தாமரை தண்டு சிப்ஸ் (அவன்செய்முறை) - Lotus Root Chips( Oven Cooking)

தாமரை தண்டில் அதிக அளவு நார்சத்து , விட்டமின்ஸ் பி மற்றும் சி ( Vitamins B6 & C )இருக்கின்றது. இதனை சாப்பிடுவதால் கொலஸ்டாரிலினை (Cholesterol )கட்டுபடுத்துகின்றது.

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவது நல்லது. இது உடலிற்கு மிகவும் குளிர்ச்சி என்பதால் வாரத்திற்கு 1 – 2 முறை சாப்பிடுவது நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

• தாமரை தண்டு நறுக்கியது – 1 கப்

• எண்ணெய் – 2 மேஜை கரண்டி

• எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

• மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

• மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

• உப்பு – தேவையான அளவு

செய்முறை :

 அவனை 450 F, Broil Modeயில் முற்சூடு செய்யவும். தாமரை தண்டினை சுத்தம் செய்து, சிறிய சிறிய வட்ட துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


 தூள் வகைகள் + எலுமிச்சை சாறு + வெட்டி வைத்துள்ள தாமரை தண்டுகளை சேர்த்து கலந்து , 5 நிமிடம ஊற வைக்கவும்.

 பின்னர் தாமரை தண்டுகள், அவன் ட்ரேயில் ஒவ்வொன்றாக அடுக்கி சிறிது எண்ணெயினை அதன் மீது ஸ்பேரே செய்யவும்.


 இப்பொழுது தாமரை தண்டினை அடுக்கிய ட்ரேயினை அவனில் 10 நிமிடங்கள் 450F யில் Broil Modeயில் வைக்கவும்.

 10 நிமிடம் கழித்து ட்ரேயினை வெளியில் எடுத்து, தாமரை தண்டியினை திருப்பிவிட்டு, மீண்டும் அந்த ட்ரேயினை மேலும் 5 நிமிடங்கள் அவனில் வைக்கவும்.

 சுவையான மொரு மொருப்பான தாமரை தண்டு சிப்ஸ் ரெடி.

பிறந்தநாள் விழா.....Its Party Time....!!!!!!!


இன்று அக்ஷ்தாவிற்கு 3வது பிறந்தநாள் கொண்டாடினோம். அத்துடன் இன்னொரு பிறந்தநாள் விழாவும் சேர்த்து கொண்டது…அதாங்க என்னுடைய சமையலறைக்கு(ப்ளாக்) ….இன்றுடன் இந்த ப்ளாகினை தொடங்கி 1 வருடம் நிறைந்துள்ளது...டயட் சேமியா உப்புமா (Diet Semiya Uppuma)


என்னது டயட் சேமியா உப்புமாவா?...இந்த உப்புமாவினை பார்பதற்கு ஒன்னும் அப்படி தெரியவில்லையே என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது…நாம் செய்யும் உப்புமாவிற்கும், நான் செய்து இருக்கும் இந்த டயட் உப்புமாவிற்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் ஒன்றும் கிடையாது….அப்புறம் என்னவா….அத..அத…தான் இப்போ சொல்ல போறேன்…பொதுவாக நாம் உப்புமா செய்யும் பொழுது, கடுகு + பருப்பினை தாளித்து பின் வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லையினை வதக்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியில் ரவையினை சேர்த்து கிளறுவோம்..ஆனால், இந்த டயட் சேமியாவில், அதே மாதிரி தான், முதலில் கடுகு தாளித்து வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சை மிளகாயினை எல்லாம் வதக்கவேண்டும்….அப்புறம் வதக்கிய பொருட்களை எல்லாம் தனியாக எடுத்துவிடவேண்டும். பிறகு ரவைக்கு(அ) சேமியாவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும், ரவையினை கிளறவேண்டும். ரவை/சேமியா வெந்தவுடன், கடைசியில் இந்த வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சுவையான டயட் சேமியா ரெடி.இப்படி கடைசியில் வதக்கிய வெங்காயத்தினை சேர்ப்பதால், Calories குறைவாக இருக்கும். (சுமார் 1 கப் உப்புமாவில் 500 Calories என்றால், இந்த டயட் உப்புமாவில் 350 Calories தான் இருக்கும்.) காரணம், வெங்காயத்தினை வதக்கியவுடன் எடுத்துவிடுகிறோம். (வதக்கிய வெங்காயத்தில் சுமார் 100 calories இருக்கும் என்றால், முதலில் வதக்கிய பிறகு தண்ணீரில் வேகவைக்கும் வெங்காயத்தில் 150 – 160 calories இருக்கின்றது…)சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

• சேமியா – 1 கப்

• வெங்காயம் – 1

• பச்சை மிளகாய் – 1

• கருவேப்பில்லை – 3 இலை

• கடுகு – தாளிக்க

• எண்ணெய் – 1 தே.கரண்டி

• உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி

• உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

 சேமியாவினை கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பருப்பினை சேர்த்து வறுக்கவும்.

 பின்பு வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் வதங்கியபின் அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

 பின்னர் அதே கடாயில், 1 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து கொதிவந்ததும் சேமியாவினை கொட்டி கிளறி வேகவிடவும்.

