மைக்ரோவேவ் மைசூர் பாக் - Microwave Mysorepak

மைசூர்பாக்கா…யாருக்கு இப்போ இதனை செய்ய நேரம் இருக்கு…கூடவே இதனை கிளறுவதற்குள் கை வலியான வலி..என்னால் முடியாதுப்பா… என்று சாக்குகள் சொல்லாமல் இருக்கு..ஒரு முறை இந்த முறையில் செய்து பாருங்கள்…

அனைவரும் மிகவும் எளிதில் செய்ய கூடிய மைசூர்பாக்…வெறும் 5 நிமிடத்தில் மைக்ரோவேவில் மைசூர்பாக் ரெடி…
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கடலை மாவு – 1 கப்
· பொடித்த சக்கரை – 2 கப்
· நெய் – 1 கப்
· ஏலக்காய் – 2
· பால் – 2 மேஜை கரண்டி
செய்முறை :
v கடலை மாவினை வாசனை வரும் வரை கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து கொள்ளவும். இதனை கட்டியில்லாமல் சலித்து வைக்கவும். பாலில் ஏலக்காயினை பொடித்து போடவும்.
v மைக்ரோவேவ் பாத்திரத்தில் வறுத்த கடலை மாவு + நெய் சேர்த்து 1 நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும்.
v பிறகு பாத்திரத்தினை வெளியில் எடுத்து, அத்துடன், பொடித்த சக்கரை சேர்த்து நன்றாக கிளறி மேலும் 2 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைக்கவும்.
v அதன்பிறகு, திரும்பவும் பாத்திரத்தினை வெளியில் எடுத்து, பால் + ஏலக்காய் சேர்த்து அத்துடன் நன்றாக கலக்கி மேலும் 2 நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும்.
v இந்த கலவையினை வெளியில் எடுத்து, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தவும்.

v பிறகு விரும்பிய அளவில் துண்டுகளாக போடவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய மைசூர்பாக் ரெடி.

குறிப்பு :
இது Melting Mysorepak போல இல்லாமல் Good Old Fashioned MysorePak போல இருக்கும்.
கடலை மாவினை கண்டிப்பாக வறுத்து கொள்ளவும்.

13 comments:

Unknown said...

வாவ் பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஜா. நேரம் கிடைக்கும் பொழுது வீட்டில் செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும்.

Priya Suresh said...

Superb Geetha, very innovative...

Menaga Sathia said...

சூப்பர் கீதா,செய்வதற்க்கும் ரொம்ப ஈஸி போல.இதே முறையில் அடுப்பில் வைத்து செய்வதாக இருந்தால் செய்யலாம் தானே.பால் எதற்க்கு சேர்க்கிறோம் கீதா?

manjula said...

பார்த்தாலே சாபிடானும்போலே இருக்கு
கீதா

GEETHA ACHAL said...

செய்து பாருங்கள்..ப்ரியா..மிகவும் சுவையாக ஈஸியாக இருக்கும்.

Unknown said...

கீதா அசத்தல் போங்க,செய்து பார்க்கிறேன் டவுட் என்றால் ஓடி வரேன்..நன்றி கீதா ரொம்ப நாள் ஆசை செய்து சாப்பிடனும்னு..

GEETHA ACHAL said...

ஆமாம் மேனகா.இதனை செய்வது மிகவும் ஈஸி தான்.

இதில் பால் சேர்த்து இருப்பதற்கு காரணம், எலக்காயினை சேர்க்கும் பொழுது ஒரே இடத்தில் தங்கிவிடகூடாது..
இரண்டாவது, வெளியில் எடுக்கும் பொழுதே சிறிது கட்டியாக தான் இருக்கும். அதன் பின்பு உள்ளே மைக்ரோவேவில் வைக்கும் பொழுது, மேலும் சிறிது தண்ணீர் பதம் இருக்க வேண்டும்..அதறகாக தான் பாலினை சேர்க்க சொல்லி இருக்கின்றேன்...பால் இல்லை என்றால் தண்ணீரையினை கூட உபயோகிக்கலாம்.

GEETHA ACHAL said...

நன்றி மஞ்சுளா.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக டவுட் என்றால் சொல்லுங்க தாமரை...செய்து பாருங்கள்...நன்றாக வரும்..சந்தோஷ் குட்டிக்கு பிடிக்கும்..

shobana srinivasan said...

Hi Geetha,
I tried this recipe last weekend. Unfortunately, it became very liquid. I could not cut them into pieces. I used plain sugar without grinding it, will that make a difference and also i melted the ghee and mixed it with the kadalai maavu. will that make a difference.

Btw, very good site huh!!

GEETHA ACHAL said...

//I used plain sugar without grinding it, will that make a difference and also i melted the ghee and mixed it with the kadalai maavu. will that make a difference.//

கண்டிப்பாக சக்கரையினை பொடிக்காமல் சேர்த்தால் இருக்கலாம்.

சக்கரையினை பொடித்து தான் சேர்க்கவேண்டும்.

நெயினை உருக்கவேண்டாம்..அதனை அப்படியே கடலைமாவுடன் சேர்த்து கலக்கினால் போதுமானது.

கண்டிப்பாக இன்னொரு முறை செய்து பாருங்கள்...நிச்சயம நன்றாக வரும்.

Sudha said...

Geetha,

I just tried this and it turned out to be very powdery. I was not able to make pieces and just made small balls.

I just followed exact steps here :-(

How long we should fry besan?

Related Posts Plugin for WordPress, Blogger...