பார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu Recipe - Gramathu Unavu


பலரும் மறந்து போன உணவு பட்டியலில் இந்த கூழும் தனி இடத்தினை பிடித்து இருக்கின்றது.கூழ் மிகவும் சத்தான உணவு.கூழ் உடலிற்கு குளிர்ச்சி.


கூழ் செய்வது மிகவும் சுலபம்…பொதுவாக கூழினை அரிசியினை போட்டு செய்வாங்க..அதே சுவையுடன் பார்லியிலும் இருக்கின்றது.


அரிசி சேர்த்து செய்த கூழில், பாத்திரத்தின் மேல் பகுதி மற்றும் அடிபகுதியில் இருக்கும் கூழ் வரண்ட மாதிரி இருக்கும். அதனால் அதனை நீக்கிவிட்டு கூழினை கரைத்து சாப்பிடுவாங்க.


ஆனால், பார்லி போட்டு செய்யும் கூழில் அப்படி இல்லாமல், பாத்திரத்தின் மேல் பகுதி + அடிபகுதியில் இருக்கும் கூழிம் மிகவும் சுவையாக, வறண்டு போகாமல் இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 2 நாட்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி – 1 கப்
· கேழ்வரகு மாவு – 1 கப்
· உப்பு – 2 தே.கரண்டி
கூழ் கரைக்க :
· வெங்காயம் – 1 மிகவும் பொடியாக நறுக்கியது
· தயிர் – 1 கப்
செய்முறை :
v முதல் நாள் இரவு, கேழ்வரகு மாவினை 2 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இதனை அப்படியே வைத்து புளிக்கவிடவும்.
v மறுநாள் மதியம் அல்லது இரவு, பார்லி + 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு 6 – 7 விசில் வரும் வரை வேகவிடவும்.

v குக்கரில், பிரஸர் அடங்கியதும், முதல் நாள் இரவு கரைத்து வைத்துள்ள கேழ்வரகு கலவையினை இத்துடன் சேர்த்து வேகவிடவும்.

v சுமார் 15 – 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.

v இப்பொழுது கூழ் ரெடி. இதனை அப்படியே வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அல்லது மதியம் கூழினை கரைத்து கொள்ளவும்.

v கூழ் + வெங்காயம் + தயிர் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கூழினை கரைத்து கொள்ளவும்.

v சுவையான சத்தான கூழ் ரெடி.


22 comments:

En Samaiyal said...

Kuzhul romba nalla eruku Geetha....Eppavay kudikanum polay eruku...i have never tasted this..

Thamarai selvi said...

நிஜமாவே மறந்துபோன உணவுதான்,எங்க அம்மா மோர்ல கரைப்பாங்க நீங்க தயிர்னு சொல்லி இருக்கீங்க...ஆனால் நான் தான் சாப்பிட்டதே இல்ல,இப்போ சாப்பிடனும் போல இருக்கு ஆனால் கிடைக்கல..ஹா ஹா இதுதான் நேரம் என்பதோ? அடுத்த வாரத்துல ஒரு நாள் ட்ரை பண்றேன்..நன்றி கீதா!!அசத்திட்டீங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க....

sarusriraj said...

கீதா கூழ் சூப்பர் , நான் சாதம் போட்டு தான் செய்வேன் பார்லி போட்டு ட்ரை பண்ணி பார்க்கிறேன் , நேற்று கூட எங்க வீட்ல கூழ் தான்.

Hindu Marriages In India said...

நல்ல ரெசிபி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா..

வாங்க எங்களுடைய வீட்டிற்கு, உங்களுக்கும் சேர்த்து கூழ் செய்து இருக்கின்றேன்.

நன்றி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி தாமரை...

எங்கள் வீட்டில் தயிர் சேர்த்து தான் தாமரை செய்வாங்க...

இதனை அரிசி சேர்த்து தான் செய்வாங்க..

எங்களுக்காக அம்மாவிடம் சொல்லி பார்லியினை போட்டு செய்தேன்.

மிகவும் சூப்பராக இருந்தது...

Geetha Achal said...

ராஜ், செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..

என்ன ரொம்ப நாளாக ப்ளாக் பக்கமே பார்க்க முடியவில்லை...எப்படி இருக்கின்றிங்க..

Geetha Achal said...

ஆமாம் சாரு அக்கா, இதனை அரிசி போட்டு தான் செய்வாங்க..

நான் தான் இதனை பார்லி சேர்த்து செய்தேன்..அரிசியில் செய்தால் எப்படி இருக்குமோ..அதே சுவையில் தான் பார்லியிலும் இருந்தது..

கண்டிப்பாக செய்து பாருங்கள்.

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

sarusriraj said...

கீதா அம்மா வந்தவுடன் நீங்கள் சமையலுக்கு ரெஸ்ட் கொடுத்தாச்சா ..

Divya Vikram said...

Amma ithu adikadi pannuvaanga dinnerku. Nice recipe Geetha.

Mrs.Menagasathia said...

மறந்து போன உணவை ஞாபகபடுத்திட்டீங்க கீதா.சூப்பரா இருக்கு.ஒரு கப் ப்ளீஸ்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி திவ்யா...நேரம் கிடைக்கும்பொழுது செய்து பாருங்கள்...மிகவும் சுவையாக இருக்கும்.

Geetha Achal said...

//மறந்து போன உணவை ஞாபகபடுத்திட்டீங்க கீதா.சூப்பரா இருக்கு.ஒரு கப் ப்ளீஸ்//

நன்றி மேனகா...

அம்மா வந்துவுடன் எனக்கு இது ஞாபகம் வந்துவிட்டது....

Geetha Achal said...

அப்படி எல்லாம் இல்லை சாரு அக்கா....அம்மாவுக்கு தான் ரெஸ்ட் கொடுக்கலாம் என்று பார்த்தால் அம்மா...உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கவே மாட்டேன் என்கின்றாங்க...எதாவது ஒரு வேலையினை செய்றாங்க...

அது தான் அம்மா என்ற வார்தைக்கே ஸ்பெஷல்.

Priya said...

entha kozl naan pregnant ah eruntappa sapten..vayithil kulanthai sutri ulla neerai athigapaduthum..appa than kulanthai safe ah erukum..thanks for reminding this barley kozl

Geetha Achal said...

//entha kozl naan pregnant ah eruntappa sapten..vayithil kulanthai sutri ulla neerai athigapaduthum..appa than kulanthai safe ah erukum..thanks for reminding this barley kozl//

மிகவும் நல்ல தகவல்...நன்றி ப்ரியா.

Pavithra said...

Wow I love this kozh so much but never tried with barely ... I bought a packet last week will try this for sure..

Pavithra said...

Wow I love this kozh so much ... but never tried adding barley will try out this for sure. Thanks dear.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா...ஆமாம் பவித்ரா, இதனை அரிசி போட்டு தான் செய்வாங்க...நான் தான் மறுதலுக்காக பார்லியினை நன்றாக குழைய வேகவைத்து செய்தேன்...சரி சுப்பராக இருந்தது...

கண்டிப்பாக செய்து பாருங்க....நன்றாக இருக்கும்...பார்லியிலும் அதே சுவையிலே காணப்படும்...

vijaya kumar said...

I am so much supera iruku ethalam anaivaru maranthu poidanga

Related Posts Plugin for WordPress, Blogger...