பிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)

எப்பொழுதும் அரிசிமாவு தோசை, கோதுமை மாவு தோசை என்று எல்லாம் சாப்பிட்டு போர் அடித்துவிட்டாதா…சுலபமாக 10 – 15 நிமிடங்களில் செய்ய கூடிய பிளைன் ஒட்ஸ் தோசையினை செய்து பாருங்கள்..

நிறைய சத்துகள் நிரம்பியது இந்த ஒட்ஸ் தோசை…வயதனவர்கள், டயபெட்டிக், உள்ளவர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது…இந்த தோசையினை செய்வதும் சுலபம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
· ஒட்ஸ் – 1 கப்
· உப்பு – 1/4 தே.கரண்டி
செய்முறை :
v ஒட்ஸினை, 2 கப் தண்ணீர் ஊற்றி 5 – 6 நிமிடங்கள் ஊறவிடவும்.(ஊறவைத்த தண்ணீரை அரைக்கும்பொழுது உபயோகித்து கொள்ளவும். ஒட்ஸினை கழுவ தேவையில்லை.)
v ஊறவைத்த ஒட்ஸினை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக மைய தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
v அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
v தோசை கல்லினை காயவைத்து தோசைகளாக ஊற்றவும்.

எளிதில் செய்ய கூடிய சுவையான ஒட்ஸ் தோசை ரெடி.

கவனிக்க :
ஒட்ஸினை பொடித்து தண்ணீர் ஊற்றி கலக்கி தோசை சுடுவதைவிட ஒட்ஸினை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு அரைத்து தோசை சுட்டால் , தோசை வார்க எளிதாக இருக்கும்.

30 comments:

நிலாமதி said...

இது புது வகை தோசையாக் இருக்கே செய்து பார்கிறேன். பதிவுக்கு நன்றி .நிலாமதி

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும் நன்றி நிலாமதி.

PriyaRaj said...

wow in oats u r giving sooo many items geetha.........very unique recipes......keep up th good work....

இலா said...

Super Geetha!! i like this one

GEETHA ACHAL said...

//wow in oats u r giving sooo many items geetha.........very unique recipes......keep up th good work....///தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா.

GEETHA ACHAL said...

நன்றி இலா...செய்து பாருங்கள்...

Unknown said...

புதுமையாக இருக்கே

ஆரோக்கியமானதும் கூட போல ...

சாருஸ்ரீராஜ் said...

geetha in oats different variety of recepies keep it up . if i do anything in oats or dishes my daughters are asking oh (enna innaiku netla iruntha edutha samayala) .. thank u for giving a variety of recepies

Unknown said...

First time here. u have wonderful recipes & tips.. thxs for sharing.. oats dosai looks yummy & perfect..

GEETHA ACHAL said...

//புதுமையாக இருக்கே

ஆரோக்கியமானதும் கூட போல // மிகவும் சந்தோசம்...

கண்டிப்பாக செய்து பாருங்கள் ஜமால்.

GEETHA ACHAL said...

//oats different variety of recepies keep it up . if i do anything in oats or dishes my daughters are asking oh (enna innaiku netla iruntha edutha samayala) ..//
மிகவும் நன்றி சாரு அக்கா..
குட்டி பொண்ணுகளுக்கு என் நன்றியினை சொல்லவும்...

குட்டி பொன்னுங்களுக்காக இன்றி அவர்களுக்கு விருப்பமான வேறு ஒரு குறிப்பினை கொடுக்கின்றேன்..

GEETHA ACHAL said...

// u have wonderful recipes & tips.. thxs for sharing.. oats dosai looks yummy & perfect..// தங்கள் வருகைக்கும் கருத்துகும் நன்றி ஸ்ரீகர்...அடிக்கடி இந்த பக்கம் வாங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

Thxx..
Today we will try this..

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் அண்ணா...தோசை எப்படி இருந்தது என்று சாப்பிட்டு வந்து சொல்ல வேண்டும்...

இலா said...

Geetha.. i liked it ..i made this for lunch... it is tasting so much like kothumai dosai.. i am a big fan of kothumai dosai.. i can eat 3 meals too... nice one.. Please post good carb recipes like this one...

GEETHA ACHAL said...

//i made this for lunch... it is tasting so much like kothumai dosai.. i am a big fan of kothumai dosai.. i can eat 3 meals too... nice one.. //

ஆமாம் இலா, இந்த தோசை கோதுமை தோசை மாதிரியே தான் இருக்கும்.

மிகவும் சுவையான சத்தான் தோசை...நன்றி இலா.

Menaga Sathia said...

இன்று இந்த ஒட்ஸ் தோசை செய்தேன் கீதா.எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு+சாம்பாருடன் சாப்பிட வெகு ஜோராயிருந்தது.கோதுமை தோசை கூட இந்த் ஒட்ஸ் தோசையிக்கு தோற்றுவிடும்.நன்றி உங்களுக்கு!!

GEETHA ACHAL said...

நன்றி மேனகா.

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

Anisha Yunus said...

கீதாக்கா,

ஆஸியாக்கவோட கத்தரிக்காய் புர்தாக்கும்(எங்க வீட்டுல இப்படித்தேன் சொல்வோம்) இந்த தோசைக்கும், அடிச்சுக்க ஆளே இல்லை. பேஷ் பேஷ்..செம செம காம்பினேஷன்...ரெம்ப ரெம்ப நன்றி

GEETHA ACHAL said...

நன்றிகள் பல அன்னு....

என்னுடைய சமையல் குறிப்புகளை செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது...

இன்னும் பல பயனுள்ள குறிப்புகள் வழங்க வேண்டும் என்று ஆர்வம் வருக்கின்றது...நன்றி...

Geetha said...

hi..can we add. ulondhu in this mixture..

GEETHA ACHAL said...

நன்றி கீதா...கண்டிப்பாக உளுத்து சேர்த்து செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

உளுத்தம்பருப்பு சேர்த்து குறிப்பும் கொடுத்து இருக்கின்றேன்..அதே மாதிரியும் செய்து பாருங்க...

Geetha said...

oh thanks . i wil try it.. interesting blog..

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்க கீதா..நன்றி...

Geetha said...

dosa is really nice.. superb breakfast :).and oats kollukattai also came out well.. thanks for healthy dishes.

GEETHA ACHAL said...

நன்றி கீதா...

Anonymous said...

I had some issues with dosa. When i started making the dosa it was very sticky and was not getting cooked

Romba valavalunu erundhudhu, can you please help dear

GEETHA ACHAL said...

ரொம்ப நன்றி அனானி. தோசை ரொம்பவும் stickyயாக இருப்பதற்கு காரணம் நன்றாக வேகாமல் இருப்பது தான்.

தோசை கல்லினை ரொம்பவும் காயவிடாமல் செய்தால் தோசை நன்றாக வரும். ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு நன்றாக வேகவிடவும்.

CoolBlues said...

Thanks geetha, ooothum bodae tawa la otiduchu. Let me try again

Anonymous said...

VERY NICE AND INNOVATIVE RECEIPS. USEFUL TO ALL. TIME AND ENERGY SAVING AND HEALTHY ASWELL. THANK YOU.

DAMAYA.

Related Posts Plugin for WordPress, Blogger...