சுறா மீன் புட்டு (Fish Puttu)சுறா மீன் புட்டு மிகவும் பிரபலமானது. இது மிகவும் சுவையாக இருக்கும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 45 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ சுறா மீன் – 1/2 கிலோ
§ எண்ணெய் – 3 மேஜை கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
§ மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி + 1/4 தே.கரண்டி
பொடியாக வெட்டி கொள்ள:
§ பெரிய வெங்காயம் – 2
§ பூண்டு – 15 பல்
§ பச்சை மிளகாய் – 6
§ கருவேப்பில்லை – 5 இலை
§ கொத்தமல்லி – சிறிதளவு
§ இஞ்சி – 1 துண்டு
செய்முறை :
சுறாமீனை சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சுறாமீனை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.

சுறாமீன் நன்றாக வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவிட்டு, பிறகு அதனுடைய தோலினை நீக்கிவிட்டு மீனை உதிர்த்து கொள்ளவும்.

பொடியாக வெட்டி கொள்ள கொடுத்துள்ள பொருட்களை வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து பின் பூண்டு போட்டு நன்றாக 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு பச்சை மிளகாய் + கருவேப்பில்லை + வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பின், உதிர்த்து வைத்துள்ள சுறாமீன் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

கடைசியில் இஞ்சி + கொத்தமல்லி சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

சுவையான சுறாபுட்டு ரெடி.
கவனிக்க:
இந்த புட்டில், தண்ணீர் சிறிது கூட சேர்க்க கூடாது.
இதே போல Tilapia மீனில் செய்தாலும் நன்றாக இருக்கும்.

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆஹா.. அருமை.. இத தான் நான் தேடீட்டு இருந்தேன்.. நன்றி..

கீதா ஆச்சல் said...

//ஆஹா.. அருமை.. இத தான் நான் தேடீட்டு இருந்தேன்//...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி.

Saro said...

Fish puttu looks very tempting! Yummy...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி சரஸ்வதி. உங்களுக்கு அங்கு இந்த மீன் கிடைக்குமா. கிடைத்தால் செய்து பாருங்கள்.

இல்லையெனில் இதே மாதிரி tilapiaயாவில் செய்து பாருங்கள்..அருமையாக இருக்கும்.

manjula said...

looks beautiful

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி மஞ்சுளா...அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டுமாக்கும்...

Related Posts Plugin for WordPress, Blogger...