டயட் பிரியாணி கத்திரிக்காய் - Diet Briyani Brinjalபிரியாணியுடன் சேர்த்து சாப்பிட செய்யும் கத்திரிக்காயா…அதை செய்ய ரொம்ப எண்ணெய் ஊற்ற வேண்டுமே..கூட கத்திரிக்காயினை எண்ணெயில் வேறு பொரிக்க வேண்டுமே என்று எல்லாம் யோசிக்க வேண்டாம்…இந்த செய்முறையில் செய்து பாருங்க…
பொதுவாக பிரியாணிக்கு செய்யும் கத்திரிக்காயினை எண்ணெயில் போட்டு பொரிப்பாங்க. ஆனால், எண்ணெயில் கத்திரிக்காயினை போட்டு ஒருபொழுதும் பொரிக்ககூடாது. அப்படி எண்ணெயில் பொரித்தால் கத்திரிக்காயின் calorie அளவு 3 மடங்காக உயர்ந்து இருக்கும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· குட்டி கத்திரிக்காய் – 1/2 கிலோ
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
முதலில் தாளிக்க :
· எண்ணெய் – 2 தே.கரண்டி
· பட்டை – 1 ,கிராம்பு - 2, ஏலக்காய் – 1
· வெங்காயம் – 1
· இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 4 இலை
சேர்க்க வேண்டிய பொடி வகைகள் :
· மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
· தனியா தூள் – 1/2 தே.கரண்டி
· சீரகம் தூள் – 1/2 தே.கரண்டி
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
அரைத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
· வேர்கடலை – சிறிதளவு
· காய்ந்த தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி
கரைத்து கொள்ள வேண்டியவை :
· புளி – பாதி எலுமிச்சை அளவு
· தண்ணீர் – 1 கப்
செய்முறை :
v குட்டி கத்திரிக்காயினை நான்காக வெட்டவும். கம்பு பக்கம் வெட்டாமல் அதனுடைய எதிர்பக்கம் நான்காக பிளந்து வைக்கவும்.( இப்படி வெட்டும் பொழுது கத்திரிக்காய் உடையாமல் பார்த்து வெட்டவும்.)

v வெங்காயத்தினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியினை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
v வேர்க்கடலையினை நன்றாக வறுத்து கொள்ளவும். தேங்காய் துறுவல் + வறுத்த வேர்க்கடலை + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். (வேர்க்கடலையின் தோலுடனே சேர்த்து அரைக்கலாம்.)

v நான்காக பிளந்து வைத்துள்ள கத்திரிக்காயினை, 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நாண்-ஸ்டிக் பனில் 2 - 3 நிமிடங்கள் அதிக தீயில் வைத்து வதக்கி கொள்ளவும். இதனை தனியாக எடுத்து வைக்கவும்.

v அதே நாண்-ஸ்டிக் கடாயில், முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில்,எண்ணெய் ஊற்றி பட்டை+ கிராம்பு + ஏலக்காய் சேர்த்து தாளித்து பின் வெங்காயம்+ கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.
v வெங்காயம் சிறிது வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
v இத்துடன் சேர்க்க வேண்டிய பொடிவகைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அத்துடன் 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வேகவிடவும்.
v அதன்பின்னர், அரைத்து வைத்துள்ள கலவை + உப்புவினை இதில் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.
v இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
v கடைசியில் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயினை போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி கத்திரிக்காய் ரெடி. இதனை புலாவ், பிரியாணி,சாதம்,சாப்பத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

39 comments:

Mrs.Menagasathia said...

நான் தான் முதல் போணியா?

Mrs.Menagasathia said...

//கத்திரிக்காயினை போட்டு ஒருபொழுதும் பொரிக்ககூடாது. அப்படி எண்ணெயில் பொரித்தால் கத்திரிக்காயின் calorie அளவு 3 மடங்காக உயர்ந்து இருக்கும்.// வாங்க இயற்கை வைத்தியர் இருளம்மா[இது ராஜ் வைத்த பெயர்]

ம்ம்ம் க்ரேவி ரொம்ப சூப்பராக இருக்கு.பார்க்கும் போதே ஆசையா இருக்கு..

kinokids said...

ஆஹா கீதா பிரியாணி கத்தரிக்காய் சூப்பர்..ரொம்ப நல்லா வந்திருக்கு படத்திலேயே அதோட டேஸ்ட் எனக்கு நாக்குல ஊறுதுங்க.நன்றி. என் அம்மாவின் நியாபகம் வரவெச்சுட்டீங்க..அம்மா ரொம்ப நல்லா செய்யுவாங்கப்பா உங்களை மாதிரியே....எவ்வளோ நாளாச்சு அம்மா கை சாப்பாடு சாப்பிட்டு.ஏங்க வெச்சுட்டீங்க போங்க....:))

Priya said...

