ஒட்ஸ் தவலை அடை (Oats Thavalai Adai)
ஒட்ஸ் தவலை அடை மிகவும் சுவையாக இருக்கும். ஒட்ஸ் சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது.
ஊறவைக்க தேவையான நேரம் : குறைந்தது 2 - 3 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பிரவுன் ரைஸ் (அல்லது அரிசி ) – 1 கப்
· ஒட்ஸ் – 1/2 கப்
· கடலை பருப்பு – 1/4 கப்
· உளுத்தம்பருப்பு – 1/4 கப்
· துவரம் பருப்பு – 1/4 கப்
· காய்ந்த மிளகாய் – 3
· உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 4 இலை பொடியாக நறுக்கியது
செய்முறை :
v ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களில் அரிசி + துவரம்பருப்பு + கடலைபருப்பினை ஒரு கிண்ணத்தில் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பினை தனியாக வேறு ஒரு கிண்ணத்தில் ஊறவைக்கவும்.
v ஊறவைத்த பொருட்களை நன்றாக கழுவி கொள்ளவும். அரிசி + காய்ந்த மிளகாய் + துவரம் பருப்பு + கடலைபருப்பினை சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
v உளுத்தம்பருப்பினை மைய அரைத்து கொள்ளவும்.
v அரைத்த கலவையுடன் உப்பு + ஒட்ஸ் + சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.

v தோசைகல்லினை காயவைத்து, அடைகளாக ஊற்றவும்.
v ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு அடைகளை திருப்பி போட்டு வேகவிடவும்.

v சுவையான சத்தான ஒட்ஸ் தவலை அடை ரெடி. இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இந்த அடையில், தேங்காய் பல்லினை சேர்த்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

32 comments:

Unknown said...

எங்கு பார்த்தாலும் ஓட்ஸ் ரெசிப்பியாகவே இருக்கே..
செய்து பார்ப்போம்..

Raks said...

You always come up with authentic recipes modified to make it healthy!! Way to go!!

இசக்கிமுத்து said...

நல்லா சொல்லியிருக்கீங்க, படங்களும் ஆசையை தூண்டும் படி இருக்கிறது, அய்யய்யோ நாக்கு ஊர வைச்சுட்டீங்களே!!!

GEETHA ACHAL said...

//எங்கு பார்த்தாலும் ஓட்ஸ் ரெசிப்பியாகவே இருக்கே..
செய்து பார்ப்போம்.//

ஆமாம், பாயிசா இப்பொழுது நான் டயடில் இருக்கின்றேன்..

இது ஒரு புதுவிதமான டயட்டிங்..


இந்த புதிய ஒட்ஸ், பார்லி டயட்டிங் முறை என்னுடைய கண்டுபிடிப்பு...இந்த டயட்டிங் மூலம் பல கிலோ எடை குறைந்து இருக்கின்றேன்...இந்த வாரம் என்னுடைய பிறந்தநாள் அன்று எடுத்து என்னுடைய போட்டோவினை ஆர்குட்டில் பார்த்து இருப்பீங்க ... அதுல பார்த்த 20 pounds குறைந்து இருப்பேன்.

நான் என்னுடைய டயட்டினை பற்றி சொல்லி பலபேர் எடை குறைந்து இருக்காங்கா...எதோ என்னால் கொஞ்சம் பேர் பலன் அடைகின்றாங்க என்பதில் சந்தோசம்.

GEETHA ACHAL said...

//You always come up with authentic recipes modified to make it healthy!! Way to go!!//

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜேஸ்வரி.

ஆமாம், ராஜேஸ்வரி இப்ப நான் டயட்டிங் இருக்கின்றேன். அதனால ஒட்ஸ், பார்லி, பயறு வகைகளினை வைத்து இப்படி விதவிதமாக சமைத்து சாப்பிடுவதால டயட்டிங் இருக்கின்ற மாதிரியே தெரிவதில்லை.

நன்றி.

GEETHA ACHAL said...

//நல்லா சொல்லியிருக்கீங்க, படங்களும் ஆசையை தூண்டும் படி இருக்கிறது, அய்யய்யோ நாக்கு ஊர வைச்சுட்டீங்களே!!//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இசக்கிமுத்து.

கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக்பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன். நன்றி.

PriyaRaj said...

Oats Aadai romba different aa eruku geetha .. .will try it soon ...

Menaga Sathia said...

சூப்பர் ஒட்ஸ் தவலை அடை!!

Unknown said...

கீதா உங்கள் ரகசியம் இதுதானா? ரெசிப்பீ நல்லாஇருக்கு,இன்னைக்கு காலை சாப்பிட்டாச்சு அதனால நாளை காலை இதுதான்,கண்டிப்பா நன்றாக தான் இருக்கும்..

