கொள்ளு கார அடை (Horsegram / Kollu Adai)கொள்ளினை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கொள்ளினை தினமும் உணவில் எதாவது ஒரு வகையில் சேர்த்து கொண்டால் நிச்சயம் எடை குறையும்.

கொள்ளு அதிக சூட்டினை எற்படுத்தும் என்பதால் கொள்ளினை சாப்பிடும் சமயம், மோர், தண்ணீர் போன்றவையினை அதிகம் குடிப்பது மிக நல்லது.

கொள்ளினை வைத்து செய்த அடை இது. மிகவும் சுவையாக காரசாரமாக இந்த அடை இருக்கும். காலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கொள்ளு – 2 கப்
· அரிசி – 1/4 கப்
· காய்ந்த மிளகாய் – 5
· உப்பு, எண்ணெய்தேவையான அளவு
தாளித்து சேர்க்க வேண்டியவை :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/4 தே.கரண்டி
· சோம்பு – 1/4 தே.கரண்டி
· உடைத்த உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
· வெங்காயம் – 1/2 பொடியாக நறுக்கியது
· இஞ்சிபொடியாக நறுக்கியது சிறிய துண்டு
· பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
v கொள்ளு + அரிசியினை சேர்த்து 4 – 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
v ஊறவைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு + தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.

v தோசை கல்லினை காயவைத்து, மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.

v ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, அடையினை திருப்பி போட்டு வேகவிடவும்.

v சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.

இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

23 comments:

சாருஸ்ரீராஜ் said...

thanks for giving diet recepies i will try it soon.

S.A. நவாஸுதீன் said...

கொள்ளுப் புட்டு கொள்ளு அடைன்னு விதவிதமா போட்டு கலக்குறீங்க

Raks said...

Nice idea to make adai with Kollu :)

Menaga Sathia said...

நல்லாயிருக்கு கீதா!!

Priya Suresh said...

Such a healthy dish Geetha...kalakals ponga..

SUFFIX said...

புதுசு புதுசா இருக்கு உங்கள் குறிப்புகள், ஆனால் ஆரோக்கியமானதும் கூட. வாய்ப்பு கிடைக்கும்போது இதை செஞ்சு பார்த்துடுறோம்.

PriyaRaj said...

Kolu Adai yaa ...romba vithyaasama eruku pa....eppadi eppomay romba unique recipes aa thareenga geetha.....

Priya dharshini said...

tamil samayal la kakuringa...valthukkal

Unknown said...

கொள்ளு சூடு என்பது எனக்கு புதிய செய்தி.

Shobana senthilkumar said...

Thanks geetha for giving recipes on kolu:)
i hv got a gift for u in my blog:)

Valarmathi Sanjeev said...

Nice idea, looks yummy Geetha.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி..

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா.

GEETHA ACHAL said...

//கொள்ளுப் புட்டு கொள்ளு அடைன்னு விதவிதமா போட்டு கலக்குறீங்க//

நன்றி நவாஸுதீன்.

GEETHA ACHAL said...

நன்றி ராஜேஸ்வரி.

GEETHA ACHAL said...

நன்றி மேனகா

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா.

GEETHA ACHAL said...

//புதுசு புதுசா இருக்கு உங்கள் குறிப்புகள், ஆனால் ஆரோக்கியமானதும் கூட. வாய்ப்பு கிடைக்கும்போது இதை செஞ்சு பார்த்துடுறோம்//

கண்டிப்பாக செய்து பாருங்கள்...இது எல்லாம என்னுடைய டயட்டிற்காக நானாக கண்டுபிடுத்து செய்கின்ற டயட் ரெசிபிஸ்...

இப்படி சாப்பிடுவதால் 20 pounds 3 மாதத்தில் குறைந்தது இருக்கின்றேன்.

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா.

GEETHA ACHAL said...

நன்றி ஜமால்.

GEETHA ACHAL said...

நன்றி ஷோபனா.

GEETHA ACHAL said...

நன்றி வளர்மதி.

GEETHA ACHAL said...

நன்றி ராஜ் அண்ணா.

Related Posts Plugin for WordPress, Blogger...