ஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)குடைமிளகாயில் அதிக அளவு விட்டமின்ஸ் (Vitamin C & A) உள்ளது. குடைமிளகாயில் பச்சை, மஞ்சள் , சிவப்பு என்று நிறங்களில் காணப்படும்.
இதில் பெரும்பாலும் அனைவரும் சாப்பிடுவது பச்சை நிறகுடைமிளகாயினை தான். பச்சை நிறகுடைமிளகாயில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது.
பச்சைநிறத்தினை விட மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குடைமிளகாயினில் அதிக சத்துகள் காணப்படுகின்றது. டயபெட்டிக் உள்ளவர்கள் குடைமிளகாயினை சாப்பிடுவது நல்லது. அதிலும் சிவப்பு நிறகுடைமிளகாய் மிக நல்லது. அதில் குறைந்த அளவு GI இருக்கின்றது.
அனைவரும் மிகவும் எளிதில் செய்ய கூடிய பெரியல் இது. குடைமிளகாயினை அதிகமாக வேகவிட தேவையில்லை…அப்படி செய்தால் குடைமிளகாயில் உள்ள crunchiness காணாமல் போய்விடும்.
இதனை தோசை, சப்பாத்தி, சாதம் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· குடைமிளகாய் – 2
· வெங்காயதாள் – 2
· உப்புதேவையான அளவு
தாளிக்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகுதாளிக்க
· உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
· காய்ந்த மிளகாய் – 1
செய்முறை :
v குடைமிளகாய் + வெங்காயதாளினை பொடியாக வெட்டி கொள்ளவும்.

v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, குடைமிளகாய் + வெங்காயதாள் + உப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.
v சுவையான, எளிதில் செய்ய கூடிய குடைமிளகாய் பொரியல் ரெடி.

குறிப்பு :
விரும்பினால், இந்த பொரியலுடன் கடைசியில் தேங்காய் துறுவல் சேர்த்து கொண்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

13 comments:

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு கீதா

சிங்கக்குட்டி said...

எல்லா கலர் குடைமிளகாயும் இங்கு கிடைக்கிறது, முயற்சி பண்ணி பார்கிறேன்.

Priya Suresh said...

Yennaku migavum piditha oru kaai capsicum than, poriyal pakkave kannuku ithama irruku..

GEETHA ACHAL said...

செய்து பாருங்கள் சாரு அக்கா...நன்றாக இருக்கும்.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் சிங்ககுட்டி...எளிதில் செய்யவிடலாம்...சுவையாக இருக்கும்..நன்றி

GEETHA ACHAL said...

//Yennaku migavum piditha oru kaai capsicum than, poriyal pakkave kannuku ithama irruku// எனக்கும் கப்ஸிகம் மிகவும் பிடிக்கும்...எந்தவித சமையலுக்கும் எற்றது...சுவையாக இருக்கும்..

கண்டிப்பாக செய்து பாருங்க ப்ரியா..நன்றி

Menaga Sathia said...

சூப்பரா இருக்கு கீதா,இனி செய்து பார்க்கனும்.

Unknown said...

சமையல் டாக்ட்டர் சகோதரி வாழ்க.

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

//சமையல் டாக்ட்டர் சகோதரி வாழ்க// தங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா...

SUFFIX said...

Its new and should yummy too!! Thanks.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் ஷஃபிக்ஸ்...மிகவும் சுவையாக இருக்கும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...