இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2011


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....வாங்க வந்து கேக் எடுத்து கொள்ளுங்க....

அன்புடன், கீதா ஆச்சல்

பாகற்காய் பிட்லே - Bittergourd Gravy


பாகற்காய் என்றாலே கசப்பு என்பதால் பெரும்பாலும் யாரும் அதனை விரும்பி சாப்பிடுவதில்லை…ஒரு முறை இந்த பாகற்காய் பிட்லே செய்து சாப்பிட்டு சொல்லுங்க…அப்பறம் வாரம் ஒரு தடவையாவது பாகற்காய் கண்டிப்பாக மெனுவில் இடம்பெறும்….

திருமதி.பவித்ரா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த பாகற்காய் பிட்லே….பிட்லே என்பது கடலைப்பருப்பினை வைத்து செய்யப்படும் குழம்பு வகை…..மிகவும் சுவையாக இருந்தது…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பாகற்காய் – 1/4 கிலோ
·         புளி – நெல்லிக்காய் அளவு

வேகவைத்து கொள்ள வேண்டிய பருப்பு வகைகள் :
·         கடலைப்பருப்பு – 1/2 கப்
·         துவரம்பருப்பு – 1/4 கப்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பூண்டு – 4 பல் நசுக்கியது

கடைசியில் சேர்க்க :
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை :
·         பாகற்காயினை நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பு + துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் 2 – 3 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பாகற்காயினை போட்டு 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.

·         புளியினை 2 கப் தண்ணிரில் கரைத்து கொள்ளவும். புளி தண்ணீர் + தூள் வகைகள் கலந்து பாகற்காயில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

·         சிறிது நேரம் கொதிக்கவிட்ட பிறகு, வேகவைத்துள்ள பருப்பினை இதில் சேர்த்து மேலும் 4 -5 நிமிடங்கள் வேகவிடவும்.

·         கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதனை சாதம், தயிர், தோசை, சாப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
விரும்பினால் 1 தே.கரண்டி சக்கரை அல்லது வெல்லம் சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.

ஒரு துண்டு தேங்காயினை அரைத்து குழம்பில் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

சிக்கன் பெப்பர் வறுவல் - Chicken Pepper Fry


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
·         சிக்கன் – 1/2 கிலோ
·         வெங்காயம் – 2 பெரியது
·         இஞ்சி – 1 பெரிய துண்டு
·         பூண்டு – 10 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         மிளகு தூள் – 2 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         பட்டை, கிராம்பு,ஏலக்காய் – 1
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

கடைசியில் சேர்க்க :
·         மிளகுதூள் – 1 தே.கரண்டி
·         எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
·         கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை :
·         சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். சிக்கனுடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

·         வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டு கடாயில் போட்டு வதக்கி சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும். இஞ்சி + பூண்டினை நன்றாக நசுக்கி வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

·         அத்துடன் அரைத்த வெங்காயம் + நசுக்கிய இஞ்சு,பூண்டினை சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.

·         அதனுடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி தட்டு போட்டு மூடி வேகவிடவும். 3 – 4 நிமிட்த்திற்கு ஒருமுறை கிளறிவிடவும்.


·         சிக்கன் வெந்ததும் கடைசியில் சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறி மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான சிக்கன் பெப்பர் வறுவல்  ரெடி.இதனை சாதம், குழம்பு, கலந்த சாதம், சாப்பாத்திரசம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
மிளகுதூளினை Freshஆக பொடித்து கொள்ளவும்

கிரேவியாக விரும்பினால் வெங்காயத்தின் அளவினை கூட்டி கொள்ளவும்.

