கொண்டைகடலை கொழுக்கட்டை(Channa Kozhukattai)

கொண்டைகடலையில் எப்பொழுதும் சுண்டல், குழம்பு, சென்னா மசாலா என்று சமைத்து போர் அடித்துவிட்டதா…அப்ப இந்த கொண்டைகடலை கொழுக்கட்டை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்..
கொண்டைகடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிக நார்சத்து,புரோட்டின் நிறைந்தது. இதில் குறைந்த அளவு Saturated Fat & Cholesterol இருக்கின்றது.
இந்த கொழுக்கட்டையினை, குழம்பில் சேர்த்து உருண்டைகுழம்பு மாதிரியும் செய்யலாம். மிகவும் வித்தியசமாக இருக்கும்.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:

· வெள்ளை கொண்டைகடலை – 1 கப்
· வெங்காயம் – 1 சிறியது
· பச்சை மிளகாய் – 1
· இஞ்சி – சிறிய துண்டு
· கொத்தமல்லி – சிறிதளவு
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v கொண்டைகடலையினை குறைந்த்து 4 – 5 மணி நேரமாவது ஊறவைத்து கொள்ளவும்.
v வெங்காயம் + பச்சைமிளகாய் + கொத்தமல்லி + இஞ்சியினை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.(விரும்பினால் வதக்கவும்..இல்லையெனில் அப்படியே வதக்காமல் சேர்த்து கொள்ளவும்.)
v ஊறவைத்த கொண்டைகடலையினை கழுவி, தண்ணீர் நன்றாக வடித்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். (அரைக்கும்பொழுது தண்ணீர் சேர்க்க கூடாது)
v அரைத்த கொண்டைகடலையுடன், வதக்கிய பொருட்கள் +மஞ்சள் தூள் + கொத்தமல்லி + இஞ்சி + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

v இந்த கலவையினை, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

v இட்லி பாத்திரல், ஒரு தட்டில் உருண்டைகளை தனிதனியாக அடுக்கி, வேகவிடவும்.

v 10 – 15 நிமிடங்கள் கழித்து எடுத்து பார்த்தால் உருண்டைகள் நன்றாக வெந்து இருக்கும்.
v சுவையான சத்தான கொண்டைகடலை கொழுக்கட்டை ரெடி. இதனை மாலை நேர ஸ்நாக்காக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

கவனிக்க:
இட்லியினை வேகவைப்பது போல இதனை வேகவைக்க வேண்டும்.

15 comments:

PriyaRaj said...

Vithyaasamaana kozhukattai geetha ...romba nalla eruku ...surely try it & let u know ...

Shama Nagarajan said...

lovely different healthy recipe

Unknown said...

இதை சாப்பிடறங்களவும் கொழுகட்டை மாதிரி ஆகிடாவுங்க சரிங்களா?

Shobana senthilkumar said...

Geetha,
unga rcipes ellame differneta irruku...thanks for sharing...belated wishes:)

Sanghi said...

I have not tried kozhukattai with konda kadalai. will try geeta!

Raks said...

Very new to me,thanks for sharing :)

சாருஸ்ரீராஜ் said...

கீதா வித்யாசமான கொழுக்கட்டை ... சீக்கிரம் செய்து விட்டு சொல்கிறேன்

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் ப்ரியா. மிகவும் சுவையான இருக்கும். தங்கள் கருத்துக்கு நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி ஷாமா.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷோபனா.

GEETHA ACHAL said...

சங்கீ, கண்டிப்பாக செய்து பாருங்கள்..சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

நன்றி ராஜேஸ்வரி..கண்டிப்பாக செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் சாரு அக்கா...சூப்பராக இருக்கும்.

Meenu said...

should we boil channa before grinding

GEETHA ACHAL said...

No need to boil/cook the channa before grinding...Just grind the soaked channa...

Related Posts Plugin for WordPress, Blogger...