முட்டைகோஸ் துவையல் (Cabbage Thuvayal)முட்டைகோஸில் அதிக அளவு விட்டமின்ஸ் (Vitamins C, K, B), நார்சத்து மற்றும் குறைந்த அளவு Cholestrol காணப்படுகின்றது. முட்டைகோஸினை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

முட்டைகோஸினை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட சிறந்தது.

பொதுவாக முட்டைகோஸினை வைத்து சாலட், சட்னி, பொரியல், கூட்டு என்று செய்வோம்…கொஞ்சம் வித்தியசமாக, இந்த துவையலினை செய்து பாருங்கள்…சுவையாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

· முட்டைகோஸ் – 1/4 கிலோ

· காய்ந்த மிளகாய் – 3

· தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி

· உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி

· வடகம் – 1 தே.கரண்டி

· புளிசிறிய துண்டு

· உப்பு - தேவையான அளவு

· எண்ணெய் – 1 தே.கரண்டி

செய்முறை :

v முட்டைகோஸினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

v கடாயில் எண்ணெய் ஊற்றி வடகம் தாளித்து தனியாக வைக்கவும். பிறகு கடாயில், உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு + காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

v அதன்பின், தேங்காய் துறுவலினையும் சிறிது வதக்கி தனியாக வைக்கவும். முட்டைகோஸினை கடாயில் போட்டு நன்றாக வதக்கவும்.

v வதக்கி வைத்த அனைத்து பொருட்களையும் 5 நிமிடங்கள் ஆறவைத்து, பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்கள் + புளி + உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

v சுவையான சத்தான முட்டைகோஸ் துவையல் ரெடி.

குறிப்பு :

வடகம் இல்லை எனில், 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி 1/4 தே.கரண்டி கடுகு + 1/2 தே.கரண்டி சீரகம் + 1/4 தே.கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

33 comments:

PriyaRaj said...

Goss thuvayal enaku puthusu ......romba vithyaasama nalla eruku Geetha...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்கள்..சுவையாக இருக்கும். நன்றி

Sanghi said...

new dish to me.. dont like cabbage more, anyway will give a try dear!

சாருஸ்ரீராஜ் said...

கீதா வித்யாசமான துவையல் செய்து பார்து விட்டு சொல்கிறேன் (என்னை பெரிய சமையல் நிபுணர் ஆக்கிடுவிங்க போல).... ஹா ஹா ஹா...

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆஹா

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் sanghi.. மிகவும் சுவையாக வித்தியசமாக இருக்கும். தங்கள் கருத்துக்கு நன்றி.

GEETHA ACHAL said...

//கீதா வித்யாசமான துவையல் செய்து பார்து விட்டு சொல்கிறேன் (என்னை பெரிய சமையல் நிபுணர் ஆக்கிடுவிங்க போல).... ஹா ஹா ஹா.//

அக்கா, நீங்கள் எல்லாம் எற்கனவே பெரிய சமையல் நிபுணர் தான்...நான் எல்லாம் இப்ப தானே கத்துகுட்டி...எதோ சமையலில் சிறிது ஆர்வம் அதிகம் அவ்வளவு தான்...

திருமணத்திற்கு முன் அம்மா வகைவகை செய்து கொடுப்பாங்க...அப்புறம் திருமணத்திற்கு பிறகு எதோ என் கணவருக்கு கொஞ்சம் நல்லாவே சமைக்க தெரிந்ததால் அவரிடம் இருந்து கற்று கொண்டது... அவர் தான் என்னுடைய சமையல் குரு ...இப்போ அவருக்கு சமையலே மறந்து போச்சு என்பது வேறு விஷயம்...

என்னத சொல்ல...அப்புறம் சமையலில் எப்படியோ ஆர்வம் வந்து இப்படி எல்லாம்...நடக்குது...

GEETHA ACHAL said...

நன்றி யோகா..

Shama Nagarajan said...

different yummy recipe...looks perfect

Menaga Sathia said...

