மாங்காய் இஞ்சி ஊறுகாய் - Mango Ginger Pickle / Mankai Inji


மாங்காய் இஞ்சி – இதனை இஞ்சி என்றோ அல்லது மாங்காய் குடும்பத்தினை சேர்ந்தது என்றோ தான் நாம் அனைவரும் நினைத்து கொண்டு இருக்கின்றோம்..இதனை வெட்டும் பொழுது மாங்காய் போல் வாசனையாகவும், பார்ப்பதற்கு இஞ்சி போலவும் இருக்கும். ஆனால் உண்மையில் இது மஞ்சள் (Turmeric) குடும்பத்தினை சேர்ந்தது.

இதனை சாப்பிடுவதால் அஜீரண கோளாறு, ஆஸ்துமா, அலர்ஜி, தோல் வியாதி போன்றவை குணமடையும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

· மாங்காய் இஞ்சி – 1/2 கிலோ

· நல்லெண்ணெய் , உப்பு – தேவையான அளவு

· மிளகாய் தூள் – 2 மேஜை கரண்டி

· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

· பெருங்காயம் தூள் – சிறிதளவு

· எலுமிச்சை பழம் – 1 பெரியது

வறுத்து அரைத்து கொள்ள :

· கடுகு – 1/4 தே.கரண்டி

· வெந்தயம் – 1 தே.கரண்டி

கடைசியில் தாளிக்க :

· நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி

· கருவேப்பில்லை – சிறிது

செய்முறை :

v மாங்காய் இஞ்சியினை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

v சுத்தம் செய்த மாங்காய் இஞ்சியினை துறுவி வைக்கவும். ( 1/2 கிலோ மாங்காய் இஞ்சிக்கு சுமார் 2- 2 1/2 கப் துறுவல் கிடைக்கும். ) எலுமிச்சை பழத்தில் இருந்து சாறினை பிழிந்து கொள்ளவும்.

v கடாயில், கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாங்காய் இஞ்சி துறுவல் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வதக்கவும்.(இடையிடையே சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும்.)

v ஒரு தாளிப்பு கடாயில், கடுகு + வெந்தயம் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

v வறுத்த பொருட்கள் + மிளகாய் தூள் + பெருங்காயம் தூள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடித்து கொள்ளவும்.

v மாங்காய் இஞ்சி நன்றாக வதங்கியதும், எலுமிச்சை சாறு + பொடித்து வைத்துள்ள பொடியினை சேர்த்து கிளறி 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

v கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து இதில் சேர்த்து கிளறவும். சுவையான மாங்காய் இஞ்சி ஊறுகாய் ரெடி.

கவனிக்க :

இந்த ஊறுகாயினை உடனே சாப்பிடலாம். இதனை 1 வாரம் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். ப்ரிஜில் வைத்தால் 1 மாதம் வரை கூட நன்றாக இருக்கும்.

42 comments:

sarusriraj said...

சூப்பர் ஊறுகாய், வாய் ஊறுது செய்துவிட்டு சொல்கிறேன்

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

இந்த வகை இஞ்சி ஜித்தாவில் நான் பார்த்தது இல்லையே!! பாட்டிலில் வரும் இஞ்சி ஊறுகாய் தான் நாங்கள் வாங்குவதுண்டு.

S.A. நவாஸுதீன் said...

கேரளத்திலிருந்து விடுமுறைக்கு சென்றுவந்த நண்பர் கொண்டுவந்திருந்தார். ரொம்ப டேஸ்ட்டியா இருந்தது. இந்த செய்முறையையும் அவரிடம் காண்பித்து செய்து பார்க்கணும். நன்றி சகோதரி

RAKS KITCHEN said...

I hate ginger but this one I love,superb recipe,mouthwatering now!!

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

Geetha Achal said...

நன்றி ஷஃபிக்ஸ்.

//இந்த வகை இஞ்சி ஜித்தாவில் நான் பார்த்தது இல்லையே!! பாட்டிலில் வரும் இஞ்சி ஊறுகாய் தான் நாங்கள் வாங்குவதுண்டு.//இது எல்லா கடைகளிலும் கிடைக்குமா என்று தெரியவில்லை..

நான் இருக்கும் இடத்திலும் இந்த மாங்காய் இஞ்சி எனக்கு அவ்வளவாக கிடைக்காது..ஆனா New Jersey போனால் கண்டிப்பாக கிடைக்கும்..அப்படி ஒரு முறை போகும் பொழுது வாங்கி வந்து செய்தேன்...செய்தவுடனே காலியாகிவிட்டது...

