கொள்ளு போளி (Kollu Sweet Poli)
போளியா?...யார் இதனை செய்வது…எவ்வளவு நேரம் எடுக்கும்…இதனை செய்ய வேலை அதிகம் எடுக்கும்… என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த போளியினை செய்து பாருங்கள்…அப்புறம் என்ன..அடிக்கடி வீட்டில் போளி தான்..இந்த போளிகளை செய்ய எடுக்கும் நேரம் அரை மணி நேரத்திற்கும் குறைவாக தான் இருக்கும்.
சிலர் போளி மாவினை குறைந்தது 2 -3 மணி நேரமாவது ஊறவைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று எல்லாம் சொல்லுவாங்க…அப்படி எல்லாம் இல்லாமல் என்னுடைய செய்முறைபடி செய்தால், உடனே செய்தாலும் சுவையாக இருக்கும்.
பூரணம் அதிகமாக செய்து ப்ரிஜில் வைத்து கொண்டால், விரும்பிய நேரத்தில் போளிகளை செய்து சாப்பிடலாம்..
அவரவர் விருப்பதிற்கு எற்ப, கடலைபருப்பு, சென்னா, பச்சைபயிறு வைத்து போளிகளை செய்யலாம். இதே போல காரபோளிகளும் செய்து சாப்பிடலாம்.
கொள்ளுவினை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கொள்ளு – 1 கப்
· மைதா மாவு – 1 கப்
· பொடித்த வெல்லம் – 1/4 கப்
· ஏலக்காய் – 2 பொடித்தது
· நெய் – 2 மேஜை கரண்டி
· எண்ணெய் – 2 மேஜை கரண்டி
· உப்பு – 1 சிட்டிகை (மாவு பிசைவதற்கு)
· மஞ்சள் கலர் – சிறிதளவு
செய்முறை :
v கொள்ளுவினை குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். இதனை நன்றாக கழுவி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
v வேகவைத்த கொள்ளுவினை, தண்ணீர் வடியவிட்டு, சிறிது நேரம் ஆறவைத்த பிறகு, அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்றகூடாது).
v ஒரு கடாயில் வெல்லம் போட்டு 2 நிமிடங்கள் வைக்கவும். அதன் பிறகு பொடித்து வைத்துள்ள வேகவைத்த கொள்ளு + ஏலக்காய் பொடி + 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து மேலும் 5 - 6 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும்.(பூரணம் கையினால் பிடித்தால் உருண்டையாக பிடிக்க வரவேண்டும்..இல்லையெனில் மேலும் சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.)
v இப்பொழுது போளியில் வைக்கப்படும் பூரணம் ரெடி.
v மைதா மாவு + உப்பு + மஞ்சள் கலர் + எண்ணெய் சேர்த்து மாவினை முதலில் பிசையவும்.
v பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவினை மிகவும் தளர்வாக மாவினை பிசைந்து கொள்ளவும். இப்பொழுது மாவும் ரெடி.
v பூரணத்தினை,நெய் தடவி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அதே அளவில் மாவினையும் உருட்டி வைக்கவும். மாவினை சிறிது தட்டி அதன் நடுவில் பூரணத்தினை வைக்கவும். பிறகு அதனை நன்றாக மூடிவிடவும்.

v இதனை, நன்றாக உள்ளங்கையினால் வைத்தே போளிகளாக தட்டி கொள்ளலாம்.

v கல்லினை காயவைத்து, போளிகளை நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய போளி ரெடி.

