ஒட்ஸ் பால் பாயசம்(Oats Payasam)குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பாயசம்…எப்பொழுதும் சேமியா, அரிசி, பருப்பு சேர்த்து பாயசம் செய்வோம்…ஒட்ஸினை வைத்து ஒரு முறை இந்த பால் பாயசம் செய்து பாருங்கள்…பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு Fried Items, கொடுக்காமல் இப்படி சத்தான உணவினை கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பால் – 3 கப்
· ஒட்ஸ் – 1 கப்
· கண்டன்ஸ்டு மில்க்(Condensed Milk) – 1 சிறிய டின்
· முந்திரி. உலர்ந்த திரட்ஷை – சிறிதளவு
· ஏலக்காய் – 2
· நெய் – 3 தே.கரண்டி
செய்முறை :
v பாலினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிய தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
v இதற்கிடையில், ஒட்ஸ் + 1 தே.கரண்டி நெய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து தனியாக வைக்கவும்.

v முந்திரி + திரட்ஷையினை , நெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

v கொதித்து கொண்டு இருக்கும் பாலில், வறுத்த ஒட்ஸ் + கண்டன்ஸ்டு மில்க் + ஏலக்காய் + 1 தே.கரண்டி நெய் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

v கடைசியில் வறுத்தவைத்துள்ள முந்திரி + திரட்ஷையினை பாயசத்தில் சேர்த்து கலக்கவும்.

v சுவையான ஒட்ஸ் பால் பாயசம் ரெடி.
குறிப்பு :
கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பதால் சக்கரை தனியாக சேர்க்க தேவையில்லை… கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பதால் , மிகவும் சுவையாக பாலினை சுண்ட காய்ச்சி செய்தது போல இருக்கும். நமக்கு இதனால் பாயசம் செய்யும் நேரமும் மிச்சம்..
கண்டன்ஸ்டு மில்க் இல்லை என்றால், பாலினை சுண்ட காய்ச்சி ,தேவையான அளவு சக்கரை சேர்த்து பாயசம் செய்யவும்.

20 comments:

Mrs.Menagasathia said...

excellent geetha,very nice!!

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கும் நன்றி மேனகா...ஷிவானி குட்டிக்கு செய்து கொடுங்க...மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க...

ஹர்ஷினி அம்மா said...

ஓட்ஸ்ல் இவ்வளவு ரெசிபியா பாக்க பாக்க ஆசையா இருக்கு கீதா...இன்னும் அரிசி தட்டுபாடு வந்தால் பயபடவே தேவையில்லை போல இருக்கு :-)

இலா said...

Nice idea.. have you tried splenda instead of sugar?

கீதா ஆச்சல் said...

//ஓட்ஸ்ல் இவ்வளவு ரெசிபியா பாக்க பாக்க ஆசையா இருக்கு கீதா...இன்னும் அரிசி தட்டுபாடு வந்தால் பயபடவே தேவையில்லை போல இருக்கு//

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா...

இப்போ டயட்டிங்கில் இருப்பதால் அரிசியினை பார்த்தே 2 1/2 மாதம் ஆச்சு..

தினமும் பார்லி, ஒட்ஸ், பிரவுன் ரைஸ், பயறு வகைகளினை தான் சாப்பிடுரோம்...அதனால் தான் இப்படி எல்லாம் போர் அடிக்காமல் இருக்க ஒட்ஸ், பார்லியினை வைத்து நம்மூர் ஸ்டைலில் சமைத்து சாப்பிடுகின்றோம் ...

எதோ எடையும் நன்றாக் தான் குறைகின்றது...

கீதா ஆச்சல் said...

//have you tried splenda instead of sugar?//நான் இதுவரை splenda உபயோகித்தது இல்லை..
இந்த பாயசத்தில், Condensed Milkயினை தான் உபயோகித்து இருக்கின்றேன்..

Pavithra said...

Geetha i too make .. taste soo good and sometime for variation i add saffron too.

ஹர்ஷினி அம்மா said...

ஓ அப்படியா கீதா ...உங்க ரெசிபி எல்லாம் பாத்துட்டு டயட்லே இருக்கறது எனக்கு கொஞ்சம் கஷ்டம்பா

இலா splenda நான் எல்லா இனிப்புக்கும் உபயோகிப்பேன்... கடைசியா போட்டால் அதே சுவைதான்.

யோ வாய்ஸ் said...

பாயாசம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்..

கீதா ஆச்சல் said...

//ஓ அப்படியா கீதா ...உங்க ரெசிபி எல்லாம் பாத்துட்டு டயட்லே இருக்கறது எனக்கு கொஞ்சம் கஷ்டம்பா//
ஹர்ஷினி அம்மா...
முதலில் ஒட்ஸ், பார்லி இப்படி சாப்பிடுவது 1 - 2 நாட்கள் கஷ்டமா தான் இருக்கும்..பிறகு பழகிவிடும்...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா..

நட்புடன் ஜமால் said...

சூப்பர் ஐடியாங்க

நோன்பு திறந்துவிட்டு கூட இதை குடிக்கலாம் போல.

கீதா ஆச்சல் said...

செய்து பாருங்கள் யோகா..அம்மாகிட்ட சொல்லுங்க...

கீதா ஆச்சல் said...

செய்வது மிகவும் சுலபம்..கண்டிப்பாக செய்து பாருங்கள் ஜமால்.

கவிநயா said...

வெள்ளிக்கிழமைகளில் திரும்ப திரும்ப ஒரே பாயசமே செய்யறாப்ல இருக்கும்... இன்னிக்கு செய்திடறேன் :) மிக்க நன்றி.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவி...கண்டிப்பாக செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்...

Nawabjan said...

ஹலோ கீதா,

உங்கள் ஓட்ஸ் பாயசம் முயற்சி செய்தேன். நன்றாக வந்தது. நன்றி.

-நவாப்ஜான், துபாய்.

Anonymous said...

ஹலோ கீதா,

உங்கள் ஓட்ஸ் பாயசம் முயற்சி செய்தேன். நன்றாக வந்தது. நன்றி.

-நவாப்ஜான், துபாய்.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி நவாப்ஜான்..

கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன். நன்றி.

Anonymous said...

Dear Geetha

I tried this Oats payasam
its came very nice....my little son like it much

thanks you....

regards
sangeetha from Bahrain

Related Posts Plugin for WordPress, Blogger...