ஒட்ஸ் கத்திரிக்காய் ப்ரை - Oats Eggplant Fryசமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பெரிய கத்திரிக்காய் (Eggplant ) – 1
· ஒட்ஸ் – 1/2 கப்
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· உப்பு – 1/2 தே.கரண்டி
· எண்ணெய் – சிறிதளவு
செய்முறை :
v ஒட்ஸினை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
v பொடித்த ஒட்ஸ் + மிளகாய் தூள் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
v கத்திரிக்காயினை அரை இன்ச் அளவிற்கு வட்டவடிவமாக வெட்டி வைக்கவும்.
v வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய், ஒவ்வொன்றாக கலந்து வைத்துள்ள மாவில் நன்றாக இரண்டுபக்கமும் பிரட்டி வைக்கவும்.

v தோசைகல்லினை காயவைத்து, கத்திரிக்காயினை சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய ஒட்ஸ் கத்திரிக்காய் ப்ரை ரெடி.

கவனிக்க:
கத்திரிக்காய் அதிக எண்ணெய் இழுக்கும். அதனால் ஒருபொழுதும் கத்திரிக்காயினை எண்ணெயில் போட்டு பொரிக்க கூடாது.
அவரவர விருப்பதிற்கு எற்றாற் போல மிளகு தூள், கரம்மசாலா என்று சேர்த்து கொள்ளலாம்.

18 comments:

S.A. நவாஸுதீன் said...

ஆகா ரொம்ப ஈசியாத்தான் இருக்கு. நன்றி சகோதரி

Menaga Sathia said...

நல்ல ரெசிபி!!

சாருஸ்ரீராஜ் said...

கீதா ஓட்ஸ் கத்திரிக்காய் பிரை சூப்பர் செய்து பார்துவிட்டு சொல்கிறேன்.

M.S.R. கோபிநாத் said...

வித்தியாசமான ரெசிபி.

Padmajha said...

Looks easy and tasty!Sure to try it out.Will let you know how it turned out!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

super akka

Priya Suresh said...

Romba puthusana eggplant fry, looks superb Geetha..

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. இது நல்லா ஃப்ரை ஆக தட்டுப் போட்டு மூடலாமா. நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி நவாஸுதீன்.

நன்றி மேனகா.

நன்றி சாரு அக்கா.கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்...மிகவும் சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

நன்றி கோபிநாத்.

நன்றி பத்மாஜா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

நன்றி ஸ்ரீ.

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா.

நன்றி பித்தன். கத்திரிக்காயினை தோசை கல்லில் போட்டு ப்ரை செய்யும் பொழுது வேண்டுமானால் தட்டு போட்டு முடிவேகவிடலாம். ஆனால் அவ்வளவு க்ரிஸ்பியாக வராது. அதனால் நான் தட்டு போட்டு முடிவேகவைக்க மாட்டேன்.

Valarmathi Sanjeev said...

Wow supera irukku, looks yumm.

Raks said...

Wow,i love brinjals,will sure try this one tomorrow !

GEETHA ACHAL said...

நன்றி வளர்மதி.

நன்றி ராஜேஸ்வரி. கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.நன்றி.

தெய்வசுகந்தி said...

சூப்பர்ங்க கீதா. நான் bread crumbs போட்டு செஞ்சிருக்கிறேன். ஓட்ஸ்ல இனிமேல் செஞ்சு பார்க்கிறேன்.

GEETHA ACHAL said...

நன்றி சுகந்தி.கண்டிப்பாக செய்து பாருங்கள். நன்றாக சுவையாக இருக்கும்.

uma said...

nalla vidhyasamana recipe

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி உமா.

Related Posts Plugin for WordPress, Blogger...