ஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம்(Oats Banana Paniyaram)


மிகவும் சுவையான மாலை நேர இனிப்பு பணியாரம். சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· ஒட்ஸ் – 1 கப்
· நன்றாக பழுத்த வாழைப்பழம் – 1
· சக்கரை – 2 மேஜை கரண்டி
· ஏலக்காய் – 2
· தேங்காய துறுவல் – 1 மேஜை கரண்டி
· உப்புஒரு சிட்டிகை
· நெய் - சிறிதளவு
செய்முறை :
v ஒட்ஸ் + 1/4 கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
v ஊறவைத்த ஒட்ஸினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஏலக்காய் + சக்கரையினை சேர்த்து பொடித்து வைக்கவும். வாழைப்பழத்தினை மசிக்கவும்.
v அரைத்த ஒட்ஸ் + பொடித்த சக்கரை + மசித்த வாழைப்பழம் + தேங்காய் துறுவல் + உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
v பணியாரகல், சூடனாதும் கரைத்த மாவினை ஊற்றி அதன் மீது நெய் ஊற்றி வேகவிடவும்.

v ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு, திருப்பி போட்டு வேகவிடவும்.

v சுவையான சத்தான ஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் ரெடி.

4 comments:

Unknown said...

Havent tried adding banana to paniyaram SOunds realy tasty.

S.A. நவாஸுதீன் said...

ஆகா!! பார்க்கவே ரொம்ப அழகா இருக்கே.

Menaga Sathia said...

ஆஹா நானும் இதேபோல் பார்லியில் செய்தேன் 3நாளுக்கு முன்.ஒட்ஸிலும் நிச்சயம் நன்றாகதானிருக்கும்.சூப்பராயிருக்கு படங்கள்!!

GEETHA ACHAL said...

நன்றி திவ்யா.

நன்றி நவாஸுதீன்.

நன்றி மேனகா.

Related Posts Plugin for WordPress, Blogger...