சுக்கினி வீட் மஃப்பின் (Zucchini Wheat Muffin)


சுக்கினியில் அதிக அளவு magnesium மற்றும் விட்டமின் சத்துகள் நிறைந்துள்ளது. இதனை கோதுமை மாவுடன் சேர்த்து செய்து இருப்பதால், இது நல்ல சத்துள்ள மஃப்பின்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ கோதுமை மாவு – 1 கப்
§ மைதா மாவு – 1/4 கப்
§ மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி( விரும்பினால்)
§ உப்பு – 1/4 தே.கரண்டி
§ பேக்கிங் பவுடர் – 1/4 தே.கரண்டி
§ துறுவிய சுக்கினி – 1 கப்
§ முட்டை வெள்ளை கரு – 2
§ பால் – 1/2 கப்
செய்முறை :
v அவனை 400F யில் முற்சூடு செய்யவும்.
v பவுல் 1 : கோதுமை மாவு + மைதா மாவு + பேக்கிங் பவுடர் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து 2 – 3 முறை சலித்து கொள்ளவும்.
v பவுல் 2 : முட்டை வெள்ளை கரு + பால் + துறுவிய சுக்கினி சேர்த்து கலந்து கொள்ளவும்.
v இப்பொழுது பவுல் 2யில் கலந்துள்ள பொருட்களை பவுல் 1யில் உள்ள பொருட்களுடன் சேர்த்து கலக்கவும்.
v மஃப்பின் ட்ரேயில் கலந்த கலவையினை 3/4 பாகம் ஊற்றவும்.

v மஃப்பின் ட்ரேயினை முற்சூடு செய்த அவனில் 15 – 18 நிமிடங்கள் வைக்கவும்.

v சுவையான சுக்கினி வீட் மஃப்பின் ரெடி.

குறிப்பு :
குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இதில் மிளகாய் தூளிற்கு பதிலாக 1/4 கப் சக்கரை சேர்த்து கலந்து கொண்டு மஃப்பினை தயாரிக்கவும்.

10 comments:

Anonymous said...

தங்கமணி வந்த பின் முயற்சித்து பார்க்கின்றோம்


அப்படியே எத்தனை கலோரி என்ற தகவல்களுக்கும் கொடுங்களேன்

ஹர்ஷினி அம்மா - said...

சூப்பர் இதுவரை பனான மஃப்பின் மட்டும்தான் தெரியும்... அடுத்த முறை முயற்ச்சிக்குறேன். பெரியவர்களுக்கு சக்கரை சேர்க்க வேண்டாமா?

Mrs.Menagasathia said...

நல்லா வித்தியாசமான குறிப்பு கீதா.கலக்குறீங்க!!

நேசமித்ரன் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

What is This nga>

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால்.

கண்டிப்பாக கலோரியுடன் கூடிய சீக்கரத்தில் கொடுக்கவேண்டும் என்று தான் நினைத்து இருக்கின்றேன்.

கீதா ஆச்சல் said...

//சூப்பர் இதுவரை பனான மஃப்பின் மட்டும்தான் தெரியும்... அடுத்த முறை முயற்ச்சிக்குறேன். //
தங்கள் கருத்துக்கு நன்றி ஹர்ஷினி அம்மா.

கண்டிப்பாக செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
//பெரியவர்களுக்கு சக்கரை சேர்க்க வேண்டாமா?//
விரும்புபவர்கள் கண்டிப்பாக சேர்த்து கொள்ளலாம்.இப்பொழுது டயட்டில் இருப்பதால் இப்படி....

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி மேனகா.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கு நன்றி நேசமித்திரன்.

அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

கீதா ஆச்சல் said...

சுக்கினி என்பது ஒருவித காய். இதனை வைத்து செய்த கப்கேகுங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...