கீரை ஒட்ஸ் பொரியல் (Keerai Oats Poriyal)

எதாவது ஒரு வகை கீரையினை தினமும் சமையலில் சேர்த்து கொள்வதால் உடலிற்கு நிறைய சத்துகள் கிடைக்கின்றது.


அதிலும் கீரையுடன் ஒட்ஸ் சேர்வதால் கூடுதல் சத்துகள் கிடைக்கின்றது.
எங்க வீட்டில் அம்மா, கீரை பொரியல் செய்யும் பொழுது கடைசியில் பொரி அரிசியினை(அதாங்கவறுத்த அரிசியினை பொடித்து கொள்வது..) போட்டு கிளறிவாங்கமிகவும் சுவையாக இருக்கும்.


அதே மாதிரி, பொரி அரிசிக்கு பதிலாக ஒட்ஸுனை சேர்த்து செய்து உள்ளேன்.
அரிசிக்கு பதிலாக ஒட்ஸுனை சேர்ப்பதால், உடல் இளைக்க, வயதனவர்கள், டயபெடிக், என பலருக்கும் எற்ற நல்ல உணவு.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ கீரை – 1 கட்டு
§ ஒட்ஸ் – 1/2 கப்
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – தாளிக்க
§ பூண்டு – 2 பல்
§ காய்ந்த மிளகாய் – 2
§ உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v கீரை சுத்தம் செய்து பொடியாக வெட்டி கொள்ளவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கீரை + உப்பு சேர்த்து வதக்கி, தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
v ஒட்ஸினை ஒரு சிறிய கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
v மிக்ஸியில் பூண்டு + காய்ந்த மிளகாய் போட்டு பொடித்து கொள்ளவும். அத்துடன் ஒட்ஸ் சேர்த்து ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.
v கீரை நன்றாக வெந்தபிறகு, பொடித்த ஒட்ஸினை போட்டு மேலும் 1 நிமிடம் வதக்கவும்.

v சுவையான கீரை ஒட்ஸ் பொரியல் ரெடி.
கவனிக்க:
கீரை பொரியலுக்கு எப்பொழுதும் தண்ணீர் சேர்த்து வேகவைக்க தேவையில்லை. கீரையில் இருந்தே தண்ணீர் வெளிவரும்.


முருங்கைகீரை, அகத்திகீரை, தண்டுகீரை போன்றவற்றில் இந்த மாதிரி பொரியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

13 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்.. கலக்குங்க.. நல்ல டையட் உணவு..

PriyaRaj said...

Hi Geetha, this is my 1st visit here....Wow very happy to see a fully tamil blog .....Ur dishes looks Awesome...Keep on the good work....if time gets visit my blog tooo...

சாருஸ்ரீராஜ் said...

geetha , diet recepies super i will try it

Menaga Sathia said...

புதுசு புதுசா சொல்றீங்க,நல்லாயிருக்குப்பா.

GEETHA ACHAL said...

நன்றி ராஜ்...

GEETHA ACHAL said...

//Wow very happy to see a fully tamil blog .....Ur dishes looks Awesome...Keep on the good work//தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி ப்ரியாராஜ்

GEETHA ACHAL said...

//diet recepies super i will try it// கண்டிப்பாக செய்து பாருங்கள் சாரு அக்கா. மிகவும் சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

//புதுசு புதுசா சொல்றீங்க,நல்லாயிருக்குப்பா// நன்றி மேனகா. இப்ப டயடிங்கில் இருப்பதால் இப்படி வித்தியசமாக சமைக்கின்றேன்...

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ்பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

Shama Nagarajan said...

different combo..healthy too

சப்ராஸ் அபூ பக்கர் said...

இன்னக்கி தான் முதன் முதலா உங்கள் வலைக்குள் வந்திருக்கேன். சமையல் வாசனை பிரமாதம்.... வாழ்த்துக்கள்... இனி அடிக்கடி சுவைக்க வர்றதா உத்தேசம்....

http://safrasvfm.blogspot.com

Unknown said...

கீரை மிக்க நல்லது தான்.

நன்றிங்கோ.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி நட்புடன் ஜமால்.

Related Posts Plugin for WordPress, Blogger...