கவனிக்க:
v மாவினை பிசையும் பொழுது, மாவு கண்டிப்பாக தளர்வாக இருக்க வேண்டும். பிசைந்த மாவு, கையினால் வட்டம் வடிவாக இழுக்க வரவேண்டும் இந்த மாவினை சாப்பத்தி மாவு பத்திற்கு இல்லாமல் இன்னும் சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
v அதே போல, மாவு உருண்டையும், பூரணம் உருண்டையும் ஒரே அளவில் இருந்தால் தான், இனிப்பு அனைத்து இடத்திலும் படர்ந்து இருக்கும்.
v முதல் முறை செய்வர்கள், எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துகொண்டும் போளிகள் செய்து பாருங்கள். இப்படி செய்தால் பூரணமும் வெளியில் வராது. போளியும் மிகவும் மெல்லியதாக இருக்கும்.
v வெல்லத்தில் மண் இருக்குமோ என்று சந்தேகம் இருந்தால், முதலில் வெல்லத்தினை கடாயில் வைத்து உருகவைத்து, பிறகு அதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு பொடித்த கொள்ளுவுடன் சேர்த்து பூரணம் செய்து கொள்ளவும்.

37 comments:

Shama Nagarajan said...

different lovely recipe

நட்புடன் ஜமால் said...

டேஸ்ட்டுக்கு டேஸ்ட்டும் ஆச்சி

உடலுக்கும் நல்லது - நன்றிங்கோ ...

Mrs.Menagasathia said...

கொள்ளு போளி புதுசா நல்லா இருக்கு கீதா.ஆனா எனக்குத்தான் போளி சரியா வரமாட்டேங்குது.

Nithya said...

Wow.. arumayaana idea.. Kandippa try pannaren :)

Geetha Achal said...

நன்றி ஷாமா..

நன்றி ஜமால்..

நன்றி மேனகா...முதலில் செய்யும்பொழுது சிறிய சிறிய உருண்டைகளை வைத்து செய்து பாருங்கள்...அப்புறம் பழகிவிடும்..போளி செய்ய நன்றாக வரும்

Sanghi said...

Mmm.. poli romba pudikum.. idhu healthy one..! Try panren..!

R.Gopi said...

//போளியா?...யார் இதனை செய்வது…எவ்வளவு நேரம் எடுக்கும்…இதனை செய்ய வேலை அதிகம் எடுக்கும்… என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த போளியினை செய்து பாருங்கள்…அப்புறம் என்ன..அடிக்கடி வீட்டில் போளி தான்..இந்த போளிகளை செய்ய எடுக்கும் நேரம் அரை மணி நேரத்திற்கும் குறைவாக தான் இருக்கும்.//

பால் போளி, பருப்பு போளி கேள்விப்பட்டு இருக்கிறேன்... வீட்டில் செய்திருக்கிறார்கள். ஜமாய்த்திருக்கிறேன்... இப்போது தான் கேள்விப்படுகிறேன் "கொள்ளு போளி", அதுவும் உங்கள் புண்ணியத்தில்... அதுவும் ஃபோட்டோல வச்சு இருக்கறத பார்த்தால், எனக்கே எனக்கு வைத்திருப்பது போல இருக்கு...

//சிலர் போளி மாவினை குறைந்தது 2 -3 மணி நேரமாவது ஊறவைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று எல்லாம் சொல்லுவாங்க…அப்படி எல்லாம் இல்லாமல் என்னுடைய செய்முறைபடி செய்தால், உடனே செய்தாலும் சுவையாக இருக்கும்.//

இதுவும் ஒரு புது நியூஸ்... நன்றி...

//அவரவர் விருப்பதிற்கு எற்ப, கடலைபருப்பு, சென்னா, பச்சைபயிறு வைத்து போளிகளை செய்யலாம். இதே போல காரபோளிகளும் செய்து சாப்பிடலாம்.//

கரெக்ட்... என்னவோ, கடலை பருப்பு போளி ரொம்ப டேஸ்டா இருக்கற மாதிரி இருக்கு...

செய்முறை விளக்கமும், விரிவான படங்களும் உங்களின் அக்கறையான பதிவு முறையை காட்டுகிறது...(அதாவ‌து, ஏனோ தானோ என்றில்லாம‌ல்...)

