பார்லி முருக்கு - கேழ்வரகு முருக்கு (Barley Muruku & Ragi Muruku)சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - பொரிப்பதற்கு
பார்லி முருக்கு செய்ய :
· பார்லி மாவு – 1 கப்
· உளுத்தம் மாவு – 1 மேஜை கரண்டி
· வெண்ணெய் – 1 தே.கரண்டி( Room Temperature)
· உப்பு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/4 தே.கரண்டிக்கு குறைவாக (அ) ஓமம்
கேழ்வரகு முருக்கு செய்ய :
· கேழ்வரகு மாவு – 1 கப்
· உளுத்தம் மாவு – 1 மேஜை கரண்டி
· வெண்ணெய் – 1 தே.கரண்டி( Room temp.)
· உப்பு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/4 தே.கரண்டிக்கு குறைவாக (அ) ஓமம்
செய்முறை :
v பார்லி முருக்கு செய்ய கொடுத்துள்ள பொருட்களில், பார்லி மாவு + உளுத்தம் மாவு + வெண்ணெய் + சீரகம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
v நன்றாக கலந்து பின், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
v கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.
v முருக்கு அச்சில் மாவினை போட்டு, முருக்குகள் பிழியவும்.
v சுடான எண்ணெயில் , முருக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான பார்லி முருக்கு ரெடி.

கேழ்வரகு முருக்கு :
v கேழ்வரகு முருக்கு செய்ய கொடுத்துள்ள பொருட்களில், கேழ்வரகு மாவு + உளுத்தம் மாவு + வெண்ணெய் + சீரகம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
v நன்றாக கலந்து பின், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
v கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.
v முருக்கு அச்சில் மாவினை போட்டு, முருக்குகள் பிழியவும்.

v சுடான எண்ணெயில் , முருக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான மொருமொருப்பான கேழ்வரகு முருக்கு ரெடி.

30 comments:

Priya Suresh said...

Ragi murukku i have already done, but barley never thought of making out any savouries with barley flour, wat a great dish Geetha..keep rocking!

susri said...

kalakku kalakkuRingka well done Geetha
http://susricreations.blogspot.com

Menaga Sathia said...

கேழ்வரகு முறுக்கு செய்திருக்கேன்.பார்லி முறுக்கு நல்லாயிருக்கு கீதா.பார்லி மாவு எனக்கு கிடைக்கல இங்க.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Raks said...

Sathaanadhum,suvaiyaanadhum kooda :)

Happy Diwali to you and your family!

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி பரியா. பார்லியில் செய்து இருக்கும் முருக்கு அரிசி முருக்கு போலவே மிகவும் சுவையாக இருக்கின்றது...

GEETHA ACHAL said...

நன்றி ஸ்ரீ.

GEETHA ACHAL said...

நன்றி மேனகா.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

நன்றி ராஜேஸ்வரி.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

சிங்கக்குட்டி said...

ஐயோ..என்னால முடியல கீதா.

இப்படி ஒரு ஒன்ன செய்து முடிக்கும் முன், அடுத்த சுவையான உணவ பதிந்தால், இது எதுவும் கிடைக்காத ஊரில் இருக்கும் நாங்கள் என்ன செய்வது?

அதுக்கு தண்டனையா, கொஞ்சம் முறுக்கு எனக்கு பார்சலில் அனுப்பவும் :-))

Kanchana Radhakrishnan said...

தீபாவளி நல்வாழ்த்துகள்

தெய்வசுகந்தி said...

ராகி முறுக்கு தெரியும். பார்லியில இது வரைக்கும் எதுவுமே டிரை பண்ணதில்ல. புதுசு புதுசா கலக்கறீங்கப்பா. உங்களுக்கும் குடுபத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

பார்லி மாவு மிக்ஸியில் பொடித்து கொள்ளலாம் மேனகா.


கீதா ரொம்ப அருமை நேற்று பார்லி மாவை மிக்ஸியில் பொடித்து தான் உங்கள் பால் கொழுகட்டை முறையில் வெல்லம் சேர்த்து சுத்திர்யான் செய்தேன். ரொம்ப நல்ல இருந்தது எனக்கு தெரிந்து பார்லியை பொடித்தால் பல வகை உணவுகளை தயாரிகக்லாம்.