அதே போல, கிரேவிக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்

கோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Cracked Wheat Idly Mavu kozhukattai


எப்பொழுதும் இட்லி மாவு மீந்துவிட்டால் அதில் ஊத்தாப்பம் , தோசை என்று எதாவது செய்வதுண்டு….இந்த முறையும் அதே மாதிரி தான் ரவையினை வறுத்து கொட்டி தோசை சுடலாம் என்று நினைத்தேன்…ஆனால் ஒரு மாறுதலுக்காக, கோதுமை ரவையினை வறுத்து கொட்டி உருண்டைகாளாக பிடித்து வேகவைத்தேன்…மிகவும் அருமையான சத்தான காலை சிற்றுண்டி இனிதாக முடிந்தது…

அடுத்த முறை இதில் காய்கள் சேர்த்து செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றேன்… நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  • இட்லி மாவு – 1 கப்
  • கோதுமை ரவை – 1 கப்
  • உப்பு – சிறிதளவு

தாளித்து சேர்க்க :
  • எண்ணெய் – 1 தே.கரண்டி
  • கடுகு – தாளிக்க
  • காய்ந்தமிளகாய் – 2
  • கருவேப்பில்லை – சிறிதளவு
  • உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
கோதுமை ரவையினை வறுத்து கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வைக்கவும்.

இட்லி மாவு + வறுத்த ரவை + தாளித்த பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாக கலந்து கொள்ளவும். இதனை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

உருண்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்கவும்.

இட்லி வேகவைப்பது போல வேகவைத்து கொள்ளவும்.

சுவையான சத்தான கொழுக்கட்டை ரெடி….விரும்பினால் இத்துடன் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

கவனிக்க :
மாவு பிசையும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டாம்…ஏற்கனவே இட்லி மாவில் இருக்கும் தண்ணீரே போதுமானது…

விரும்பினால் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்….இதே மாதிரி சாதரண ரவையிலும் செய்யலாம்…

வேகவைத்த கொழுக்கட்டைகளை உதிர்த்தால் தீடீர் உப்புமா ரெடி…சூப்பராக இருக்கும்…

அதே மாதிரி இப்படி உருண்டைகளை வேகவைக்கும் பொழுது மினி இட்லி தட்டில் அடுக்கி வேகவைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்…இது எங்க அம்மாவுடைய டிப்ஸ்…

ஒட்ஸ் வடை - Oats Vadai


நேற்று இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது அக்ஷ்தா வடை வேண்டும் என சொன்னா…அதுக்கு மேல எனக்கு உளுந்து ஊறவைக்க பொறுமை கிடையாது…சரி…இட்லிக்கு அரைந்த உளுத்தமாவில் சிறிது எடுத்து வடை சுடலாம் என்று நினைத்தேன்..

ஆனா இட்லிக்கு அரைந்த உளுத்தமாவு சிறிது தண்ணியாக இருந்ததால் ஒட்ஸினை பொடித்து இதில் சேர்த்து வடை சுட்டேன்…எண்ணெயினை அதிகம் குடிக்காமல் வடை மிகவும் அருமையாக வந்தது….

சாதரண வடையிற்கும் இந்த ஒட்ஸ் வடையிற்கும் பெரியதாக எந்த வித்தியசமும் இருக்காது…நம்மால சொன்னால் தான் தெரியும்…..நீங்களும் செய்து பார்த்து உங்களுடைய கருத்தினை சொல்லுங்க….

படத்தினை பார்த்து இது வடையா இல்ல போண்டாவா என்று எல்லாம் கேட்க கூடாது...என்ன சரியா...இப்படி செய்தால் தான் அக்ஷ்தாவிற்கு பிடிக்கும்...நீங்கள் உங்களுக்கு விருப்பம் போல செய்து தட்டி போட்டு வடையினை சுடுங்க....

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         உளுத்தம்ப்பருப்பு – 1/2 கப்
         ஒட்ஸ் – 1/2 கப் பொடித்தது
         உப்பு – தேவையான அளவு
         மிளகுதூள் – 1/2 தே.கரண்டி
         கொத்தமல்லி - சிறிதளவு
         எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை :
      உளுத்தம்ப்பருப்பினை 1 மணி நேரம் ஊறவைத்து மைய அரைத்து கொள்ளவும்.      ஒட்ஸினை பொடித்து வைக்கவும்.

