பார்லி தோசை - Barley Dosai
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள் (மாவு புளித்தபிறகு)

தேவையான பொருட்கள் :
· பார்லி மாவு – 2 கப்
· உளுத்தம் பருப்பு – 3/4 கப்
· உப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
v உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும்.
v ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
v பார்லி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
v கரைத்த வைத்த பார்லி மாவுடன் உப்பு + அரைத்து உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.(மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.)
v இதனை குறைந்தது 6 – 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். ( இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.)
v புளித்த மாவினை, தோசையாக ஊற்றவும்.

v சுவையான சத்தான பார்லி தோசை ரெடி.


கவனிக்க :
இதே மாவினை இட்லியும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

பார்லி மாவு கிடைக்கவில்லை என்றால், பார்லியினை ஊறவைத்து அரிசியினை அரைத்துப்பது போல அரைத்து கொள்ளவும்.

39 comments:

Jaleela Kamal said...

கீதா உங்களை நான் பிடித்த பிடிக்காத 10 த்தில் கூப்பிட்டு இருந்தேனே பார்க்கலையா?


இந்த பார்லி தோசை. மொருகலாக இருக்குமா?

ஊறவைத்து அரைத்தால், கொழகொழப்பாகமல் இதே போல் வருமா

Sanghi said...

Wow.. you present all healthy new dishes always.. hats off dear!

S.A. நவாஸுதீன் said...

படத்தை பார்த்தவுடனே பசிக்க ஆரம்பித்துவிட்டது.

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா.

//கீதா உங்களை நான் பிடித்த பிடிக்காத 10 த்தில் கூப்பிட்டு இருந்தேனே பார்க்கலையா?//பார்த்தேன்..இந்த வாரம் வீட்டில் விசேஷம் என்பதால் எழுத முடியவில்லை..கண்டிப்பாக கூடிய சீக்கிரத்தில் எழுதி விடுகின்றேன்..என்னை அன்புடன் அழைத்தமைக்கு மிகவும் நன்றிகள்.

//இந்த பார்லி தோசை. மொருகலாக இருக்குமா?
//
இந்த தோசை மிகவும் மொருகலாக இருக்கும்.. படத்தில் பாருங்கள்...சூப்பராக இருக்கும்..எங்கள் அம்மாவிற்கு இந்த தோசை மிகவும் பிடித்து விட்டது..எப்பொழுதும் இப்ப எல்லாம் வீட்டில் பார்லி தோசை அல்லது கேழ்வரகு மாவு தோசை தான்.
இந்த தோசை மிகவும் மெல்லியதாக வரும்...paper roastமாதிரி சூப்பராக் இருக்கும்.

//ஊறவைத்து அரைத்தால், கொழகொழப்பாகமல் இதே போல் வருமா//நான் ஊறவைத்து உடனே சுட்டு இருக்கின்றேன்(அப்பொழுது புளிக்கவிடவில்லை.)..நன்றாக இருக்கும்.செய்து பாருங்கள்..
ஆனால் பார்லியினை ஊறவைத்து செய்தால் இவ்வளவு மெல்லியதாக வராது..
இதனை பார்லி மாவில் செய்ததால் மிகவும் மெல்லியதாக வந்தது.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சங்கீ.

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நவாஸுதீன்.

Esha Tips said...

அருமை,

Priya Suresh said...

Such a healthy and prefect dosa, Geetha Arumaiya irrukupa..

indosungod said...

I see so many recipes here with barley and this dosai looks super. I made dosai with barley when I had some leftover barley that I could not finish. I forget how the texture was though. Have you tried dosai with steel cut oats?

M.S.R. கோபிநாத் said...

கீதா,

பார்லி தோசை பிரமாதம்.

நான் போன வாரமே உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேன். பார்த்தீர்களா?

Menaga Sathia said...

பார்லி மாவில் செய்ததால்தான் இந்த தோசை முறுகலா சூப்பரா இருக்கு.நான் பார்லியை இதே போல் அரைத்து செய்ததில் இந்த மாதிரி வரவில்லை.உங்களுடையது பார்க்கும்போதே சாப்பிட ஆசையா இருக்கு..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி தமிழ்பூக்கள்.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி ப்ரியா.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி இந்தோ..

//I see so many recipes here with barley and this dosai looks super. I made dosai with barley when I had some leftover barley that I could not finish. I forget how the texture was though. Have you tried dosai with steel cut oats?//

steel-cut oatsயினை ஒரு 20- 30நிமிடங்கள் ஊறவைத்து அரைத்து தோசை செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும். நன்றி.

GEETHA ACHAL said...

//பார்லி தோசை பிரமாதம்.

நான் போன வாரமே உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேன். பார்த்தீர்களா?//

நன்றி கோபிநாத்..

உங்கள் அழைப்புக்கு நன்றி..கூடிய சீக்கிரத்தில் தொடர்பதிவினை எழுதுகிறேன். நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.

