சுரைக்காய் பச்சடி ( Surakai / BottleGourd )சுரைக்காயினை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவது உடலிற்கு நல்லது. உடல் சூடினை தடுக்க உதவுகின்றது.
சுரைக்காயில் அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் (C & B) இருக்கின்றது. இந்த காயினை சாப்பிடுவதால், Cholesterolயினை குறைக்க வழிவகுகின்றது.
சுரைக்காயினை துறுவி அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரினை தினமும் குடித்தால், Ulcer குணமடையும்.
சுரைக்காயினை பொரியல், சாம்பார், கூட்டு மட்டும் செய்யாமல், சுலபமாக செய்ய கூடிய பச்சடி இது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 – 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· சுரைக்காய் – 1 சிறியது
· தயிர் – 1 கப்
· உப்பு – தேவையான அளவு
· கொத்தமல்லி – சிறிதளவு
· பச்சை மிளகாய் – 2
செய்முறை :
v பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v சுரைக்காயினை தோல் நீக்கி, கேரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.
v துறுவிய சுரைக்காய் + தயிர் + உப்பு + கொத்தமல்லி + பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.
v சுவையான சுரைக்காய் பச்சடி ரெடி. இதனை கலந்த சாதம், சாப்பத்தி, பிரியாணி, புலாவ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

21 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க..

RAKS KITCHEN said...

Suraikaai thayir pachadi ,I have never tried,thanks for that recipe Geeta!

sarusriraj said...

Simple and healthy recipie.. keep it up

நட்புடன் ஜமால் said...

இதெல்லாம் அதிகம் சாப்பிட்டு பழகலை.

உடலுக்கு நல்லது என்று தெரியும்

தங்கமணி வரட்டும் செய்திடுவோம் ...

யோ வாய்ஸ் said...

சுரைக்காய் எல்லாம் நான் சாப்பிட மாட்டேனே! அது நல்லா இருக்குமா?

kino said...

ஹாய் கீதா சூப்பர்பா இருக்கும் போல சுரைக்காய் பச்சடி...செய்து பார்க்கிரொம்..... பச்சடி வைத்திருக்கும் அந்த பவுல்....இன்னும் சூப்பர்ப்.....

S.A. நவாஸுதீன் said...

அட ரொம்ப சிம்பிளா இருக்கே. நன்றி

Priya said...

Wonderful pachadi Geetha..its really healthy and damn good..

Mrs.Menagasathia said...

இந்த சுரைக்காய் பச்சடியினை நீங்கள் சொன்ன மாதிரிசெய்திருக்கேன்.வெள்ளரிக்காய் பச்சடி மாதிரியிருந்தது.நன்றி கீதா.

சிங்கக்குட்டி said...

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

Hema said...

My mother used to keep telling me about this.. I never tried it before.. She recently also urged me to do the Peerkangai Thol thuvayal.. Geetha You have a very healthy collection of recipes.. A blog to be treasured indeed

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்...

சௌசௌ தான் சென்னையில கிடைக்கும் அல்லவா...செய்து பாருங்கள்..

கீதா ஆச்சல் said...

//Suraikaai thayir pachadi ,I have never tried,thanks for that recipe Geeta//
கண்டிப்பாக செய்து பாருங்கள் ராஜேஸ்வரி...நன்றி

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா.

கீதா ஆச்சல் said...

//இதெல்லாம் அதிகம் சாப்பிட்டு பழகலை.

உடலுக்கு நல்லது என்று தெரியும்

தங்கமணி வரட்டும் செய்திடுவோம் //

கண்டிப்பாக உங்கள் தங்கமணி வந்தவுடன், செய்து பாருங்கள்..
நன்றி

கீதா ஆச்சல் said...

//சுரைக்காய் எல்லாம் நான் சாப்பிட மாட்டேனே! அது நல்லா இருக்குமா?//

சுரைக்காயில் இந்த பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்...அம்மாகிட்ட சொல்லி செய்ய சொல்லுங்கள்...

கீதா ஆச்சல் said...

// சூப்பர்பா இருக்கும் போல சுரைக்காய் பச்சடி...செய்து பார்க்கிரொம்..... பச்சடி வைத்திருக்கும் அந்த பவுல்....இன்னும் சூப்பர்ப்.//

மிகவும் நன்றி kino...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும்...

கீதா ஆச்சல் said...

//அட ரொம்ப சிம்பிளா இருக்கே.//தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸுதீன் ....கண்டிப்பாக செய்து பாருங்கள்..

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...செய்து பாருங்கள்..

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.அதுக்குள்ளே செய்தாச்சா...நன்றி..

கீதா ஆச்சல் said...

சிங்குட்டிக்கு என்னுடைய நன்றி...Followerஆனவுடனே எனக்கு விருது...மிகவும் நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...