எங்கள் வீட்டில் இதனை விரும்பி சாப்பிடுவோம்..சுடான சத்ததுடன் கலந்து சாப்பிட்டால் நல்லெண்ணெய் + மாங்காய் + இஞ்சி மணத்துடன் சுவையாக இருக்கும். இதனை இட்லி, தோசைக்கும் தொட்டுகொள்ளலாம்..அருமையான ஒரு ஊறுகாய்..

Geetha Achal said...

நன்றி நவாஸுதீன்.

//கேரளத்திலிருந்து விடுமுறைக்கு சென்றுவந்த நண்பர் கொண்டுவந்திருந்தார். ரொம்ப டேஸ்ட்டியா இருந்தது. இந்த செய்முறையையும் அவரிடம் காண்பித்து செய்து பார்க்கணும். நன்றி சகோதரி//கண்டிப்பாக அவரிடம் காட்டுங்கள்...இந்த செய்முறையிலும் ஒரு முறை செய்து பாருங்கள்...

மிகவும் நன்றி .

Geetha Achal said...

நன்றி ராஜேஸ்வரி.

//I hate ginger but this one I love,superb recipe,mouthwatering now!!// இந்த மாங்காய் இஞ்சி ஊறுகாய் சூப்பராக இருக்கும் ராஜி..விரும்பினால் ஒரு முறை செய்து பார்ங்கள்...சூப்பராக இருக்கும் . நன்றி.

Deivasuganthi said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஊறுகாய் இது.New Jersey ல எங்க கிடைக்கும்? இங்க என்ன பேர்ல கிடைக்கும்னு சொல்லறீங்களா? நானும் தேடிட்டே இருக்கிறேன்.

indosungod said...

This reminds me of my grandmother. She was famous for making this pickle but usually adds them as pieces to lemon pickle. There was a big queue waiting for a bottle. I have occasionally seen this in the grocery stores here. Can't wait to give this thokku a try.

PUNITHAM said...

SUPER PICKLE MOUTH WATERING. PICTURE ALSO LOOKS NICE

Shobana senthilkumar said...

Nakkku uuruthu geetha:)

Mrs.Menagasathia said...

வாவ் அசத்தலான ஊறுகாய்.பார்க்கும்போதே சாப்பிட தோனுது.ஆசையை கிளப்பிட்டீங்களே...

ப்ரொபைல் போட்டோ அழகாயிருக்கு.பாப்பாவின் ஆண்டாள் போட்டோ ரொம்ப க்யூட்!!

Geetha Achal said...

//எனக்கு ரொம்ப பிடிச்ச ஊறுகாய் இது.New Jersey ல எங்க கிடைக்கும்? இங்க என்ன பேர்ல கிடைக்கும்னு சொல்லறீங்களா? நானும் தேடிட்டே இருக்கிறேன்.//

நன்றி சுகந்தி.. இதனை Patel Groceryயில் தான் வாங்கினேன்...Subzi Mandiயிலும் கூட இருக்கும்..படத்தில் இருப்பது போலவே இருக்கும்...கொஞ்சம் சுரண்டி பார்த்தால் மாங்காய் வாசை வரும்...தேடி பாருங்கள்..கண்டிப்பாக கிடைக்கும்.

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இந்தோ...

கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி.

Geetha Achal said...

தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி புனிதம் அக்கா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.

கண்டிப்பாக இந்த செய்முறையில் ஒரு முறை செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்.

//ப்ரொபைல் போட்டோ அழகாயிருக்கு.பாப்பாவின் ஆண்டாள் போட்டோ ரொம்ப க்யூட்!!//அக்ஷ்தாவிற்கு இங்கு உள்ள கோவிலில் மொட்டை அடிக்க போகிறோம் ..அதனால் தினமும் விதவிதமாக போட்டோ எடுகிறோம்...அதான்...நன்றி மேனகா.

பித்தனின் வாக்கு said...

நல்ல ஊறுகாய். என் கை துடிக்கின்றது. படத்தில் இருக்கும் ஊறுகாயை எடுத்து அப்படியே சாதத்தில் போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட்டா ஆகா அருமை.

இந்த மாவிஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் எழுமிச்சை பிழிந்து, பச்சை மிளகாயுடன் எண்ணை அதிகமாக விட்டு தாளித்து கொட்டி, உப்புப் போட்டுக் கலந்தால், நல்ல தொட்டுக் கொள்ள ஊறுகாய் ரெடி.

