பார்லி தட்டை (Barley Thatai)


எப்பொழுதும் வருடவருடம், தீபாவளியினை எதாவது ஒரு தீம் வைத்து கொண்டாடுவது எங்களுடைய வழக்கம். இந்த வருடம் தீபாவளியினை , நாங்கள் டயட் தீபாவளியாக கொண்டாட இருக்கின்றோம். அதற்காக நான் செய்த பார்லி தட்டை…


பொதுவாக , தட்டை செய்யும் பொழுது கடலைபருப்பினை சேர்த்து செய்வாங்க.. கடலைப்பருப்பினை ஊறவைக்க நேரம் இல்லையெனில், முழு ஒட்ஸினை அப்படியே மாவுடன் சேர்த்து கலந்து தட்டை சுடவும். சுவையாக வித்தியசமாக இருக்கும்.


என்னுடைய பதிவில் வெளிவந்த ஈஸி தட்டையின் செய்முறையினை காண இங்கே க்ளிக் செய்யவும்.


பருப்பினை ஊறவைக்க தேவையான நேரம்: குறைந்தது 1/2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி மாவு – 1/2 கப்
· பொட்டுகடலை மாவு – 1/4 கப்
· அரிசி மாவு – 1/2 கப்
· கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி(ஊறவைக்கவும்)
· வெண்ணெய் – 1 மேஜை கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
· காய்ந்த மிளகாய் – 3
· பெருங்காய தூள் – 1/4 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
· எண்ணெய் – தட்டைகளை பொரித்து எடுக்க
செய்முறை :
v கருவேப்பில்லை + காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
v பார்லி மாவு + பொட்டுகடலை மாவு + அரிசி மாவு + உப்பு, பெருங்காயம் + வெண்ணெய் + பொடித்த கருவேப்பில்லை+ கடலைப்பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

v மாவு நன்றாக கலந்த பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவினை பிசையவும். இப்பொழுது தட்டை செய்ய மாவு ரெடி.
v கடாயில் எண்ணெயினை காயவைக்கவும். சிறிய சிறிய தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய பார்லி தட்டை ரெடி.

17 comments:

ஹர்ஷினி அம்மா said...

டயட் தட்டையா!!!!..ஆச்சரியம் தான் கீதா....எங்க வீட்லே இந்த மாதம் முழுவதும் டயட்டா அப்படினான்னு கேக்கறாங்க :-)

Sanghi said...

mmm yummy!

S.A. நவாஸுதீன் said...

பார்லி (டயட்) தட்டை நிரைய பேருக்கு உபயோகமா இருக்கும். சூப்பர்

சாருஸ்ரீராஜ் said...

கீதா , கொள்ளு தட்டை சூப்பர் , எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க . டயட் தீபாவளியை நல்லா கொண்டாடுங்கள் , தீபாவளி வாழ்துக்கள்

Btc Guider said...

சில குறிப்புகள் அருமை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

தெய்வசுகந்தி said...

வாவ் வித்தியாசமா யோசிக்கறீங்க. நானும் 2 தடவை தட்டை டிரை பண்ணி சொதப்பிருச்சு. உங்க தட்டை சூப்பரா இருக்கு.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா..உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள் டயட் இருக்கு.நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி சங்கீ.

GEETHA ACHAL said...

நன்றி நவாஸுதீன்.

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா. உங்களுக்கும் எங்களுடைய இனிய தீபாவளி வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

நன்றி ரஹ்மான். தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி ராஜ். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

//வாவ் வித்தியாசமா யோசிக்கறீங்க. நானும் 2 தடவை தட்டை டிரை பண்ணி சொதப்பிருச்சு. உங்க தட்டை சூப்பரா இருக்கு.//

மிகவும் நன்றி சுகந்தி.

Priya Suresh said...

Barleyla thattaiyaa..nenachikuda pakkave mudiyala Geetha..summa Kalakuringa ponga..

Menaga Sathia said...

வித்தியாசமான பார்லி தட்டை சூப்பர்ர் கீதா!!

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா.

நன்றி மேனகா.

Related Posts Plugin for WordPress, Blogger...