சூப்பர் போங்க.நிச்சயம் அடுத்தமுறை செய்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

கீதா சமையல் நிபுணர் எல்லாம் கிடையாது , வழக்கம் போல் குழம்பு , பொரியல் , வருவல், ஸ்னாக்ஸ் என்றால் முறுக்கு, ரிப்பன் பக்கோடா , என்றிருந்த என்னை வித வித மாக சமைக்க தூண்டியது உங்கள் பிளாக் மற்றும் மேனகா அதனால் நீங்கள் தான் குரு

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமைங்க.. நன்றி.. இதுவும் நல்ல டயட் ரெசிபி தான்!!!

Menaga Sathia said...

see this link
http://sashiga.blogspot.com/2009/09/blog-post_7864.html

PriyaRaj said...

Ungal karuthuku rombu nandri Geetha.....iam happy to remind about ur mom's recipes in my space ......neenga enna romba puzhkalureenga pa.....u guys r always encouraging me .....Happy & safe journey for ur Mom...

Unknown said...

சூப்பரு


எந்த ப்லாக்கிலோ ஒருவாட்டி இதை பற்றி பின்னூட்டியிருந்தேன் (சாப்பிட்டதாக)

இதையும் செய்து பார்த்திடுவோம்.

Unknown said...

thuvayal looks perfect. first here and you have a nice recipe collection. visit mine if you get a chance. http://iyercooks.blogspot.com

Porkodi (பொற்கொடி) said...

idhai edhu kooda sapidanum / sapitta nalla irukum geetha?

Shobana senthilkumar said...

Enna geetha....dailyum kalakirenga...gabbage thovayall...puthusa irruku try pannanum:)

dsdsds said...

thuvayal nalla irukku geetha.. idly chappathikku thotukka supera irukkum.. ithu ennakku romba puthusu.. romba innovativea neriya dishes podaringa.. i would love to follow you

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா. கண்டிப்பாக செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா. கண்டிப்பாக செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

நன்றி சாருஅக்கா.

GEETHA ACHAL said...

நன்றி ராஜ் அண்ணா...நான் தான் உங்களுக்கு கிடைக்கும் காயில் டயட் ரெசிபி கொடுக்கின்றேன்...நீங்க செஞ்சு பார்க்குறேன் என்று சொல்லிகின்றிங்க...ஆனா செய்றது தான் இல்லை...

GEETHA ACHAL said...

நன்றி மேனகா.

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால். கண்டிப்பாக செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வித்யா.

கண்டிப்பாக செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.

உங்களுடைய ப்ளாக் பார்த்தேன்...மிகவும் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள். நன்றி

GEETHA ACHAL said...

//dhai edhu kooda sapidanum / sapitta nalla irukum geetha?//
இதனை இட்லி, தோசை, தயிர் சாதம், கலந்த சாதம் அல்லது வெரும் வெள்ளை சாதத்தில் பிசைந்து சாப்பிடால் இன்னும் சுவையாக இருக்கும்.

தங்கள் கருத்துக்கு நன்றி பொற்கொடி.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் ஹேமா. வித்தியசமாக சுவையாக இருக்கும்.

நன்றி ஹேமா.

GEETHA ACHAL said...

//dailyum kalakirenga...gabbage thovayall...puthusa irruku try pannanum:)//நன்றி ஷோபனா.

கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றாக இருக்கும். நன்றி

Sujatha said...

My first time here, and love your blog! Nice effort to host your blog in tamil! I wish I had the tamil fonts to type this comment in tamil! And you have a fabulous collection of recipes too.. Keep it going! I will stop by often..

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சுஜாதா..

//Nice effort to host your blog in tamil! I wish I had the tamil fonts to type this comment in tamil! And you have a fabulous collection of recipes too.. Keep it going! //மிகவும் நன்றி..

கண்டிப்பாக இந்த ப்ளாக் பக்கம் அடிக்கடி வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன். நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...