டோஃபு எக் ஆம்லெட்(Tofu Egg Omelet)டோஃபுவில் அதிக அளவு Magnesium, இரும்பு சத்து, புரோட்டின், கல்சியம் சத்துகள் இருக்கின்றது. இதனை பன்னீருக்கு பதிலாக உபயோகிக்கலாம்.

சோயாவின் பாலில் இருந்து எடுக்கபடுவது தான் டோஃபு. டோஃபுவினை soft tofu, silken tofu, firm tofu, Extra firm tofu என பலவகைகளில் கிடைக்கின்றது.

firm tofu, Extra firm tofu போன்றவையினை கெட்டியாக இருக்கும். silken tofuவினை வைத்து நாம் ஜுஸ் அடிக்கும் பொழுது அத்துடன் சேர்த்து ஜுஸ் அடித்து குடிக்கலாம், அல்லது இது போல முட்டை ஆம்லெட் செய்யும் பொழுது சேர்த்து ஆம்லெட் செய்யலாம்…மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த டோஃபு எக் ஆம்லெட் அதிக புரோட்டின் நிரம்பிய காலை நேர உணவு.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 – 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· முட்டை – 4
· டோஃபு (Silken Tofu ) – 2 மேஜை கரண்டி
· வெங்காய தாள், குடைமிளகாய், மஷ்ரூம்பொடியாக நறுக்கியது சிறிதளவு
· உப்புதேவைக்கு
· மிளகு தூள் – 1/4 தே.கரண்டி
· பட்டர் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
v முட்டை + டோஃபுவினை சேர்த்து நன்றாக Fork வைத்து அடித்து கொள்ளவும்.
v இந்த கலவையுடன் நறுக்கிய வெஜிடேபுள்ஸ் +உப்பு + மிளகு தூள் சேர்த்து கலந்த்து கொள்ளவும்.

v பனினை காயவைத்து, பட்டரினை போட்டு அதன் மீது கலந்துவைத்துள்ள முட்டை கலவையினை ஊற்றவும்.

v ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, ஆம்லெட்டினை திருப்பி போட்டு வேகவிடவும்.

v சுவையான சத்தான , அதிக ப்ரோடின் நிரம்பிய காலை நேர உணவாக இந்த டோஃபு எக் ஆம்லெட் இருக்கும். விரும்பினால் ஆம்லெட், சூடாக இருக்கும் பொழுது அதன் மீது சீஸ் தூவி பரிமாறவும்.

குறிப்பு :
ஆம்லெட்டிற்கு , எப்பொழுதும் Silken Tofu தான் சிறிந்தது.

8 comments:

Unknown said...

டோஃபு - கேள்வி படாதது.

விளக்கமும் தந்து விட்டீர்கள் - நன்றி.

Unknown said...

tofo நான் அதிகம் பயன்படுத்தியதில்லை ஆனால் உங்கள் குறிபை பார்த்த பின்பு சாப்பிடனும் என்று ஆசைவந்துவிட்டது.. நன்றி உங்கள் குறிப்புக்கு

Pavithra Elangovan said...

Looks so yummy and delicious... wish to have right now.. great way to make people eat tofu.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்ம்ம்......

GEETHA ACHAL said...

டோஃபு இங்கு இருக்கும் பெரும்பாலுமான கிடைகளில் கிடைக்கும்.

பன்னிரை வாங்க வேண்டும் என்றால் நம்மூர் கடைகளுக்கு தான் போக வேண்டும்...

அதற்காக டோஃபுவினை பயன்படுத்த ஆரம்பித்தேன்...இப்பொழுது எல்லாம் பன்னீர் பக்கம் தலைவைப்பது இல்லை....

டோஃபு உடலிற்கு மிகவும் நல்லது..
உங்களுக்கு அங்கு டோஃபு கிடைத்தால் செய்து பாருங்கள்..

GEETHA ACHAL said...

//ofo நான் அதிகம் பயன்படுத்தியதில்லை ஆனால் உங்கள் குறிபை பார்த்த பின்பு சாப்பிடனும் என்று ஆசைவந்துவிட்டது.//
டோஃபுவினை வைத்து பன்னீர் சேர்க்கும் எந்த உணவிலும் பன்னீருக்கு பதிலாக டோஃபுவினை உபயோகிக்கலாம்.

டோஃபு பாலக், டோஃபு பட்டர் மசாலா என டோஃபுவினை வைத்து செய்தால் சுவையாக ஹெல்தியான சாயிஸ். இதற்கு Firm Tofu தான் சிறந்தது. கட்டியாக உடையாமல் இருக்கும்

நன்றி பாயிசா.

GEETHA ACHAL said...

//wish to have right now.. great way to make people eat tofu.//வாங்க பவி, எங்க வீட்டுக்கு...சுடான டோஃபு எக் ஆம்லெட் வித் டோஃபு ஸ்மூத்தி ரெடி.

வாங்க...எதிர்பாத்து கொண்டுஇருப்பேன்...

GEETHA ACHAL said...

நன்றி ராஜ்.

Related Posts Plugin for WordPress, Blogger...