எங்க அப்பாவிற்கு இது மிகவும் பிடிக்கும். மார்க்கொட்டில் பார்க்கும் போது எல்லாம் வாங்கி வந்துவிடுவார். அம்மா திட்ட ஆரம்பித்தாலும் சுவையாக செய்து தருவார். அவரும் நான் கூறியபடி பிசைந்து சாப்பிடுவார். தோசை முதல் அனைத்துக்கும் தொட்டு சாப்பிடுவார். அம்மா அப்பாவைத் திட்டினாலும் சாப்பிட அவருக்கு அதிகமாக தருவார். அம்மாவிற்கு, அவரின் பி பி பத்தி கவலை. உப்பும் காரமுமா சாப்பிட்டால் பி பி ஏறிவிடும் என்பார். அவர்களின் எழுபது ஆண்டு கால தாம்பத்தியத்தில் இது அடிக்கடி நடக்கும்.

உங்களின் பதிவைப் படிக்கையில் என் கண்கள் பணித்தன, இதயம் கணத்தது. சென்ற வருடம் முன் மறைந்த என் தந்தையின் மறைவும், இப்போ என் அம்மாவின் தனிமையும் நினைத்து. நன்றி.

ஸாதிகா said...

மாங்காய் இஞ்சி ஊறுகாய்..பார்க்கவே அழகாக இருக்கின்றது.எவ்வளவு எண்ணெய் தேவைப்படும் என்று போட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.படத்தில் டிரையாக உள்ளதே ஊறுகாய்.நிறைய எண்ணெய் சேர்க்கத்தேவை இல்லையோ?

my kitchen said...

Remembering my college days,In our canteen they will prepare regularly this pickle,tastes good with curd rice,but i dont know the recipe.Thanks for the recipe.

Valarmathi said...

Wow.... superb recipe, looks yummy.

PriyaRaj said...

Urukai romba nalla eruku geetha...unga aaruthalaana comments ku romba nandri pa..maanasuku romba santhoshama eruinthuchu ...thanx for thinking of me ..Iam lucky to have a friend like u ....thank u soo much for ur concern dear...

Priya said...

Wwoww romba supera irruku Geetha, mouthwatering pickles!

Priya said...

new york la erunthukittu namma parampariya samayalla kalakuringa..namma oru unavu mela ungalukku erukkura mariyathayai naan paratturen...neeran kedakum boothu etha yellam seyeiyanum nu asai paduren

Geetha Achal said...

நன்றி பித்தன்.

//படத்தில் இருக்கும் ஊறுகாயை எடுத்து அப்படியே சாதத்தில் போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட்டா ஆகா அருமை.//ஆகா..சூப்பரரோ சூப்பராக இருக்குமே....

//இந்த மாவிஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் எழுமிச்சை பிழிந்து, பச்சை மிளகாயுடன் எண்ணை அதிகமாக விட்டு தாளித்து கொட்டி, உப்புப் போட்டுக் கலந்தால், நல்ல தொட்டுக் கொள்ள ஊறுகாய் ரெடி. //கண்டிப்பாக அடுத்த முறை இந்த செய்முறையின் படி செய்து பார்க்கிறேன்..நன்றி.

//உங்களின் பதிவைப் படிக்கையில் என் கண்கள் பணித்தன, இதயம் கணத்தது. சென்ற வருடம் முன் மறைந்த என் தந்தையின் மறைவும், இப்போ என் அம்மாவின் தனிமையும் நினைத்து. நன்றி.//உங்களுக்கு அம்மாவிற்கு ஆறுதலாக இருங்கள்...பாவம் தனிமை மிகவும் கொடுமையானது...நன்றி.

Geetha Achal said...

நன்றி ஸாதிகா ஆன்டி.

//எவ்வளவு எண்ணெய் தேவைப்படும் என்று போட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.படத்தில் டிரையாக உள்ளதே ஊறுகாய்.நிறைய எண்ணெய் சேர்க்கத்தேவை இல்லையோ?//

2 - 2 1/2 கப் துறுவிய மாங்காய் இஞ்சிக்கு நான் சுமார் 3/4 கப் எண்ணெய் உபயோகித்து இருப்பேன்.

அதுவே போதுமனாதாக இருந்தது... அதிலேயே நிறையே எண்ணெய் வெளியில் வந்துவிட்டது...படத்தில் எண்ணெய் அவ்வளவாக தெரியவில்லை..

2 1/2 கப் போட்டு செய்தால் சுமார் 1 கப் தான் ஊறுகாய் கிடைக்கும்.

நீங்கள் விரும்பினால் 1 கப் எண்ணெய் சேர்த்து செய்து பாருங்கள்...நன்றாக இருக்கும். நன்றி.

Geetha Achal said...

நன்றி செல்வி..உங்களுக்கும் மலரும் நினைவுகளா..மிகவும் மகிழ்ச்சி ...அந்த நினைவுகளை நினைப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி...இனியமான காலங்கள்..அதிலும் கல்லூரியில்...சூப்பப்ர்ப்...

