பிளைன் பச்சைபயிறு தோசை (Plain Whole Moong Dosai)

பச்சைபயிறு , உடலிற்கு மிகவும் நல்லது. பச்சைபயிறில் அதிக அளவு நார்சத்து, இரும்பு சத்துகள் , விட்டமின்ஸ் (B, C & K) இருக்கின்றது. இதில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் cholesterol காணப்படுகின்றது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவது நல்ல பயனை தரும்.
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 5 – 6 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பச்சைபயிறு – 1 கப்
· அரிசி – 2 மேஜை கரண்டி
· உப்பு – 1 தே.கரண்டி
· காய்ந்த மிளகாய் – 2
செய்முறை :
v பச்சைபயிறு + அரிசியினை குறைந்தது 5 – 6 மணி நேரம் ஊறவைக்கவும்.

v ஊறவைத்த பொருட்கள் + காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
v தோசைகல்லினை காயவைத்து, மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.

v ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு மேலும் 1 நிமிடம் வேகவிடவும்.

v சுவையான பச்சைபயிறு தோசை ரெடி. இதனை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

27 comments:

Priya Suresh said...

Such a healthy dish!

Nithya said...

dosa super ah iruku. aana yenaku than pachai payir seradhu :( inrundhalum amma appa ku panni tharen :)

சாருஸ்ரீராஜ் said...

பச்சை பயிறு இருக்கு செய்து பார்து விட்டு சொல்கிறேன்

அருண் said...

அக்கா வாழ்க , இந்த தளம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு.. மிகவும் அருமையான உணவு வகைகளை அறிமுகபடுத்துறீர்கள்.. வாழ்த்துக்கள்..

S.A. நவாஸுதீன் said...

அருமை. சத்துள்ள தோசை

யோ வொய்ஸ் (யோகா) said...

பச்சை பயிறு என நீங்கள் குறிப்பிடுவது பாசிப்பயறு (Green gram) என நான் நினைக்கிறேன். சரியா?

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா...

கண்டிப்பாக செய்யுங்கள் ..நன்றாக இருக்கும்...அம்மா, அப்பாவிற்கு என்னுடைய வணக்கத்தினை தெரிவிக்கவும். நன்றி.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்க, சாரு அக்கா....மிகவும் சூப்பராக இருக்கும்...

இத்துடன் தேங்காய் சட்னி அல்லது காரசட்னியுடன் சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும்..

GEETHA ACHAL said...

//இந்த தளம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு.. மிகவும் அருமையான உணவு வகைகளை அறிமுகபடுத்துறீர்கள்.//

தங்கள் கருத்துக்கு மிக மிக நன்றிகள் அருண்...

கண்டிப்பாக அடிக்கடி வரவேண்டும் என்று அன்புடன் அக்கா அழைக்கிறேன்...

நன்றி அருண்...

GEETHA ACHAL said...

நன்றி நவாஸுதீன்...

GEETHA ACHAL said...

//பச்சை பயிறு என நீங்கள் குறிப்பிடுவது பாசிப்பயறு (Green gram) என நான் நினைக்கிறேன். சரியா?//

ஆமாம், யோகா...பச்சைபயிறு என்பது முழு பாசிபருப்பு தான்...பச்சைகலரில் இருக்கும்...அதனாலே பச்சைபயிறு என்றே..சொல்லுவேன்..


பாசிபருப்பு என்பது உடைத்து...தோல் நீக்கியது...

அம்மாவிடம் சொல்லி சாப்பிடுங்க...

GEETHA ACHAL said...

யோகா , பச்சைபயிறு படத்தினை உங்களுக்காக இப்பொழுது இணைத்து இருக்கின்றேன்...பாருங்கள்...நன்றி..

யோ வொய்ஸ் (யோகா) said...

Geetha Achal said...

யோகா , பச்சைபயிறு படத்தினை உங்களுக்காக இப்பொழுது இணைத்து இருக்கின்றேன்...பாருங்கள்...நன்றி..//

நன்றி கீதா அக்கா. எனது கருத்தையும் ஏற்றுக் கொண்டு அதற்கு ஒரு படம் இணைத்ததற்கு..

Priya Narasimhan said...

first time tamil-la food blog paakkaren..superb..dosai migavum nandraaga irukkiradu. :-)

Menaga Sathia said...

pls collect ur award from my blog

சிங்கக்குட்டி said...

அருமையான தோசை...நல்ல தகவல் நன்றி :-))

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி ப்ரியா..

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்..

GEETHA ACHAL said...

தங்களுடைய விருதுக்கு மிகவும் நன்றி மேனகா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சிங்ககுட்டி..

SUFFIX said...

Nutritious!!

GEETHA ACHAL said...

//Nutritious!!//நன்றி ஷஃபிக்ஸ்

koini said...

பச்சைப் பயறு தோசைக்கு இப்பொதுதான் ஊறவைத்திருக்கேன்.சாயங்காலம் செய்யலாமென.என்ன செய்யலாம்னு தாடும்போது உங்க தோசை கண்ணில் பட்டது.நன்றி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கொயினி...கண்டிப்பாக சூப்பராக இருக்கும்...நன்றி...

Geetha6 said...

நன்றி!

பிரதீபா said...

சமையல் வகைகள் அனைத்தும் புதிதாக-மிகவும் சத்தானதாக இருக்கின்றது. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இந்த பச்சைப்பயிறு தோசை எனக்கு மிகவும் பிடிக்கும். மாவில் கொஞ்சம் சீரகமும்,நறுக்கிய கருவேப்பிலையும் சேர்த்துக்கொண்டால் இன்னும்கூட சுவை கூடும். அதுவும் தேங்காய் சட்னியுடன், ம்ம்ம்ம்.. இன்று பச்சைப்பயிறு தோசை செய்யப் போகிறேன் :)அட, தேங்காய் கூட ஒரு மூடி இருக்கிறதே !!

GEETHA ACHAL said...

நன்றி பிரதீபா...

Related Posts Plugin for WordPress, Blogger...