புடலங்காய் புட்டு (Pudalangai Puttu/ Snake Gourd)


புடலங்காயில் அதிக அளவு தண்ணீர் இருக்கின்றது. இந்த காய் உடலில் எற்படும் சூடினை குறைக்கும். உடலிற்கு மிகவும் குளுமை.
இந்த காயினை சாப்பிடுவதால், வயிற்று பூச்சி, வயிற்று புண் போன்றவகைகளினை சீக்கிரத்தில் குணமடைய செய்கின்றது.
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புடலங்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :

· புடலங்காய் – 1/4 கிலோ
· வெங்காயம் – 1
· பூண்டு – 5 பல்
· கருவேப்பில்லை – 5 இலை
· கடுகு – 1/4 தே.கரண்டி
· காய்ந்த மிளகாய் – 2
· உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
· கொத்தமல்லிகடைசியில் சேர்க்க சிறிதளவு
· உப்புதேவையான அளவு
· எண்ணெய் – 1 தே.கரண்டி
செய்முறை :
v புடலங்காயினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம் + பூண்டினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
v புடலங்காயினை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

v ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்த பருப்பு + காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின், பூண்டினை சேர்த்து வதக்கவும்.
v பின் வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
v வெங்காயம் வதங்கியதும், வேகவைத்துள்ள புடலங்காய் + உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
v கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான புடலங்காய் புட்டு ரெடி.

28 comments:

Shama Nagarajan said...

superb recipe...nice entry...please do participate in my first cooked food event...check my blog for details

வால்பையன் said...

புடலங்காய் பொறியல் எனக்கு ரொம்ப பிடிக்கும்!

SUFFIX said...

//இந்த காயினை சாப்பிடுவதால், வயிற்று பூச்சி, வயிற்று புண் போன்றவகைகளினை சீக்கிரத்தில் குணமடைய செய்கின்றது.

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புடலங்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது//

பயனுள்ள தகவல், இது என்ன புடலங்காய் மேட்டருன்னு நம்ம சாதாரணமா சொல்லிருறோம், ஆனா அது கொடுக்கிற பயனை பாருங்க. நன்றி!!

S.A. நவாஸுதீன் said...

புடலங்காயில் புட்டு - அருமையா இருக்கே

சிங்கக்குட்டி said...

சூப்பர் கீதா,

என் அம்மா அடிக்கடி செய்வார்கள், ஆனா இப்ப ரொம்ப வருசமாகி போச்சு...அது எல்லாம் ஒரு பொற்காலம் :-)

ஆமா அம்மா எப்படி இருக்காங்க?

அவுங்க கிட்ட ரொம்ப வெள்ளைக்காரன் புகழ்பாடாம, நம்ம கோவிலுக்கு கூட்டிகிட்டு போங்க, நல்லா காத்து வரும் நேரம் மெல்லிய தமிழ் பாடலை கேட்குமாறு செய்யுங்கள்.

அவர்களின் இயல்பு வாழ்கை பதிக்காமல் பார்த்துக்கொளுங்கள்.

Menaga Sathia said...

ஈஸி பொரியல் நல்லாயிருக்கு கீதா!!

சாருஸ்ரீராஜ் said...

பொரியல் ரொம்ப நல்லா இருக்குபா

Priya Suresh said...

Poriyal superaa irruku Geetha, naan konjam paasiparuppu serthupen, else mathathu ellam ungaloda preparation madhriye than yennathum..

தெய்வசுகந்தி said...

நானும் இதே மாதிரிதான் பொரியல் செய்வேன். ஆனா நீங்க புட்டுன்னு சொல்றீங்க வித்தியாசமான பேரா இருக்கு.

M.S.R. கோபிநாத் said...

அருமையான சைட்டிஷ். நன்றி

Raks said...

Me too make poriyal and add coconut like this :)
Looks good :)

சாருஸ்ரீராஜ் said...

இன்னைக்கு எங்க வீட்ல புடலங்காய் நீங்க சொல்லிகொடுத்த மெத்தடு தான் , நல்லா இருந்தது.

dsdsds said...

i like pudalangai dishes.. its one tasty variety that we call "Neer Kaai" in tamil.. looks nice

Chitra said...

Me too make it a bit different..will try this version sooon :)

GEETHA ACHAL said...

நன்றி ஷாமா.

GEETHA ACHAL said...

நன்றி வால்பையன்.

GEETHA ACHAL said...

நன்றி ஷஃபிக்ஸ்.

நன்றி நவாஸுதீன்.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி சிங்ககுட்டி.

அம்மாவை பற்றி உங்களுடைய அன்பான விசாரிப்பு மிகவும் நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி மேனகா.

நன்றி சாரு அக்கா. செய்து விட்டு பின்னுட்டம் அளித்தது மிகவும் மகிழ்ச்சி.

நன்றி ப்ரியா.

GEETHA ACHAL said...

நன்றி சுகந்தி.

நன்றி கோபிநாத்.

நன்றி ராஜேஸ்வரி.

GEETHA ACHAL said...

நன்றி ஹேமா.

Valarmathi Sanjeev said...

Looks yummy, will try this method.

my kitchen said...

I love this,My mom will prepare Pal kootu using this.delicious one

ஸாதிகா said...

நல்ல ரெஸிப்பி.புடலங்காயை தோல் நீக்கத்தேவை இல்லையா?

Kanchana Radhakrishnan said...

அருமையா இருக்கே

GEETHA ACHAL said...

நன்றி வளர்மதி.

நன்றி செல்வி.

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா ஆன்டி. //புடலங்காயை தோல் நீக்கத்தேவை இல்லையா?//தோல் நீக்க தேவையில்லை.
தோல் சிறிது சொரசொரப்பாக இருந்தால், சிறிது பேப்பர் வைத்து தேய்த்து கொள்ளவும்.ஆனால், தோல் மிகவும் கடினமாக இருந்தால் புடலங்காய் முத்திபோய் இருக்கும். நிறைய விதைகள் உள்ளே இருக்கும். அது போல இருக்கும் காயினை வாங்க வேண்டாம்.

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா.

Related Posts Plugin for WordPress, Blogger...