முடிந்தால் "துபாய்"க்கு ஒரு பார்ச‌ல் போட‌வும்... ஜாஸ்தி இல்ல‌... ஒரு 10/15... ஏன்னா, உங்க‌ பேர் சொல்லி ஒரு 4/5 நாள் சாப்பிட‌லாமேன்னுதான்... ஹீ...ஹீ..

வாழ்த்துக்கள் கீதா...

அப்படியே இங்கே வாருங்கள்... உங்களுக்கான பரிசினை பதிவில் இருந்து மறக்காமல் / மறுக்காமல் பெற்று செல்லவும்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

S.A. நவாஸுதீன் said...

கொள்ளு போளி. வித்தியாசமா இருக்கே.

Anonymous said...

மைதாவுக்கு பதிலாக சோயா மாவும், பைபர் நிறைந்த கோதுமை மாவும் கலந்த மாவை உபயோகித்தால் இன்னும் சத்துள்ளதாக இருக்குமே.

பத்மப்ரியா
துபாய்

Jaleela said...

ரொம்ப அருமையா இருக்கு பார்க்க,
கொள்ளு போளி.

RAKS KITCHEN said...

WOw,looks mouthwatering,good idea Geetha :)

Geetha Achal said...

நன்றி சங்கீ..

Geetha Achal said...

நன்றி நவாஸுதீன்..

Geetha Achal said...

நன்றி நித்யா..கண்டிப்பாக செய்ஹ்டு பாருங்கள்..

Deivasuganthi said...

கடலைப்பருப்பு அல்லது தேங்காய்லதான் செய்வோம். இது வித்தியாசமா இருக்குதுங்க.

Geetha Achal said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி பத்மாப்ரியா.

நீங்கள் சொல்வதும் உண்மை தான்.சோயா மாவு, கோதுமை மாவு எல்லாம் நிறைய நார்சத்து இருக்கின்றது.

ஆனால் கோதுமை மாவில் , மைதா மாவிற்கு எற்றாற் போல அவ்வளவு நன்றாக வராது. ஸ்ட்ஃபிங் வெளியில் வந்துவிடும். அதான் அதில் செய்யவில்லை..

Geetha Achal said...

//பால் போளி, பருப்பு போளி கேள்விப்பட்டு இருக்கிறேன்... வீட்டில் செய்திருக்கிறார்கள். ஜமாய்த்திருக்கிறேன்... இப்போது தான் கேள்விப்படுகிறேன் "கொள்ளு போளி", அதுவும் உங்கள் புண்ணியத்தில்... அதுவும் ஃபோட்டோல வச்சு இருக்கறத பார்த்தால், எனக்கே எனக்கு வைத்திருப்பது போல இருக்கு...//நன்றி கோபி. உங்களுக்கு தான்..எடுத்து சாப்பிடுங்க...உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு...

////அவரவர் விருப்பதிற்கு எற்ப, கடலைபருப்பு, சென்னா, பச்சைபயிறு வைத்து போளிகளை செய்யலாம். இதே போல காரபோளிகளும் செய்து சாப்பிடலாம்.//

கரெக்ட்... என்னவோ, கடலை பருப்பு போளி ரொம்ப டேஸ்டா இருக்கற மாதிரி இருக்கு...//

கொள்ளுவில் செய்யும் போளியும் மிகவும் சுவையாக இருக்கும்...எனக்கும் இதற்கும் கடலைபருப்பு பொளிக்கும் பெரியதாக வித்யாசம் ஒன்றும் தெரியவில்லை...கலரினை தவிர...கொள்ளூபூரணம் கொஞ்சம் ட்ராக் கலர் அவ்வளவு தான்..

//செய்முறை விளக்கமும், விரிவான படங்களும் உங்களின் அக்கறையான பதிவு முறையை காட்டுகிறது...(அதாவ‌து, ஏனோ தானோ என்றில்லாம‌ல்...)//மிகவும் நன்றி...உங்களை போன்றவர்களின் ஊக்கத்திற்கு நன்றி.

