வெண்டைக்காய் பொரியல்(Okra Poriyal)

கொழகொழப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் இது… வெண்டைகாயில் குறைந்த அளவு கலோரிகலும், அதிக அளவு விட்டமின்ஸ், நார்சத்து, கல்சியம் போன்ற இருப்பதால் அனைவருக்கும் எற்ற நல்லதொரு உணவு.


வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.வெண்டைக்காய் சாப்பிடுதால் உடல் சூடினை குறைக்கின்றது. மிகவும் குளிர்ச்சி.
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· வெண்டைக்காய் – 1/4 கிலோ
· வெங்காயம் – 1
· தக்காளி – 1
· எண்ணெய் – 2 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
· தனியா தூள் – 1/2 தே.கரண்டி
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
கடைசியில் சேர்க்க :
· தேங்காய் துறுவல் – 1/4 கப் (விரும்பினால்)
· கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
v வெண்டைகாயினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம் + தக்காளியினை வெட்டிகொள்ளவும்.
v கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தது, வெண்டைக்காயினை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.

v பிறகு கொடுத்துள்ள தூள் வகைகள் + உப்பு சேர்த்து நன்றாக பிசுபிசுப்பு போகும் வரை வதக்கவும்.

v இதற்கிடையில், வேறு ஒரு கடாயில் மீதம் உள்ள 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் + தக்காளியினை ஒன்றின்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
v வெண்டைகாய் பிசுபிசுப்பு போய் 3/4 பாகம் வெந்து இருக்கும்.
v இப்பொழுது வதக்கிய வெண்டைக்காயினை, வெங்காயம் + தக்காளியுடன் சேர்த்து கிளறி வேகவிடவும். (உப்பு தேவை எனில் திரும்பவும் சேர்த்து கொள்ளவும்.)

v கடைசியில் தேங்காய் துறுவல் போட்டு கிளறி 2 நிமிடம் வேகவிடவும். அதன் பிறகு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
v சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி.

குறிப்பு :
முதலில் வெண்டைக்காயினை தனியாக வதக்குவதால் கொழகொழப்பு இல்லாமல் சுவையாக இருக்கும்.

14 comments:

நட்புடன் ஜமால் said...

கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தது, வெண்டைக்காயினை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.]]

வெண்டைக்காய்க்கு இதுதான் ரொம்ப முக்கிய மேட்டர் - அந்த வழ வழா கொழ கொழா போய்டும்

யோ வாய்ஸ் said...

இதெல்லாம் பார்த்து நானும் சமைக்க தொடங்கிடுவேனோ? இல்ல வேண்டாம் யாரையும் கஷ்ட படுத்த கூடாது இல்லையா..

Thamarai selvi said...

///கொழகொழப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் இது…///

இதுக்காக தான் செய்து பார்த்தேன்,வீட்டுல வெண்டைக்காயும் இருந்தது ஆனால் நான் பண்றதவிட டேஸ்ட்டும் சூப்பரா இருந்தது கீதா!!நன்றி!!

கீதா ஆச்சல் said...

ஆமாம், கடாய் சூடாக இருக்கும் பொழுது, வெண்டைக்காயினை வதக்கினால் கொழகொழப்பு அதிகமாக இருக்காது...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்

கீதா ஆச்சல் said...

//இதெல்லாம் பார்த்து நானும் சமைக்க தொடங்கிடுவேனோ? இல்ல வேண்டாம் யாரையும் கஷ்ட படுத்த கூடாது இல்லையா..//

சமையலினை தொடங்குங்கள் யோகா...

யாரும் சமைக்க தொடங்கும் பொழுது சூப்பராக சமைத்துவிடுவதில்லை...ஆனால் சமைக்க சமைக்க கண்டிப்பாக சூப்பராகிவிடுவோம்..

அப்புறம் என்ன, எல்லோரும் யோகா மாதிரி சூப்பராக யாரும் சமைக்க முடியாதுப்பா...என்ற அளவிற்கு பெயர் வாங்கிவிடுங்க...

கலக்குங்க...

கீதா ஆச்சல் said...

நன்றி தாமரை...செய்துவிட்டு பின்னுடம் அளித்து மேலும் நீங்கள் எப்பொழுதும் போல உற்சாகம் செய்கின்றிங்க...

சந்ரு said...

உங்கள் மற்றும் சத்தியாவின் சமையல் குறிப்புக்களைப் பார்த்து எனது அம்மாவை நான் விட்டபாடில்லை.... எல்லாவற்றையும் சமைத்துத்தர வேண்டும் என்று அடம் பிடித்து வெற்றி பெறுகின்றேன்...

தொடருங்கள்...

ஸ்வர்ணரேக்கா said...

அடடா... உங்க பதிவ வெள்ளிக்கிழமையே படிச்சிருக்கலாம்.. இன்னிக்கு காலைல தான் கொழகொழன்னு வெண்டைக்காய் பொரியல் செஞ்சேன்... சரி இனிமே உங்க டிப்ஸ் படி தான் செய்ய போறேன், கீதா...

கீதா ஆச்சல் said...

போங்க ஸ்வர்ணா...உங்களுக்காக வெஜ் சமையல் கொடுக்கும் பொழுது கரைக்டாக பார்க்கமாட்டுறிங்க...

பாரவயில்லை...விடுங்க...ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்...கண்டிப்பாக கொழகொழப்பாக இருக்காது...

கருத்துக்கு நன்றி ஸ்வர்ணா..

Anonymous said...

அத்தனையிம் அருமை

Geetha Achal said...

நன்றி அனானி....

Anonymous said...

plz visit

www.tamilnadudailynews.blogspot.com

Anonymous said...

இன்று நீங்கள் சொல்லியபடி வெண்டைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. நன்றி.கோகுல்

vijaykumar said...

Hi geetha,, all of ur recipe are super.I used to try it ..thank u., priyasirpi

Related Posts Plugin for WordPress, Blogger...