Brinjal masala looks tempting and delicious Geetha..will try soon..

Suvaiyaana Suvai said...

looks tempting!!!!!!!

Anonymous said...

wow super geethaa

suganthi

ஹர்ஷினி அம்மா said...

இந்த வாரம்தான் குட்டி கத்திரிகாய் வாங்கினேன்... நாளைக்கு கண்டிப்பா இந்த முறையில் தான் செய்யனும்.

கீதா உங்க calorie இன்பர்மெசன் சூப்பர்

ராஜ் நல்ல பெயராதான் வைச்சுருக்காரு :-)

கோபிநாத் said...

பிரியாணிக்கு வெஜ்ல இதைவிட சூப்பர் காம்பினேஷன் கிடையாது

கோபிநாத் said...

பிரியாணிக்கு வெஜ்ல இதைவிட சூப்பர் காம்பினேஷன் கிடையாது

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருக்குங்க, ஒரு மாசம் கழித்து செய்து பார்க்கின்றேன். நன்றி.

Pavithra said...

Paaaaaaaaaaaarkeve vaai urudhu... nice side dish.

S.A. நவாஸுதீன் said...

ஆகா. போட்டோவைப் பார்த்தாலே பசி எடுக்குதே.

Geetha Achal said...

//நான் தான் முதல் போணியா?//போணி நல்லா போச்சுனா சரி தான்....

// வாங்க இயற்கை வைத்தியர் இருளம்மா[இது ராஜ் வைத்த பெயர்]///என்ன மேனகா இப்படி சொல்லிவிட்டிங்க...

ம்ம்ம் க்ரேவி ரொம்ப சூப்பராக இருக்கு.பார்க்கும் போதே ஆசையா இருக்கு..//
நன்றி...செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்

Geetha Achal said...

மிகவும் நன்றி kino.

//என் அம்மாவின் நியாபகம் வரவெச்சுட்டீங்க..அம்மா ரொம்ப நல்லா செய்யுவாங்கப்பா உங்களை மாதிரியே....எவ்வளோ நாளாச்சு அம்மா கை சாப்பாடு சாப்பிட்டு.ஏங்க வெச்சுட்டீங்க போங்க....:))//அம்மா நியாபகம் வந்துவிட்டதா...

என்னதான் நாம் சமைச்சாலும்,அம்மா சமையல் மாதிரி வராது...அம்மா செய்து கொடுத்து சாப்பிட அனைவருக்கும் ஆசை கண்டிப்பாக இருக்கும். நன்றி.

Geetha Achal said...

நன்றி ப்ரியா.கண்டிப்பாக செய்து பாருங்கள் ..சுவையாக இருக்கும்.

நன்றி ஸ்ரீ.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுகந்தி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்ரி ஹர்ஷினி அம்மா.

//கீதா உங்க calorie இன்பர்மெசன் சூப்பர்

ராஜ் நல்ல பெயராதான் வைச்சுருக்காரு :-)//போங்க நீங்களுமா..இருந்தாலும் நல்ல பெயர் தானே...நன்றிகள் பல.

Geetha Achal said...

//பிரியாணிக்கு வெஜ்ல இதைவிட சூப்பர் காம்பினேஷன் கிடையாது//
நன்றி கோபிநாத. உண்மை தான்..எனக்கும் பிரியாணியை இதனுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும்.

அதனாலே இதனுடைய பெயரினை எப்பொழுதும் பிரியாணி கத்திரிக்காய் என்றே சொல்லுவேன்..இதனை எண்ணெய் கத்திரிக்காய் என்று கூட சொல்லுவாங்க.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி பித்தன். கண்டிப்பாக நேரம் கிடைக்கும்பொழுது செய்து பாருங்கள்.நன்றி.

Geetha Achal said...

நன்றி பவித்ரா.

நன்றி நவாஸுதீன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!

ஹர்ஷினி அம்மா said...

கீதா எனக்கு ஒரு சந்தேகம் வாங்க உடனே..

காய்ந்த தேங்காய்தான் நீங்க உபயோகிப்பீங்களா... இல்லே தேங்காயை வருத்து சேர்க்கலாமா

இல்லை ட்ரை தேங்காலே கலோரி குறைவா இருக்குமா? :-)

ஸாதிகா said...

குட்டிகத்திரிக்காயில் கிரேவி..பார்க்கவே நன்றாக உள்ளது.

வி. நா. வெங்கடராமன். said...

Wah! The picture itself tempts to cook the same and eat it though i do not like Brinjal.

Venkat Nagaraj

Geetha Achal said...

//காய்ந்த தேங்காய்தான் நீங்க உபயோகிப்பீங்களா... இல்லே தேங்காயை வருத்து சேர்க்கலாமா

இல்லை ட்ரை தேங்காலே கலோரி குறைவா இருக்குமா? :-)//

ஹர்ஷினி அம்மா, எனக்கு இங்கு கடைகளில் தேங்காய் வாங்கி வந்தாலும் சில சமயம் அழுகி போய்விடுகின்றது. அதனால, Dried Unsweetened Coconut Flakes வாங்கிவைத்து கொள்வேன்.

