில் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்

Shama Nagarajan said...

lovely different recipe.....tempting

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா. கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷாம ..

Pavithra said...

Mmm looks so tasty with ginger garlic paste cos i do the same but adding this paste sure it taste good will try this next time i do

கீதா ஆச்சல் said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் பவித்ரா...மிகவும் சுவையாக இருக்கும்.

Thamarai selvi said...

முட்டை வருவல் ரொம்ப டேஸ்டா இருந்தது கீதா!! ரொம்ப நன்றி!!

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி தாமரை...

Devi Meyyappan said...

very nice :) ... Unga Blog rombha nalla iruku!.. I'll try this sometime...

Navaneetha Krishnan R said...

We could prepare this egg recipe

Navaneetha Krishnan R said...

We could prepare this egg recipe

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்க Krishnan...

ismail khan said...

dear madam i have one doubt . afternoon lunch break 1 hour only so morning prepare egg ( mixing masala) and keep refrigerator and afternoon make fry ?

it taste same or else ?

ismail khan said...

dear madam i have one doubt . afternoon lunch break 1 hour only so morning prepare egg ( mixing masala) and keep refrigerator and afternoon make fry ?

it taste same or else ?

ismail khan said...

dear madam i have one doubt . afternoon lunch break 1 hour only so morning prepare egg ( mixing masala) and keep refrigerator and afternoon make fry ?

it taste same or else ?

vel murugan said...

good taste mam

selva pavi said...

super tasty receipe

Related Posts Plugin for WordPress, Blogger...