பலூன் திருவிழா( Balloon Festival)

நாங்கள் இன்று New Yorkயில் நடைப்பெற்ற பலூன் திருவிழாவிற்கு சென்ற பொழுது எடுத்த புகைபடங்கள் சில....உங்களுக்காக...


பார்லி லட்டு(Barley Laddu)


பார்லியில் செய்த லட்டு மிகவும் சுவையான சத்தான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி மாவு – 2 கப்
· சக்கரை – 3/4 கப்
· ஏலக்காய் – 2
· முந்திரி + திராட்சை – சிறிதளவு
· நெய் – 2 தே.கரண்டி + 2 தே.கரண்டி(முந்திரி, திராட்சையினை வறுக்க)
· பால் – 2 – 3 மேஜை கரண்டி
செய்முறை:
v பார்லி மாவினை சலித்து வைக்கவும். சக்கரை + ஏலக்காயினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
v கடாயில் நெய் ஊற்றி முந்திரி + திராட்சையினை வறுத்து கொள்ளவும்.
v ஒரு கடாயில் பார்லி மாவினை போட்டு சுமார் 5 – 6 நிமிடங்கள் சிறிய தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

v வறுத்த பார்லிமாவு + பொடித்த சக்கரையினை சேர்த்து கலக்கவும்.

v இதனுடன் வறுத்த முந்திரி + திராட்சை + மீதம் உள்ள நெய் + பால் சேர்த்து களிறவும்.

v இந்த கலவையினை சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.(விரும்பினால் ஒவ்வொரு உருண்டை பிடிக்கும் பொழுது சிறிது நெய் தடவி பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.)
v சுவையான சத்தான பார்லி லட்டு ரெடி.

குறிப்பு :
இந்த லட்டுவினை, சூடாக இருக்கும் போதே பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. கொஞ்சம் நேரம் ஆறியதும் நெய்யை கையில் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.
இதே போல கோதுமை மாவு, ஒட்ஸ் மாவு, கார்ன்பிளேஸ் பொடியில் செய்தாலும் மிகவும் சுவையாக சத்தான லட்டுவாக இருக்கும்.
டயபெட்டிக் உள்ளவர்கள் சுகர் ப்ரீ சக்கரையினை சேர்த்து செய்து சாப்பிடலாம்.

இந்த வாரம் நாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்இங்கு Upstate New Yorkயில், Apple Picking மிகவும் பிரபலம். ஆப்பிள் தோட்டத்திற்கு சென்று கட்டணம் செலுத்தி, ஆப்பிளினை பறிக்கலாம். இங்கே சில படங்களை இணைத்து இருக்கின்றேன்.


பார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu Recipe - Gramathu Unavu


பலரும் மறந்து போன உணவு பட்டியலில் இந்த கூழும் தனி இடத்தினை பிடித்து இருக்கின்றது.கூழ் மிகவும் சத்தான உணவு.கூழ் உடலிற்கு குளிர்ச்சி.


கூழ் செய்வது மிகவும் சுலபம்…பொதுவாக கூழினை அரிசியினை போட்டு செய்வாங்க..அதே சுவையுடன் பார்லியிலும் இருக்கின்றது.


அரிசி சேர்த்து செய்த கூழில், பாத்திரத்தின் மேல் பகுதி மற்றும் அடிபகுதியில் இருக்கும் கூழ் வரண்ட மாதிரி இருக்கும். அதனால் அதனை நீக்கிவிட்டு கூழினை கரைத்து சாப்பிடுவாங்க.


ஆனால், பார்லி போட்டு செய்யும் கூழில் அப்படி இல்லாமல், பாத்திரத்தின் மேல் பகுதி + அடிபகுதியில் இருக்கும் கூழிம் மிகவும் சுவையாக, வறண்டு போகாமல் இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 2 நாட்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி – 1 கப்
· கேழ்வரகு மாவு – 1 கப்
· உப்பு – 2 தே.கரண்டி
கூழ் கரைக்க :
· வெங்காயம் – 1 மிகவும் பொடியாக நறுக்கியது
· தயிர் – 1 கப்
செய்முறை :
v முதல் நாள் இரவு, கேழ்வரகு மாவினை 2 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இதனை அப்படியே வைத்து புளிக்கவிடவும்.
v மறுநாள் மதியம் அல்லது இரவு, பார்லி + 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு 6 – 7 விசில் வரும் வரை வேகவிடவும்.

v குக்கரில், பிரஸர் அடங்கியதும், முதல் நாள் இரவு கரைத்து வைத்துள்ள கேழ்வரகு கலவையினை இத்துடன் சேர்த்து வேகவிடவும்.

v சுமார் 15 – 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.

v இப்பொழுது கூழ் ரெடி. இதனை அப்படியே வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அல்லது மதியம் கூழினை கரைத்து கொள்ளவும்.

v கூழ் + வெங்காயம் + தயிர் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கூழினை கரைத்து கொள்ளவும்.

v சுவையான சத்தான கூழ் ரெடி.