//பார்லி மாவில் செய்ததால்தான் இந்த தோசை முறுகலா சூப்பரா இருக்கு.நான் பார்லியை இதே போல் அரைத்து செய்ததில் இந்த மாதிரி வரவில்லை.உங்களுடையது பார்க்கும்போதே சாப்பிட ஆசையா இருக்கு..//

ஆமாம்பா...பார்லி மாவில் சூப்பராக paper roast மாதிரி வரும்...ஆனால் பார்லியினை ஊறவைத்து செய்தால் இவ்வளவு மெல்லியதாக வராது...நன்றி..

Raks said...

Superb looking dosai Geetha,saw your other post too,lovely pictures,thanks for sharing!!

suvaiyaana suvai said...

good diet recipe!!!

பித்தனின் வாக்கு said...

ஆகா இது என்ன பார்லி வாரமா. நன்றி. தோசை மிகவும் நல்ல சன்னமாக வந்து இருக்கின்றது.
வெங்காய சட்டினியுடன் ஒரு ஆறு அல்லது ஏழு தோசை சாப்பிடலாம். நன்றி.

Kanchana Radhakrishnan said...

Dosai looks super

சாருஸ்ரீராஜ் said...

கீதா சூப்பர் தோசை

மதிபாலா said...

தோசையப் பாத்தவுடனே பசி வந்திட்டு..

GEETHA ACHAL said...

நன்றி ராஜேஸ்வரி.

நன்றி ஸ்ரீ.

GEETHA ACHAL said...

//ஆகா இது என்ன பார்லி வாரமா. நன்றி. தோசை மிகவும் நல்ல சன்னமாக வந்து இருக்கின்றது.
வெங்காய சட்டினியுடன் ஒரு ஆறு அல்லது ஏழு தோசை சாப்பிடலாம். நன்றி//..

தங்கள் கருத்துக்கு நன்றி பித்தன்...எப்பொழுதும் இந்த ப்ளாக் பக்கம் பார்லி - ஒட்ஸ் என்று டயட் சமையிலினை தான் அடிக்கடி பார்க்கமுடியும்...ஏன் என்றால் நாங்கள் பல மாதங்களாக டயட்டில் இருக்கோம்...அரிசி சாப்பாடே இல்லாமால்...வெறும் பார்லி - ஒட்ஸ்- கேழ்வரகு - பிரவுன் ரைஸ் என்று தான் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றோம்..

நீங்கள் சொல்வது உண்மை தான்..இந்த தோசையுடன் சட்னி சேர்த்து சாப்பிட்டல் கண்டிப்பாக 5 - 6 தோசை சாப்பிடலாம்..சூப்பராக் இருக்கும்..

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா.

நன்றி சாரு அக்கா.

நன்றி மதிபாலா.

தெய்வசுகந்தி said...

தோசை சூப்பர்

தெய்வசுகந்தி said...

நானும் உங்களை தொடர் எழுத அழைத்திருக்கிறேன்

SUFFIX said...

சத்தான தோசை. டேஸ்ட்டியா இருக்குமா?

Bharathy said...

Barley dosai enakku pudhumai..:)
mikavum nandraka ullathu..Dosai enthavakai analum nan try pannuven..ithuvum seeythu parkiren, viraivil :)

சிங்கக்குட்டி said...

சூப்பர் கீதா, கலக்குங்க.

எங்க வீட்டுல அடிக்கடி உங்க பதிவ பாத்துதான் சமையல் மாறுது...நன்றி :-)

GEETHA ACHAL said...

நன்றி சுகந்தி.

நன்றி ஷஃபிக்ஸ்..கண்டிப்பாக இந்த தோசை சூப்பராக இருக்கும்...செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும்..அப்புறம் சத்தான சுவையான பார்லி தோசை தான் வீட்டில் அடிக்கடி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாரதி..கண்டிப்பாக செய்து பாருங்கள்..சூப்பராக சுவையாக இருக்கும். நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சிங்ககுட்டி.

//எங்க வீட்டுல அடிக்கடி உங்க பதிவ பாத்துதான் சமையல் மாறுது...நன்றி :-)//மிகவும் சந்தோசம் ..உங்கள் மனைவியை மிகவும் விசாரித்தாக சொல்லவும். நன்றி

my kitchen said...

பார்லி தோசை பிரமாதம். Kalakuringa geetha

Swarna said...

Nice to see a blog in tamil wonderful..I am following u .. pls do visit mine

Ammu Madhu said...

அக்கா..இப்பயே செய்ய போறேன்.பாக்கவே மொருகலா இருக்கு.சூப்பர்.

Malar Gandhi said...

Wow, thats indeed a great idea, sounds very healthy to me:)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி செல்வி.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஸ்வர்ணா.கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைகிறேன்.

GEETHA ACHAL said...

நன்றி அம்மு. கண்டிப்பாக செய்து பாருங்கள்..சூப்பராக மொருகலாக வரும். நன்றிகள்.

தங்கள் கருத்துக்கு நன்றி மலர்.

Sumathikarthikeyan said...

Its very healthy dish. First time to know this barley dosa. Will try once. Went through your blog. Its really different.

Your blog will be my favourite.

Related Posts Plugin for WordPress, Blogger...