 கடைசியில், சேமியா நன்றாக வெந்தவுடன், தட்டில் எடுத்து வைத்துள்ள வதக்கிய வெங்காயத்தினை இத்துடன் சேர்த்து கிளறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய உப்புமா ரெடி.சூப்பர் பீர்க்கங்காய் சட்னி - Perkankai Chutney - Side Dish for Idly and Dosa


சூப்பர் பீர்க்கங்காய் சட்னி
எப்பொழுதும் தேங்காய், வெங்காயம் அல்லது தக்காளி சட்னி என்று செய்யாமல் இப்படி காய்கறிகளினையும் சேர்த்து சட்னி செய்வதால் நமக்கும் உணவில் காய்கறிகளினை சேர்த்து சாப்பிட்ட திருப்தி மற்றும் காலை உணவில் இப்படி காய்களினை சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கும் நல்லது.
காய்கள் சாப்பிடாத குழந்தைகள் கூட நீங்கள் இப்படி வித விதமாக காய்களை சட்னியில் தெரியாத வண்ணம் சமைத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பீர்க்கங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பார்க்க வாங்க
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
*       பீர்க்கங்காய் – 1/4 கிலோ
*       தக்காளி – 1 பெரியது
*       மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
*       உப்பு தேவையான அளவு
தாளிக்க :
*       எண்ணெய் – 1 தே.கரண்டி
*       கடுகு – 1/2 தே.கரண்டி
*       நறுக்கிய வெங்காயம் – 1
*       பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
*       கருவேப்பில்லை – 5 இலை
கடைசியில் தூவ :
*       பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 மேஜை கரண்டி
செய்முறை :
*       பீர்க்கங்காயினை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
*       தக்காளியையும் பொடியாக நறுக்கி அத்துடன் வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காய் + மஞ்சள் தூள் + 1/2 தே.கரண்டி உப்பு + 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிட்டு கடைசியில் அனைத்தையும் கரண்டியால் மசித்து கொள்ளவும்.
*       கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.
*       பிறகு மசித்து வைத்துள்ள பீர்க்கங்காய் கலவையினை இதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். (தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். வேண்டுமானால் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து கொள்ளலாம்)
*       கடைசியில் கொத்தமல்லி தூவி மேலும் 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
*       இப்பொழுது சுவையான் பீர்க்கங்காய் சட்னி ரெடி.
      குறிப்பு :
பீர்க்கங்காய் தோலினை வீணாக்காமல் அதனை வைத்து சட்னியோ அல்லது துவையலோ செய்து சாப்பிடலாம். அதனை வைத்து எப்படி சமைக்கலாம் என்பதினை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கோவைக்காய் பச்சடி


அன்பான ப்ளாக் நண்பர்களே, ப்ளாக் வாசகர்களே அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். என்னை அன்பாக விசாரித்த அனைவருக்கும் நன்றிகள். என்னுடைய இந்தியா விடுமுறை முடிந்து, திரும்பவும் இந்த வாரம் ஊர் வந்து சேர்ந்தாகிவிட்ட்து. இனிமேல் ப்ளாக் பக்கம் அடிக்கடி வருவேன்…நீங்களும் என்னுடைய ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்…
சரி…சரி…ஊருக்கு போய் நன்றாக சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகியாச்சு…அதனால் எப்பொழுதும் போலவே என்னுடய டயட் சமையல் பகுதிக்கு உங்களை அழைத்து செல்கிறேன்…
இன்று நாம் பார்க்க போவது கோவைக்காய் தயிர் பச்சடி….நீங்க நினைப்பது தெரிகின்றது....எதுல பாரு பச்சடி…துவையலுனு செய்றாங்க..எப்படி இருக்குமோ என்று சொல்றது கேட்கின்றது,,,,,ஒரு முறை இந்த பச்சடியினை சாப்பிட்டு பாருங்க…அப்புறம் என்ன எப்பொழுதும் கோவைக்காய் வாங்கும் பொழுது பச்சடி அவசியம் இருக்கும்.,,,
கோவைக்காய் ஒரு சாலட் காய்… கோவைக்காயினை வேகவைக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள சத்துகள் அனைத்தும் நமக்கு வீணாகாமல் கிடைக்கின்றது. பச்சடி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சக்கரை நோயளிகளுக்கு, கோவைக்காய் ஒரு வரபிரசாதம். இதனை வாரத்திற்கு 2 – 3 முறை உணவில் சேர்த்து கொண்டால் சக்கரை அளவு கட்டுபாட்டில் இருக்கும். இந்த காய் மிகவும் குளுமை என்பதால் இதனை இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது,
கோவைக்காயினை சாப்பிடுவது வாய்புண்ணிற்கு நல்லதொரு மருந்து. .
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கோவைக்காய் – 100 கிராம்
· தயிர் – 1/2 கப்
· பச்சை மிளகாய் – 1
· உப்புதேவையான அளவு
செய்முறை :
· கோவைக்காயினை கேரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.
· பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
· துறுவிய கோவைக்காய் + பச்சை மிளகாய் + தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.
· சுவையான கோவைக்காய் தயிர் பச்சடி ரெடி. இதனை பிரியாணி, புலாவ், கலந்த சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...