நன்றி வளர்மதி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி "என்சமையல்" ப்ரியா...எப்படி இருக்கின்றிங்க...உங்களை போன்ற தோழி கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோசம்..வீட்டில் அனைவரும் நலமா..உங்கள் பயனம் உங்களுக்கு நிம்மதியும் சந்தோசத்தையும் தர வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.
நன்றி..

அன்பு தோழி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா.

//new york la erunthukittu namma parampariya samayalla kalakuringa..namma oru unavu mela ungalukku erukkura mariyathayai naan paratturen...neeran kedakum boothu etha yellam seyeiyanum nu asai paduren//மிகவும் மகிழ்ச்சி ப்ரியா...நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செய்து பாருங்கள்..

என்ன..உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், நமக்கு எல்லாம் தினமும் ஒரு வேலையாவது நம்மூர் சமையலினை சாப்பிட்டால் தான் நிம்மதியாக இருக்கும்..அதனால தான் இப்படி எல்லாம்...

Malar Gandhi said...

Nice to see a beautiful Thamizh blog around. Good job, dear. B/n it reminds my grandmother's 'maa-inji oorughai'. Lovely recipe, right. Bet it tasted perfect with thayir saadham.

C 3 said...

sakotharikku en paarattukkal, modern oven il kooda nam naatu (veetu) samayalai ethnai vidhamaga samaika mudiyum ena aarvamaaai sollum /seiym thanagal muyarchikku indiavilirindhu,chennaiyilirindhu intha sakodharanin vaazthukkal
vaazhga/valarga!!!

சிங்கக்குட்டி said...

ஊறுகாய் ரொம்ப நல்ல இருக்கு கீதா :-)

//இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.//

ஸாரி கீதா நாங்க "டி" தான் அடிப்போம் :-) ஹ ஹ ஹ சும்மா?

Padhu said...

I love manga ingi .I will get it whenever I find it in the market to make pickles .Your version is a bit different .New comer here .Do visit
http://padhuskitchen.blogspot.com/

Jaleela said...

http://allinalljaleela.blogspot.com/2009/11/10.html


வாங்க கீதா ஆச்சல் இங்கு.
உங்களை பத்துக்கு பத்தில் அழைத்து இருக்கேன்.
சூப்பரான மாங்காய் இஞ்சி ஊறூகாய் பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது. .

Suvaiyaana Suvai said...

maanga injsi ippa thaan paarkiren:( kelvipaddathu kidaiyaathu paarkka nallaa iruku 2 injsikkum enna different!!

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மலர்...பாட்டி சமையல் என்றால சொல்லவே வேண்டாம்...அருமையாக தான் இருக்கும்..எனக்கும் எங்க பாட்டி சமையல் நியாபம் வந்துவிட்டது...

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி C3.பெயர் சொல்லுங்களேன்...சகோதரரே...

Geetha Achal said...

ஊறுகாய் ரொம்ப நல்ல இருக்கு கீதா :-)

////இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.//

ஸாரி கீதா நாங்க "டி" தான் அடிப்போம் :-) ஹ ஹ -ஹ சும்மா?//

நன்றி சிங்ககுட்டி...வீட்டில் அனைவரும் நலமா..

நான் அப்படி போடுவத்ற்கு காரணம்..சில நபர்கள் என்னுடைய செய்முறையினை அப்படியே காப்பி அடுத்துவிடுகின்றனர்...அதற்காகவே அப்படி எழுதி இருக்கின்றேன்..

ஒரு குறிப்பினை காப்பி அடித்து எழுதுபவர்கள் எல்லாம் எதற்காக ஒரு ப்ளாகினை வைத்து கொள்ளவேண்டும் சொல்லுங்க...

எதை எழுதினாலும் சுயமாக எழுத வேண்டாமா என்ன...

நன்றி சிங்ககுட்டி..

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி padhu...

Geetha Achal said...

தங்கள் என்னை அழைத்தற்கு மிகவும் நன்றீ...தொடர் பதிவினை கூடிய சீக்கிரத்தில் எழுதிகிறேன்..நன்றி ஜலிலா அக்கா.

Geetha Achal said...

நன்றி ஸ்ரீ.

இந்த இஞ்சியினை ஊறுகாய் போட பயன்படுத்துவார்கள்..

இதனை பற்றி முன்னுரையில் எழுது இருக்கின்றேன் பாருங்கள்..

இது மாங்காய் மாதிரியே சுவையில் இருக்கும்.

கவிநயா said...

பார்த்தா ஆசையா இருக்கு :) ஆனா எங்க ஊர் கடையில் நான் பார்த்ததில்லை :(

Related Posts Plugin for WordPress, Blogger...