அவரைக்காய் கொள்ளு உசிலி (Avaraikai Kollu Usili)

அவரைக்காயில் அதிக அளவு நார்சத்தும், சூடினை தணிக்கும் சக்தியும் உள்ளது. அவரைக்காயினை BP , டயபெட்டிக் உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது.
இந்த அவரைக்காய் கொள்ளு உசிலி மிகவும் சுவையாக இருக்கும்.


கொள்ளுவினை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· அவரைக்காய் – 1/4 கிலோ
· கொள்ளு – 1 கப்
· காய்ந்தமிளகாய் - 2
· உப்பு – 1/2 தே.கரண்டி (அவரைக்காய்க்கு)
·எண்ணெய் – 1 தே.கரண்டி (அவரைக்காய்க்கு)
முதலில் கொள்ளுடன் சேர்த்து தனியாக சமைக்க:
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டு
· வெங்காயம் – 1
· பச்சைமிளகாய் – 4
· கருவேப்பில்லை – 4 இலை
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v கொள்ளினை குறைந்தது 3 – 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். நன்றாக ஊறியபிறகு அதனை கழுவி, கொள்ளுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

v அவரைக்காயினை பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து பொடியாக வெட்டி கொள்ளவும்.
v கடாய் 1 : ஒரு நாண்ஸ்டிக் பனில், எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
v இதனுடன் அரைத்து வைத்துள்ள கொள்ளு + தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

v 10 நிமிடங்களில் கொள்ளு நன்றாக வெந்து உதிர்ந்து இருக்கும்.
v கடாய் 2 : இன்னொரு கடாயில், பொடியாக அரிந்து வைத்துள்ள அவரைக்காய் + உப்பு + 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து, சிறிய தீயில் வைத்து நன்றாக வேகவிடவும்.( அவரைக்காயினை வதக்கவும் பொழுது தண்ணீர் சேர்த்து வேகவைக்க கூடாது).

v கடாய் 1 : கொள்ளு நன்றாக வெந்து பின், வேகவைத்த அவரைக்காயினை கொள்ளுடன் சேர்த்து மேலும் 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.

v சுவையான சத்தான அவரைக்காய் கொள்ளு உசிலி ரெடி.

குறிப்பு :
அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், காரமணி, வாழைப்பூ போன்ற காய்களிலும் இதே போல செய்தால் சுவையாக இருக்கும்.
கொள்ளு புட்டு மீதம் இருந்தாலும், அத்துடன் காய்கள் சேர்த்து இப்படி செய்யலாம். கொள்ளு புட்டு குறிப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்.

ஒட்ஸ் தவலை அடை (Oats Thavalai Adai)
ஒட்ஸ் தவலை அடை மிகவும் சுவையாக இருக்கும். ஒட்ஸ் சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது.
ஊறவைக்க தேவையான நேரம் : குறைந்தது 2 - 3 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பிரவுன் ரைஸ் (அல்லது அரிசி ) – 1 கப்
· ஒட்ஸ் – 1/2 கப்
· கடலை பருப்பு – 1/4 கப்
· உளுத்தம்பருப்பு – 1/4 கப்
· துவரம் பருப்பு – 1/4 கப்
· காய்ந்த மிளகாய் – 3
· உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 4 இலை பொடியாக நறுக்கியது
செய்முறை :
v ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களில் அரிசி + துவரம்பருப்பு + கடலைபருப்பினை ஒரு கிண்ணத்தில் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பினை தனியாக வேறு ஒரு கிண்ணத்தில் ஊறவைக்கவும்.
v ஊறவைத்த பொருட்களை நன்றாக கழுவி கொள்ளவும். அரிசி + காய்ந்த மிளகாய் + துவரம் பருப்பு + கடலைபருப்பினை சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
v உளுத்தம்பருப்பினை மைய அரைத்து கொள்ளவும்.
v அரைத்த கலவையுடன் உப்பு + ஒட்ஸ் + சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.