உங்களுடைய தீபாவளி அன்பளிப்பினை பெற்று கொண்டோம்.நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Geetha Achal said...

நன்றி ராஜேஸ்வரி...கண்டிப்பாக செய்து பாருங்கள்..நன்றி

Geetha Achal said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுகந்தி..

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

வாவ் என்ன ஃபேவரைட் பலகாரமாச்சே, ஆனால் இங்கே கொள்லு கிடைக்குமான்னு தெரியலை, இதுக்கு பதிலா கடலைப் பருப்பு போடலாங்களா?

Geetha Achal said...

//வாவ் என்ன ஃபேவரைட் பலகாரமாச்சே, ஆனால் இங்கே கொள்லு கிடைக்குமான்னு தெரியலை, இதுக்கு பதிலா கடலைப் பருப்பு போடலாங்களா?//

கண்டிப்பாக கடலைப்பருப்பினை சேர்த்து செய்யலாம்.
ஒரிஜினல் போளியினை கடலைப்பருப்பினை சேர்த்து தான் செய்வாங்க...கண்டிப்பாக செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.

நன்றி ஷஃபிக்ஸ்.

Valarmathi said...

Wow super idea geetha, looks yummy.

sarusriraj said...

கொள்ளு போளி சூப்பர். செய்து பார்கிறேன்

Geetha Achal said...

நன்றி வளர்மதி.

நன்றி சாரு அக்கா.கண்டிப்பாக செய்து பாருங்கள்.

Priya said...

SUch a guilt free poli..Udane saapidanam pola irruku Geetha..

Geetha Achal said...

நன்றி ப்ரியா.

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

my kitchen said...

How ur preparing recipes like this,creative one.everything is low fat & healthy dishes.Hats-off to u

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//Geetha Achal said...
//வாவ் என்ன ஃபேவரைட் பலகாரமாச்சே, ஆனால் இங்கே கொள்லு கிடைக்குமான்னு தெரியலை, இதுக்கு பதிலா கடலைப் பருப்பு போடலாங்களா?//

கண்டிப்பாக கடலைப்பருப்பினை சேர்த்து செய்யலாம்.
ஒரிஜினல் போளியினை கடலைப்பருப்பினை சேர்த்து தான் செய்வாங்க...கண்டிப்பாக செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.

நன்றி ஷஃபிக்ஸ்.//

நேற்று வீட்டுல செஞ்சு பார்த்தோம், ரியல்லி சூப்பர்ப், மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது, நன்றி கீதா.

Geetha Achal said...

மிகவும் நன்றி செல்வி.

Geetha Achal said...

//நேற்று வீட்டுல செஞ்சு பார்த்தோம், ரியல்லி சூப்பர்ப், மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது, நன்றி //

மிகவும் நன்றி ஷஃபிக்ஸ்.

செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளித்து ஊக்கம் கொடுப்பதற்கு மிகவும் நன்றி.

Fx - Pro said...

Ungal samayal kurippu blog migha arumai.
Anaiththu receipekkalum nandraga ulladhu.Enadhu wife ungal blog parththu samayal seigiral.
Thanks...

அனுபவம் said...

உங்க வீட்டுல சாப்பிட நானும் வரயாங்க?

Geetha Achal said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி பாலா. உங்களுடைய மனைவிக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்ளவும்.

மிகவும் நன்றி.

Geetha Achal said...

வாங்க அனுபவம். நன்றி.

Jaleela said...

போளி நானும் செய்து பார்த்து விட்டேன்,,

முழு பாசிபயரில் , நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள் எப்படி இருக்குன்னு,


உங்களுக்கு எப்படி அந்த கலவை கட்டியாக வந்தது.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா..கண்டிப்பாக வந்து பார்க்கின்றேன்...நான் எப்பொழுதும் தண்ணீர் சேர்க்கமாட்டேன்...தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்...நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...