பன் ஸீயர்ட் சிக்கன் (Pan Seared Chicken)


Searing என்பது ஒரு பொருளினை அதிக தணலில் வேகவிடுவது…இப்படி வேகவிடுவதால் இதன் சுவை கூடுகின்றது..சிக்கனின் உட்புறத்தில் உள்ள தண்ணீர் தன்மை அதிகமாக வெளிவராமல் சுவையாக இருக்கும். (Maintain the moisture and seals in Juiciness of the Chicken).

பெரும்பாலும் Searing முறையினை ,பலரும் பலவிதமாக கடைபிடிக்கின்றனர்.சிக்கனை முதலில் Searing செய்து பிறகு வேகவிடுவது. இரண்டாவது முறையில் சிக்கன் 3/4 வெந்த பிறகு அதனை கடைசியில் இந்த முறையில் சமைப்பது. இதில் நான் தேர்ந்து எடுத்து இருப்பது இரண்டாவது செயல்முறையினை.

எப்பொழுதும் சிக்கனை மசாலாவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒருமுறை இந்த முறையில் செய்து பாருங்கள்….சிக்கனை மசாலா தடவி சிறிது நேரம் ஊறவைத்து பிறகு பனில் போட்டு முக்கால்பாகம் வெந்த பிறகு, கடைசியில் அதிக தணலில் வேகவிடவேண்டும்.

இப்படி அதிக தணிலில் வேகவைப்பதால் சிக்கனின் வெளிபுறத்தில் பிரவுனாகி(தீயிந்துவிடகூடாது…carmalization takes place) ஒரு விதசுவையினை கொடுகின்றது.


இப்படி சமைப்பதாக இருந்தால் எப்பொழுதும் பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டு சமைக்கவேண்டும். சிக்கன் நன்றாக வெந்த பிறகு அதனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.


தேவையான பொருட்கள் :
§ Boneless Skinless சிக்கன் Breast – 2
§ குடைமிளகாய் – 2
§ வெங்காயம் – 1
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ உப்பு – 1 தே.கரண்டி
சிக்கனுக்கு தேவையான மசாலா பொருட்கள் :
§ இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
§ எலுமிச்சை பழம் – 1
§ மிளகு தூள் – 1 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
§ சீரக தூள் – 1/2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு


செய்முறை :
v சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டி, அதன்பிறகு கொடுத்துள்ள மசாலா பொருட்களில் பிரட்டி 10 – 15 நிமிடம் ஊறவைக்கவும்.
v குடைமிளகாய் + வெங்காயத்தினை நீட்டாக பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
v பனில் ஊறவைத்த சிக்கனை போட்டு 3/4 (முக்கால்வாசி) வேகவிடவும். அதன் பிறகு தீயினை அதிகபடுத்தி அதனை முழுமையாக வேகவைக்கவும். (தீயிந்து போகாமல் பார்த்து கொள்ளவும்.)

v சிக்கனை நன்றாக வெந்த பிறகு அதனை எடுத்து தட்டில் வைக்கவும்.
v அதே பனில் குடைமிளகாய் + வெங்காயம் + எண்ணெய் சேர்த்து வதக்கவும்.

v பனில் உள்ள பொருட்கள் வதங்குவதற்குள் , சிக்கனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
v கடைசியில் குடைமிளகாய் சிறிது வதங்கியவுடன், வெட்டி வைத்துள்ள சிக்கன் சேர்த்து கலக்கவும். சுவையான ஸீயர்ட் சிக்கன் ரெடி.குறிப்பு :
குடைமிளகாய் + வெங்காயம் சேர்ப்பதால் சுவையாக இருக்கும். இதற்கு பதில் உங்கள் விருப்பதிற்கு எற்றவாறு நீங்கள் காய்கள் சேர்த்து கொள்ளலாம்.
இந்த சிக்கனை சாலடுகளில் சேர்த்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.

4 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹிம்ம்ம்ம்.. என்னமோ சொல்றீங்க.... செஞ்சு பாக்குறோம்..

Menaga Sathia said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!

GEETHA ACHAL said...

//ஹிம்ம்ம்ம்.. என்னமோ சொல்றீங்க.... செஞ்சு பாக்குறோம்.// கண்டிப்பாக செய்து பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

GEETHA ACHAL said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...