v தோசைகல்லினை காயவைத்து, அடைகளாக ஊற்றவும்.
v ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு அடைகளை திருப்பி போட்டு வேகவிடவும்.

v சுவையான சத்தான ஒட்ஸ் தவலை அடை ரெடி. இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இந்த அடையில், தேங்காய் பல்லினை சேர்த்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

கொள்ளு கார அடை (Horsegram / Kollu Adai)கொள்ளினை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கொள்ளினை தினமும் உணவில் எதாவது ஒரு வகையில் சேர்த்து கொண்டால் நிச்சயம் எடை குறையும்.

கொள்ளு அதிக சூட்டினை எற்படுத்தும் என்பதால் கொள்ளினை சாப்பிடும் சமயம், மோர், தண்ணீர் போன்றவையினை அதிகம் குடிப்பது மிக நல்லது.

கொள்ளினை வைத்து செய்த அடை இது. மிகவும் சுவையாக காரசாரமாக இந்த அடை இருக்கும். காலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கொள்ளு – 2 கப்
· அரிசி – 1/4 கப்
· காய்ந்த மிளகாய் – 5
· உப்பு, எண்ணெய்தேவையான அளவு
தாளித்து சேர்க்க வேண்டியவை :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/4 தே.கரண்டி
· சோம்பு – 1/4 தே.கரண்டி
· உடைத்த உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
· வெங்காயம் – 1/2 பொடியாக நறுக்கியது
· இஞ்சிபொடியாக நறுக்கியது சிறிய துண்டு
· பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
v கொள்ளு + அரிசியினை சேர்த்து 4 – 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
v ஊறவைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு + தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.

v தோசை கல்லினை காயவைத்து, மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.

v ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, அடையினை திருப்பி போட்டு வேகவிடவும்.

v சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.

இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

கொண்டைகடலை கொழுக்கட்டை(Channa Kozhukattai)

கொண்டைகடலையில் எப்பொழுதும் சுண்டல், குழம்பு, சென்னா மசாலா என்று சமைத்து போர் அடித்துவிட்டதா…அப்ப இந்த கொண்டைகடலை கொழுக்கட்டை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்..
கொண்டைகடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிக நார்சத்து,புரோட்டின் நிறைந்தது. இதில் குறைந்த அளவு Saturated Fat & Cholesterol இருக்கின்றது.
இந்த கொழுக்கட்டையினை, குழம்பில் சேர்த்து உருண்டைகுழம்பு மாதிரியும் செய்யலாம். மிகவும் வித்தியசமாக இருக்கும்.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:

· வெள்ளை கொண்டைகடலை – 1 கப்
· வெங்காயம் – 1 சிறியது
· பச்சை மிளகாய் – 1
· இஞ்சி – சிறிய துண்டு
· கொத்தமல்லி – சிறிதளவு
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v கொண்டைகடலையினை குறைந்த்து 4 – 5 மணி நேரமாவது ஊறவைத்து கொள்ளவும்.
v வெங்காயம் + பச்சைமிளகாய் + கொத்தமல்லி + இஞ்சியினை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.(விரும்பினால் வதக்கவும்..இல்லையெனில் அப்படியே வதக்காமல் சேர்த்து கொள்ளவும்.)
v ஊறவைத்த கொண்டைகடலையினை கழுவி, தண்ணீர் நன்றாக வடித்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். (அரைக்கும்பொழுது தண்ணீர் சேர்க்க கூடாது)
v அரைத்த கொண்டைகடலையுடன், வதக்கிய பொருட்கள் +மஞ்சள் தூள் + கொத்தமல்லி + இஞ்சி + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

v இந்த கலவையினை, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

v இட்லி பாத்திரல், ஒரு தட்டில் உருண்டைகளை தனிதனியாக அடுக்கி, வேகவிடவும்.

v 10 – 15 நிமிடங்கள் கழித்து எடுத்து பார்த்தால் உருண்டைகள் நன்றாக வெந்து இருக்கும்.
v சுவையான சத்தான கொண்டைகடலை கொழுக்கட்டை ரெடி. இதனை மாலை நேர ஸ்நாக்காக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

கவனிக்க:
இட்லியினை வேகவைப்பது போல இதனை வேகவைக்க வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...