பார்லி லட்டு(Barley Laddu)


பார்லியில் செய்த லட்டு மிகவும் சுவையான சத்தான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி மாவு – 2 கப்
· சக்கரை – 3/4 கப்
· ஏலக்காய் – 2
· முந்திரி + திராட்சை – சிறிதளவு
· நெய் – 2 தே.கரண்டி + 2 தே.கரண்டி(முந்திரி, திராட்சையினை வறுக்க)
· பால் – 2 – 3 மேஜை கரண்டி
செய்முறை:
v பார்லி மாவினை சலித்து வைக்கவும். சக்கரை + ஏலக்காயினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
v கடாயில் நெய் ஊற்றி முந்திரி + திராட்சையினை வறுத்து கொள்ளவும்.
v ஒரு கடாயில் பார்லி மாவினை போட்டு சுமார் 5 – 6 நிமிடங்கள் சிறிய தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

v வறுத்த பார்லிமாவு + பொடித்த சக்கரையினை சேர்த்து கலக்கவும்.

v இதனுடன் வறுத்த முந்திரி + திராட்சை + மீதம் உள்ள நெய் + பால் சேர்த்து களிறவும்.

v இந்த கலவையினை சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.(விரும்பினால் ஒவ்வொரு உருண்டை பிடிக்கும் பொழுது சிறிது நெய் தடவி பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.)
v சுவையான சத்தான பார்லி லட்டு ரெடி.

குறிப்பு :
இந்த லட்டுவினை, சூடாக இருக்கும் போதே பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. கொஞ்சம் நேரம் ஆறியதும் நெய்யை கையில் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.
இதே போல கோதுமை மாவு, ஒட்ஸ் மாவு, கார்ன்பிளேஸ் பொடியில் செய்தாலும் மிகவும் சுவையாக சத்தான லட்டுவாக இருக்கும்.
டயபெட்டிக் உள்ளவர்கள் சுகர் ப்ரீ சக்கரையினை சேர்த்து செய்து சாப்பிடலாம்.

22 comments:

Sanghi said...

Delicious dear.. you can send this to my FIL-ghee sweets event dear. check my blog for details.

Divya Vikram said...

Barley laddoo looks yummy. Havent heard of this before. Sounds like a healthy dessert..

Sanghi said...

Hi dear.. My entry is in poll for 'SoupnJuice' event dear, if you like my entry pls do vote for me at http://momrecipies.blogspot.com/2009/09/soup-n-juice-event-poll.html

ஹர்ஷினி அம்மா said...

சூப்பர் கீதா... ஊருலே அரிசி மாவுலே செய்வாங்கலே அந்த லட்டு மாதிரியே இருக்கு... இதுவும் ஒரு நல்ல ரெசிபி :-)

Pavithra said...

aha ore barley products ... parkeve rhomba nalla irukku and udambukku nallathum kooda.... kandepaga seidhu parkiren.

Nithya said...

Super. Neenga yenna pannalum yekkachaka healthy ah iruku :)

Geetha Achal said...

கண்டிப்பாக கலந்து கொள்ள ஆசையாக தான் இருக்கின்றது சங்கீ..

Geetha Achal said...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..சங்கீ...நன்றி

Geetha Achal said...

//Barley laddoo looks yummy. Havent heard of this before. Sounds like a healthy dessert..//

மிகவும் நன்றி திவ்யா...

நேற்று அம்மா நவராத்திரி 9 நாட்களுக்கும் எதாவது ஒரு சுண்டல், ஸ்விட், கலந்த சாதம் என்று செய்வாங்க...

அதனால் நேற்று எலுமிச்சை சாதம், கடலைபருப்பு சுண்டல், சத்துமாவு வைக்கவேண்டும் என்று சொன்னாங்க...சரி சத்து மாவு செய்வதை விட இப்படி பார்லியில் லட்டு செய்யலாம்...என்று தோன்றிய தீடீர் ஐடியா...தான் இப்படி எல்லாம்..

பார்லியில் இது தான் முதல் முறையாக செய்தேன்...இதே போல அடிக்கடி கோதுமை மாவு, ஒட்ஸில் எல்லாம் செய்து இருக்கின்றேன்...சூப்பராக இருக்கும்...

சாமி கும்பிட்டவுடன் எல்லாம் காலி...மிகவும் சூப்பராக இருந்தது...

Geetha Achal said...

//சூப்பர் கீதா... ஊருலே அரிசி மாவுலே செய்வாங்கலே அந்த லட்டு மாதிரியே இருக்கு... இதுவும் ஒரு நல்ல ரெசிபி :-)//

நன்றி ஹர்ஷினி அம்மா...ஆமாம் ஹர்ஷினி அம்மா...டேஸ்டும் மிகவும் சூப்பராக அதே போல இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

Geetha Achal said...

//aha ore barley products ... parkeve rhomba nalla irukku and udambukku nallathum kooda.... kandepaga seidhu parkiren.//

நன்றி பவித்ரா...

கடந்த முன்று மாதமாக டயட்டிங்கில் இருப்பதால் தான் இப்படி எல்லாம்...பார்லியில் நார்சத்து அதிகாமாக இருப்பதால் அதனை அரிசிக்கு பதிலாக உணவில் சேர்த்து கொள்கிறேன்...

Geetha Achal said...

//Super. Neenga yenna pannalum yekkachaka healthy ah iruku :)//

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நித்யா...

அன்புடன் மலிக்கா said...

கீதா லட்டு சூப்பர் பார்சலில் ரெண்டு அனுப்புங்கப்பா

Priya said...

Very creative laddoo Geetha...azhaga irruku barley ladoos..will try out soon..

kanchana Radhakrishnan said...

good receipe.

Mrs.Menagasathia said...

good&healthy nice recipe!!

Valarmathi said...

Wow Geetha u always rock preparing healthy dishes and barley laddo romba nalla irukuu.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி மலிக்கா அக்கா...எப்படி இருக்கின்றிங்க...அடிக்கடி இந்த பக்கம் வாங்க அக்கா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...

கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் அருமையான சத்தான லட்டு..

Geetha Achal said...

நன்றி கஞ்சனா.

Geetha Achal said...

நன்றி மேனகா.

Geetha Achal said...

//Wow Geetha u always rock preparing healthy dishes and barley laddo romba nalla irukuu.//
நன்றி வளர்மதி...

Related Posts Plugin for WordPress, Blogger...