ஒட்ஸ் தோக்ளா (Oats Dokhla)

ஒட்ஸினை வைத்து பலசமையலினை செய்து இருக்கின்றோம்…ஒரு முறை தோக்ளா செய்து பார்ப்போம் என்பதன் முயற்சியே இந்த ஒட்ஸ் தோக்ளா..


தோக்ளா என்பது குஜாரத்தி மக்களின் உணவு..இதனை இட்லி வேகவைத்து போலவே வேகவைத்து சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டி, அதனை சட்னியுடன் பாரிமாறுவாங்க…


சமைக்க தேவைப்படும் நேரம்: 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ ஒட்ஸ் – 1 கப்
§ ரவை – 1 கப்
§ தயிர் – 1/2 கப்
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
§ பேக்கிங் பவுடர் – 1/2 தே.கரண்டி
பொடியாக நறுக்கி கொள்ளவும்:
§ பச்சை மிளகாய் – 2
§ கொத்தமல்லி – சிறிதளவு
கடைசியில் தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ கருவேப்பில்லை - 6 இலை
செய்முறை :
v ரவை + ஒட்ஸ் + தயிர் + மஞ்சள் தூள் + கொத்தமல்லி + பச்சை மிளகாய் + பேக்கிங் பவுடர் + தேவையான அளவு உப்பு + எலுமிச்சை சாறு + தண்ணீர் சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
v இதனை 1 – 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
v இந்த கலவையினை ஒரு அகலமான தட்டில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 10 – 12 நிமிடங்கள் வேகவைக்கவும்.

v தட்டில் ஊற்றி கலவை நன்றாக வெந்த பிறகு அதனை சிறிது நேரம் ஆறவிடவும்.

v பிறகு அதனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

v கடைசியில் , தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து தாளித்து , தோக்ளா மீது சேர்க்கவும்.
v சுவையான ஒட்ஸ் தோக்ளா ரெடி.

கவனிக்க:
மாவு கரைத்துவுடன் 1 - 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஒட்ஸ் சேர்த்து மாவினை கலந்து இருப்பதால் மாவு ஊறவைத்த பிறகு சிறிது கெட்டியாக இருக்கும். அதனால் கடைசியில் மாவினை கலக்கும் பொழுது, சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

12 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னண்ணமோ சொல்றீங்க.. செய்றீங்க..அசத்துங்க..

Ammu Madhu said...

sounds yummy..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

Malini's Signature said...

ஓட்ஸ் டோக்ளா நல்ல ஆரோகியமான ரெசிபி கண்டிப்பா பன்னிபாக்கனும்...

கீதா நான் இன்னிக்குதான் டோக்ளா தட்டுவாங்கனும்னு என்னவர்கிட்டே சொல்லிட்டு உங்க பிளாக் பார்த்தா இந்த ட்ரே சூப்பர் டெக்னிக்...இவரும் பார்த்துட்டார் ....என் ஸபிங் லிஸ்ட் இப்போ கட் :-)...நல்ல டெக்னிக் கீதா வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

என்னை எப்பொழுது தன்னுடைய கருத்துகள் மூலமாக ஊகவிக்கும் ராஜ் அண்ணவிற்கு நன்றி.

GEETHA ACHAL said...

செய்து பாருங்கள் அம்மு. நன்றாக இருக்கும். நன்றி.

GEETHA ACHAL said...

//நான் இன்னிக்குதான் டோக்ளா தட்டுவாங்கனும்னு என்னவர்கிட்டே சொல்லிட்டு உங்க பிளாக் பார்த்தா இந்த ட்ரே சூப்பர் டெக்னிக்...இவரும் பார்த்துட்டார் ....என் ஸபிங் லிஸ்ட் இப்போ கட்//

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா. நீங்கள் எழுதி இருப்பதை பார்த்த பிறகு மிகவும் மகிழ்ச்சி...உங்களுக்கு இது உபயோகமாக இருப்பதால் சந்தோசம்.

Menaga Sathia said...

ஒட்ஸ் டோக்ளா சூப்பர் கீதா.அலுமினியம் ட்ரேவில் ஊத்தி செய்த ஐடியா நல்லாயிருக்கு.

GEETHA ACHAL said...

//அலுமினியம் ட்ரேவில் ஊத்தி செய்த ஐடியா நல்லாயிருக்கு//
தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.

நேரம் கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள்.

Menaga Sathia said...

நேட்து இந்த ஒட்ஸ் டோக்ளா செய்தேன்,சூப்பராயிருந்தது.நன்றி கீதா!!

GEETHA ACHAL said...

செய்து பின்னுட்டம் கொடுத்து மேலும் பல சுவையான உணவுகளை கொடுக்க ஊக்கபடும் அனவைருக்கும் நன்றி..

மேனகா மிகவும் நன்றி.

Anonymous said...

VANAKUM. I AM KRISHNE REDDY HRISENKO, I LEARNT TO READ AND WRITE TAMIL AS A CHILD BUT NOBODY SPOKE TO ME SO I CANNOT UNDERSTAND WHAT I AM READING. PLEASE COULD YOU SEND ME THE OATS DOKHLA RECIPE IN ENGLISH.

VIENNA, AUSTRIA

GEETHA ACHAL said...

U Send me a mail to my mailid given in the top for contact...Thanks...I will send you the recipe in English...

Related Posts Plugin for WordPress, Blogger...