SUFFIX said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

my kitchen said...

Pudumaiyaga erruku,தீபாவளி நல் வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

பார்லி முறுக்கு புதுமையான ஒன்று... ம்ம்ம் கலக்குங்க கீதா.

Valarmathi Sanjeev said...

Murukku looks super and yummy..

GEETHA ACHAL said...

//ஐயோ..என்னால முடியல கீதா.

இப்படி ஒரு ஒன்ன செய்து முடிக்கும் முன், அடுத்த சுவையான உணவ பதிந்தால், இது எதுவும் கிடைக்காத ஊரில் இருக்கும் நாங்கள் என்ன செய்வது?

அதுக்கு தண்டனையா, கொஞ்சம் முறுக்கு எனக்கு பார்சலில் அனுப்பவும் :-))//

தங்கள் கருத்துக்கு நன்றி சிங்ககுட்டி.

உங்களுக்கு பர்சல் அனுப்பிவிட்டேன்..சாப்பிட்டுவிட்டு முறுக்கு எப்படி இருக்கு என்று சொல்லவும்.

நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

//ராகி முறுக்கு தெரியும். பார்லியில இது வரைக்கும் எதுவுமே டிரை பண்ணதில்ல. புதுசு புதுசா கலக்கறீங்கப்பா. உங்களுக்கும் குடுபத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//நன்றி சுகந்தி.

இந்த தீபாவளிக்கு உங்களுடைய மைசூர் பாக் செய்தேன். சூப்பராக இருந்தது. நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி நவாஸுதீன்.

GEETHA ACHAL said...

//பார்லி மாவு மிக்ஸியில் பொடித்து கொள்ளலாம் மேனகா.


கீதா ரொம்ப அருமை நேற்று பார்லி மாவை மிக்ஸியில் பொடித்து தான் உங்கள் பால் கொழுகட்டை முறையில் வெல்லம் சேர்த்து சுத்திர்யான் செய்தேன். ரொம்ப நல்ல இருந்தது எனக்கு தெரிந்து பார்லியை பொடித்தால் பல வகை உணவுகளை தயாரிகக்லாம்.//நன்றி ஜலீலா அக்கா.

செய்து பின்னுட்டம் அளித்து ஊக்கம் கொடுத்துவருவதற்கு மிகவும் நன்றி.

பார்லியினை மிக்ஸியில் பொடித்திங்களா....எனக்கு தான் பயமாக இருக்கின்றது..மிக்ஸி எதாவது ஆகிவிடுமோ என்று...எனக்கு இங்கு பார்லி மாவே கிடைத்துவிடுகின்றது ...அதனாலே பார்லி மாவினை கடையிலே வாங்கிவிடுகின்றேன்.

GEETHA ACHAL said...

நன்றி ஷஃபிக்ஸ்..

நன்றி செல்வி.

நன்றி சாரு அக்கா.

GEETHA ACHAL said...

நன்றி வளர்மதி.

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப நல்ல குறிப்பு,சாப்பிட ஆசையாய் இருக்கு

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாத்திமா.

Unknown said...

Murukku looks sooper healthy!!

GEETHA ACHAL said...

நன்றி திவ்யா.

Anonymous said...

உளுந்த மாவு இட்லிக்கு அரைத்த உளுந்த மாவா? அல்லது உளுந்தை தூள் செய்து சேர்க்கனுமா?நாளை செய்து பார்க்கனும் சொல்லுங்க ப்ளீஸ்

இப்படிக்கு
தேவி

GEETHA ACHAL said...

//உளுந்த மாவு இட்லிக்கு அரைத்த உளுந்த மாவா? அல்லது உளுந்தை தூள் செய்து சேர்க்கனுமா//

உளுத்தம்மாவு இட்லி அரைத்த மாவு கிடையாது...

உளுத்தம்பருப்பினை வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொண்ட மாவு...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

Related Posts Plugin for WordPress, Blogger...