Unknown said...

தலைப்பே சூப்பருங்கோ.

முயற்சித்திடுவோம் ...

Anonymous said...

Hi Geetha
first time here. tamizhla blog padikka romba nalla irukku. neenga weight korancha secret enakkum solli kundunga pls.

இலா said...

Nice Geetha!!! I will try and tell you.. back on track after a birthday party

Priya dharshini said...

oats le vethavama kalakuringa

Porkodi (பொற்கொடி) said...

kalakkala irukku :) unga veetla oats, barley ellam arisi madhri main polarke!

Valarmathi Sanjeev said...

Healthy one Geetha, will try this.

GEETHA ACHAL said...

ப்ரியா, தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.கண்டிப்பாக செய்து பாருங்கள்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.

GEETHA ACHAL said...

//கீதா உங்கள் ரகசியம் இதுதானா? ரெசிப்பீ நல்லாஇருக்கு,இன்னைக்கு காலை சாப்பிட்டாச்சு அதனால நாளை காலை இதுதான்,கண்டிப்பா நன்றாக தான் இருக்கும்.//

தாமரை...தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

கண்டிப்பாக செய்து பாருங்கள்..

ரகசியம் எல்லாம ஒன்றும் இல்லை...உடல் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உறுதி இருந்தால் கண்டிப்பாக குறைக்கலாம்.

பாருங்க..இப்ப எல்லாம் அம்மா வந்த பிறகு, எடை தான் நல்லா குறைஞ்சச்சே என்று அம்மா சமையலில சாப்பிட ஆரம்பித்தாகிவிட்டது...

GEETHA ACHAL said...

//தலைப்பே சூப்பருங்கோ.

முயற்சித்திடுவோம் ...//தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால். கண்டிப்பாக செய்து பாருங்கள்..சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

//Hi Geetha
first time here. tamizhla blog padikka romba nalla irukku. neenga weight korancha secret enakkum solli kundunga pls.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபா..

இதில் ரகசியம் எல்லாம் இல்லை...நான் தினமும் சமைப்பதினை தான் ப்ளாகில் எழுதுகிறேன்...கண்டிப்பாக ஒவ்வொரு குறிப்பாக வீட்டில் செய்து பாருங்கள்...நிச்சயம் வெயிட் குறையும்.

GEETHA ACHAL said...

நன்றி இலா...கண்டிப்பாக செய்து பாருங்கள். திரும்பவும் டயடிங்க் ஆரம்பியுங்க...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா.

GEETHA ACHAL said...

நன்றி வளர்மதி. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

GEETHA ACHAL said...

//kalakkala irukku :) unga veetla oats, barley ellam arisi madhri main polarke!//

இப்போ டயடிங் என்பதால், அரிசியினை பார்த்தே 2 - 3 மாசம் ஆச்சு பொற்கொடி...

my kitchen said...

Thavala adai is my favorite one,using Oats really different to me,soon i will try.do visit my blog when u find time

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வி.

கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அனொஉடன் அழைக்கின்றேன்.

உங்கள் ப்ளாக் அருமையாக இருக்கு.

Unknown said...

கீதா நேற்று ஓட்ஸ் தவலை அடைதான் செய்தேன் உங்க குறிப்பை பார்த்து செய்தேன்.என்ன செய்யலாம்னு யோசித்து இதை பார்த்தவுடன் செய்யனும்னு தோணுச்சு உடனே செய்து சாப்பிட்டாச்சு....ரொம்ப டேஸ்ட்டா இருந்தது.

GEETHA ACHAL said...

நன்றி kino...செய்துவிட்டு பின்னுட்டம் அளிததில் மிகவும் மகிழ்ச்சி...நன்றிகள்.

Anbuselvi said...

Dear Geethu
I became your fan. Wow! how many receipes ! I like all your recipes. I am vegetarian, i want to reduce weight. I am now 66kg I want to reduce 10kg. If you have any diet plan please let me know. By the way how can I see your photos in this website.

GEETHA ACHAL said...

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அன்புசெல்வி....என்னுடைய ப்ளாகில் இருக்கும் பெரும்பாலான குறிப்புகள் டயட் வகைகள் தான்..கண்டிப்பாக ஒவ்வொன்றாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

Anbuselvi said...

Yes Geetha I tried Barley dosai and kollu dosai. Very nice. I want to try Channa dosai. That picture is tempting me a lot. I think I would try this weekend.

Ani said...

Hi Geetha,

i tries this last weekend and it was delicious!

Just for ur info(somebody has asked too)...itz always good to add some asafoetida/jeera when we r cooking any dish with any dhal...since it helps a lot in digestion...

Related Posts Plugin for WordPress, Blogger...