         அரைத்த உளுத்தம்ப்பருப்பு + ஒட்ஸ் + மிளகு + உப்பு + கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

      கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் வடைகளை தட்டி போட்டு பொரிக்கவும்.       சுவையான சத்தான வடை ரெடி.

கவனிக்க :
விரும்பினால் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்….

அதே போல், வடை மாவு தண்ணியாக இருந்தால் அரிசி மாவு கலந்து கொண்டால் வடை நன்றாக வரும்…

பாசிப்பருப்பு பாயசம் - Pasiparupu Payasam / Moong Dal


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பாசிப்பருப்பு – 1 கப்
         பொடித்த வெல்லம் – 1/4 கப்
         ஏலக்காய் – 2
கடைசியில் சேர்க்க :
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         முந்திரி, திராட்சை சிறிதளவு

செய்முறை :
·         பாசிப்பருப்பினை 3 கப் தண்ணீர் ஊற்றி பிரஸர் குக்கரில் போட்டு 3 - 4  விசில் வரும் வரை வேகவிடவும்.

·         குக்கரில் பிரஸர் அடங்கியது, அதனை திறந்து அத்துடன் பொடித்த வெல்லம் + ஏலக்காய் சேர்த்து நன்றாக வெல்லம் வாசம் போகும்வரை கொதிக்கவிடவும்.

·         கடைசியில் முந்திரி + திராட்சை சேர்த்து நெயில் வறுத்து இதில் சேர்க்கவும். சுவையான சத்தான பாயசம் ரெடி.

குறிப்பு :
இத்துடன் பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையுடன் இருக்கும்.
ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் சிறிது தண்ணியாக இருந்தால் தான் இந்த பாயசம் சூப்பராக இருக்கும்

சிக்கன் கட்லட் - Chicken Cutlets


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         Boneless skinless சிக்கன் – 1/4 கிலோ
         வெங்காயம் – 1
         பச்சைமிளகாய் – 3
         இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
         கொத்தமல்லி + கருவேப்பில்லை – சிறிதளவு
         எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சிக்கனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + பச்சை மிளகாய் + கொத்தமல்லி, கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.


·         சிக்கன் + தூள் வகைகள் + இஞ்சி பூண்டு விழுது + நறுக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·         விரும்பிய வடிவத்தில் கட்லட் செய்து கல்லில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய கட்லட் ரெடி. இத்துடன் தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க:
விரும்பினால இத்துடன் Bread Crumbs சேர்த்து கொள்ளலாம். 

Thanksgiving Lunch

இன்று இங்கு Thanksgiving Day…எங்களுடைய வீட்டில் நாங்கள் எப்பொழுதும் கொண்டாடுவோம்… நீங்கள் வந்து கலந்து கொள்ளவும்…


எப்பொழுதுமே நான் சிக்கனில் தான் செய்து இருக்கின்றேன்..இந்த வருடம் தான் முதன்முறையாக Turkeyயில் செய்தேன்…மிகவும் பயமாக தான் இருந்தது…அதனை முதலில் சமைக்க…ஏன் என்றால் turkey மிகவும் சீக்கிரமாக வறண்டுவிடும்…அதே மாதிரி அதிகமாக வேகவைத்தாலும் நல்லா இருக்காது…ஆனா எதிர்பார்த்தைவிட அருமையாக வந்து இருந்தது…இதோ என்னுடைய Turkey….Star of Thanksgiving Lunch….


Turkey Stuffing with Green Peas


Cheesy Spinach


Mashed Potatoes with Gravy


Green Peas sauté


Healthy Greens Salad with Pomegranate, Homemade Buttered Croutons


Pinto Beans with Riceமற்றும், Tomato & Bell Pepper Soup , Baked Mac and Cheese, Fruit Salad and Apple Cider ….

As usual finally, my favorite Pumpkin Pie…


Related Posts Plugin for WordPress, Blogger...