கேழ்வரகு இட்லி - Ragi Idly - Indian Ragi Recipe / Idly Varietiesஇது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் ஸ்பாஞ் போல மென்மையாக இருக்கும்.

கேழ்வரகில் அதிக அளவு கல்சியம்(Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது. டயபெட்டிக், வயதனாவர்களுக்கு எற்ற உணவு.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள் (இட்லி மாவு புளித்தபிறகு)
தேவையான பொருட்கள் :
· கேழ்வரகு மாவு – 2 கப்
· உளுத்தம் பருப்பு – 3/4 கப்
· உப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
v உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும்.
v ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
v கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
v கரைத்த வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்து உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.)
v இதனை குறைந்தது 6 – 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். ( இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.)

v புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் ஊற்றவும்.

v இதனை இட்லி வேகவைப்பது போல 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.

v சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.

கவனிக்க :
நாம் எப்பொழுதும் செய்யும் அரிசி இட்லியில், 1:3 அல்லது 1:4 என்ற விகிததில் தான் உளுந்தினை சேர்த்து இட்லி செய்வோம். அதே போல தான் கேழ்வரகு மாவிலும் செய்யவேண்டும்.
மிக்ஸியில் அரைப்பவர்கள் 1:3 என்று சேர்த்து கொள்ளலாம்.

21 comments:

Sanghi said...

Mmm.. arumayana tiffin.. healthy!!

சிங்கக்குட்டி said...

கேழ்வரகு இட்லி அருமை கீதா.

எடையை குறைக்க நான் கூட முயற்சி பண்ணுகிறேன்.

Shama Nagarajan said...

lovely healthy idly...looks so perfect

Nithya said...

Semma healthy and interesting idly. :)

Unknown said...

கீதா வித விதமா டிஷ் பண்ணி கலக்குறீங்க, அம்மா எப்படி இருக்காங்க? உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Priya Suresh said...

Such a healthy idli, just love this..meen kuzhambu than ithuku sirantha side dish.

Menaga Sathia said...

நான் ஒரு முறை ராகி இட்லி செய்தேன் கல்லு மாதிரி இருந்தது.சரியாக புளிக்காததால் அப்படி இருந்ததான்னு தெரியல.உங்க இட்லி பார்க்க நல்ல மெத்துனு இருக்குப்பா..

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி சங்கீ.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

//கேழ்வரகு இட்லி அருமை கீதா.

எடையை குறைக்க நான் கூட முயற்சி பண்ணுகிறேன்.//

நன்றி சிங்ககுட்டி.

கண்டிப்பாக செய்து பாருங்கள்...என்னுடைய ப்ளாகில் வெளிவந்துள்ள பெரும்பாலும் அனைத்து குறிப்புகளுமே உடல் எடையினை குறைக்க நான் சாப்பிடும் உணவுகள் தான்.

இதுவரை, சுமார் 22 பவுண்ட்ஸ் குறைந்து இருக்கின்றேன். சரியான உடற்பயிற்சியுடன், டயட் உணவு சாப்பிட்டால், குறையாத உடம்பும் குறையும்.

GEETHA ACHAL said...

நன்றி ஷாமா.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

நன்றி நித்யா.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

நன்றி தாமரை..

நீங்க எப்படி இருக்கின்றிங்க...அம்மா நன்றாக இருக்காங்க...குளிர் தான் தாங்கமுடியவில்லை என்று சொல்றாங்க...சந்தோஷ் எப்படி இருக்கான்..

சந்தோஷ் ஸ்குல் எப்படி போகுது...என்ன ரொம்ப நாளாக ஆளயே கானும்..

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

//Such a healthy idli, just love this..meen kuzhambu than ithuku sirantha side dish.//

ப்ரியா...சூப்பர் combination போங்க...அடுத்த முறை இதற்காகவே செய்ய வேண்டும் போல..நன்றி ப்ரியா.

GEETHA ACHAL said...

//நான் ஒரு முறை ராகி இட்லி செய்தேன் கல்லு மாதிரி இருந்தது.சரியாக புளிக்காததால் அப்படி இருந்ததான்னு தெரியல.உங்க இட்லி பார்க்க நல்ல மெத்துனு இருக்குப்பா//

நீங்கள் சொல்வது உண்மை தான் மேனகா...மாவு நன்றாக புளித்தால் தான் இட்லி நன்றாக இருக்கும். அடுத்த முறை செய்து பாருங்கள்..

நான் கொடுத்துள்ள அளவின்படி செய்து பாருங்கள். நன்றாக வரும்.

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Valarmathi Sanjeev said...

i love this,looks so yummy.

GEETHA ACHAL said...

நன்றி நவாஸுதீன்.

நன்றி வளர்மதி.

Abarna said...

I did this recipe and it came out good. Thanks a lot...

ஹுஸைனம்மா said...

கீதா, முழு கேழ்வரகு பயன்படுத்தி இட்லி செய்வது எப்படி என்று சொல்லமுடியுமா? நான் முழு கேழ்வரகு தானியம் வாங்கி ஊறவைத்து அரைத்து, உளுந்துடன் சேர்த்து புளிக்க வைத்துச் செய்தேன். மாவு நன்றாகப் புளித்திருந்தும், இட்லி ஒரு மாதிரி சப்பிப் போய் தட்டையாக, கல்போல வந்தது. உளுந்து கூடுதலா (1:4தான் போட்டேன்) அல்லது ரொம்பப் புளித்துவிட்டதா என்று புரியவில்லை.

நீங்க முடிஞ்சா செய்துபாத்துச் சொல்லுங்க்ளேன்.

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...

நானும் இதே மாதிரி முழு கோதுமையில் செய்து இருக்கின்றேன்...நீங்கள் சொல்வது போல தான் எனக்கும் வந்தது...

அப்படி இருப்பதற்கு காரணம் கேழ்வரகினை ஊறவைத்து அரைப்பது தான்...இதனால் இது மிகவும் அரைப்டுக்கின்றது..இதனை bind செய்வதற்கு ஏதுவாக இருக்காது.

இதுவே கேழ்வரகு மாவு (Dry)யினை வைத்து செய்தால் நன்றாக வரும்.

நீங்க அரைத்த வைத்துள்ள இட்லிமாவுடன், 1 கப் அளவிற்கு ரவை அல்லது கோதுவை ரவை என்று சேர்த்து கல்ந்து பாருங்க...நன்றாக வரும்.

ஆனால் மாவு புளிக்கும் முன்பே ரவையினை சேர்க்க வேண்டும்...இல்லை என்றால் அவ்வளவு நன்றாக இட்லி இருக்காது. வேண்டுமானல் தோசை வரும்.

ஹுஸைனம்மா said...

விளக்கமான பதிலுக்கு நன்றி கீதா.

நீங்க கோதுமை, ரவை என்று இங்கே சொலவது கேழ்வரகைத்தானே? :-))

சரி, இப்ப இந்த முழு கேழ்வரகை சும்மா மிக்ஸியில் அரைச்சு மாவா ஆக்கி, அதை இட்லிக்குப் பயன்படுத்தலாமா? முழு கேழ்வரகு மிக்ஸியில் அரைபட்டுடுமா?

முழு கேழ்வரகைப் பயன்படுத்தி வேறு ரெஸிப்பி எதுவும் தெரியுமாப்பா? (ஹி..ஹி.. ஒரு கிலோ வாங்கிட்டேன், எப்படியாச்சும் காலி பண்ணனுமே!!)

Related Posts Plugin for WordPress, Blogger...