வேண்டும் என்கின்ற சமயத்தில் அதனை உபயோகிப்பேன்.

ஆனால், Dried Coconutயைவிட எப்பொழுதும் Fresh Coconut தான் எல்லா விதத்திலும் நல்லது.

Calories சம்மந்தமாக பார்த்தால், Calories in 1 1/2 cup Fresh coconut = 1 cup Dried coconut.
Dried Coconutயில் , Fresh coconutயைவிட கலோரிஸ் அதிகம்.(சக்கரை அளவும் அதிகமாக தான் கணப்படுகின்றது.)

தேங்காய் என்று இல்லை, எந்த ஒரு உணவு காய்ந்தநிலையில் இருந்தால் அதில் சக்கரை மற்றும் கலோரிஸ் அதிகமாக தான் இருக்கும்.

நீங்கள் fresh coconutயினை உபயோகிப்பது என்றால், வறுத்து கொள்ளவும்.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா ஆன்டி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வெங்கட்.

ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் அப்புறம், கத்திரிக்காயினை ரொம்பவும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிடுவிங்க...நன்றி.

Viji said...

ஹாய் கீதா
உங்க ரேசிபே எல்லாமே சூப்பர்.நான் நேத்தைக்கு தான் கடைக்கு போய் தக்காளி வாங்கி வந்து உங்க தக்காளி ஊறுகாய் செய்தேன்.இப்ப உங்க கத்திரிக்காய் பார்த்தவுடன் சாப்டனும் போல இருக்கு.ஆனா வீட்டுல கத்திரிக்காய் இல்ல.இதுக்காக ஒரு தடவை போகணும்(கடை என்னமோ எங்க வீடு எதிர்ல தான்).நீங்க வாரம் என்ன சமையல் நு முன்னாடியே சொலிட நான் அதை எல்லாம் வாங்கி வச்சுகிட்டு ரெடியா இருப்பேன் இல்ல??அப்புறம் gtalk ல எப்ப வரீங்க.
நான் யாருன்னு கண்டுபிடிசீங்கள?அறுசுவைல இருக்கே

Malar Gandhi said...

Perfect, me too do the same way as you described here...yes never intended to deep fry brinjals. All I want is biriyani now..you are making me hungry:)

சிங்கக்குட்டி said...

சூப்பர் கீதா, இது "தால்ஸா" தான?

ஊரில் இருக்கும் போது எல்லா இஸ்லாமிய நண்பர்கள் வீட்டிலும் தேடி போய் சாப்பிடுவேன் (பிரியாணியுடன் சேர்த்துத்தான்)

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி விஜி.

தக்காளி ஊறுகாய் செய்தததில் மிகவும் மகிழ்ச்சி.

கத்திரிக்காயினையும் செய்து பாருங்கள் சூப்பாராக இருக்கும்...

கண்டிப்பாக உங்களுடன் பேசுகிறேன்..எனக்கு geethaachal@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்களேன்.நன்றி விஜி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மலர்.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சிங்ககுட்டி.

இது பெயர் தாளிச்சா கிடையாது..அதில் non-veg & பருப்பு வகை எல்லாம் சேர்ப்பாங்க..

இதனை எண்ணெய் கத்திரிக்காய் என்று சொல்லுவாங்க..

எனக்கும் மிகவும் பிடிக்கும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட...

RAD MADHAV said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

my kitchen said...

பிரியாணி கத்தரிக்காய் சூப்பர்..ரொம்ப நல்லா வந்திருக்கு

ஸ்வர்ணரேக்கா said...

ம்... முழுக்கத்திரிக்காய் சமையல்... அதுவும் குட்டி குட்டியா கத்திரிக்காய்... சூப்பர்...கீதா..

(இப்படி வெட்டும் பொழுது கத்திரிக்காய் உடையாமல் பார்த்து வெட்டவும்.) நல்ல டிப்ஸ்...

படம் சூப்பர்.. பாத்தாலே சாப்பிடணும் போல இருக்கு...

Sangkavi said...

ஆஹா....... இப்பவே பசிக்குதே......

ஹர்ஷினி அம்மா said...

செய்து பார்த்தாச்சு கீதா ... வேர்கடலை மணத்துடன் நல்லா இருந்துச்சு..சுவையும் நல்ல இருந்தது..நான் ஃபிரஸ் தேங்காய் தான் உபயோகித்தேன்.. நன்றி :-)

Mrs.Menagasathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html

kannan said...

seithu paarthen rompanalla vanthuiruku ithan vasam en manathu

Related Posts Plugin for WordPress, Blogger...