கோவைக்காய் பச்சடி


அன்பான ப்ளாக் நண்பர்களே, ப்ளாக் வாசகர்களே அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். என்னை அன்பாக விசாரித்த அனைவருக்கும் நன்றிகள். என்னுடைய இந்தியா விடுமுறை முடிந்து, திரும்பவும் இந்த வாரம் ஊர் வந்து சேர்ந்தாகிவிட்ட்து. இனிமேல் ப்ளாக் பக்கம் அடிக்கடி வருவேன்…நீங்களும் என்னுடைய ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்…
சரி…சரி…ஊருக்கு போய் நன்றாக சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகியாச்சு…அதனால் எப்பொழுதும் போலவே என்னுடய டயட் சமையல் பகுதிக்கு உங்களை அழைத்து செல்கிறேன்…
இன்று நாம் பார்க்க போவது கோவைக்காய் தயிர் பச்சடி….நீங்க நினைப்பது தெரிகின்றது....எதுல பாரு பச்சடி…துவையலுனு செய்றாங்க..எப்படி இருக்குமோ என்று சொல்றது கேட்கின்றது,,,,,ஒரு முறை இந்த பச்சடியினை சாப்பிட்டு பாருங்க…அப்புறம் என்ன எப்பொழுதும் கோவைக்காய் வாங்கும் பொழுது பச்சடி அவசியம் இருக்கும்.,,,
கோவைக்காய் ஒரு சாலட் காய்… கோவைக்காயினை வேகவைக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள சத்துகள் அனைத்தும் நமக்கு வீணாகாமல் கிடைக்கின்றது. பச்சடி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சக்கரை நோயளிகளுக்கு, கோவைக்காய் ஒரு வரபிரசாதம். இதனை வாரத்திற்கு 2 – 3 முறை உணவில் சேர்த்து கொண்டால் சக்கரை அளவு கட்டுபாட்டில் இருக்கும். இந்த காய் மிகவும் குளுமை என்பதால் இதனை இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது,
கோவைக்காயினை சாப்பிடுவது வாய்புண்ணிற்கு நல்லதொரு மருந்து. .
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கோவைக்காய் – 100 கிராம்
· தயிர் – 1/2 கப்
· பச்சை மிளகாய் – 1
· உப்புதேவையான அளவு
செய்முறை :
· கோவைக்காயினை கேரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.
· பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
· துறுவிய கோவைக்காய் + பச்சை மிளகாய் + தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.
· சுவையான கோவைக்காய் தயிர் பச்சடி ரெடி. இதனை பிரியாணி, புலாவ், கலந்த சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

29 comments:

சாருஸ்ரீராஜ் said...

hai geetha uruku poyacha , very nice how is atchu , very nice pachadi i will try it soon

Porkodi (பொற்கொடி) said...

kovakkai thuruva mudiyumne enaku theriyadhu.. try paniduvom :)) welcome back!

Malini's Signature said...

இந்தியா பயணம் எல்லாம் எப்படி இருந்தது..குட்டிக்கு ரொம்ப பிடிச்சு இருக்குமே...வந்ததும் நல்ல குறிப்போட வந்து இருக்கீங்க அசத்துங்க கீதா :-)

அண்ணாமலையான் said...

சூப்பரா இருக்கு....

Unknown said...

நல்வரவு.

கோவைப்பழம் விரும்பி சாப்பிடதுண்டு சிறு வயதுகளில் - இப்போ எங்கே பார்க்க முடியுது,

இந்த பச்சடியையும் முயற்சித்திடுவோம்.

Shama Nagarajan said...

WELCOME BACK DEAR....YUMMY PACHADI

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா. ஆமாம் அக்கா இந்த வாரம் தான் வந்தோம்..கண்டிப்பாக செய்து பாருங்க..குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பொற்கொடி....கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா. ஆமாம் பா, அக்ஷ்தா குட்டி தான் ஊரினை ரொம்பவும் மிஸ் பண்ணுறா(நானும் தான்).....நன்றி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அண்ணாமலையான். நன்றி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால் அண்ணா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும். நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷாமா. நன்றி.

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் வ்ந்தாச்சா, ஊருக்கு போனாலே உருண்டு திரண்டு ஒரு சைசாதாம் ஆகிடுவோம் எல்லோரின் அன்பு தொல்லை அதெல்லாம்.

கோவைக்காய் பச்சடி சர்க்கரை வியாதிக்கு நலல் குறிப்பு. அக்ஷயா நல்ல இருக்காளா> எல்லோரையும் தேடுமே.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலா அக்கா...

ஆமாம் அக்கா, ஊருக்கு போய் நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகியாச்சு...ஒரே அன்பு தொல்லை தான்….போங்க….அக்ஷ்தாவிற்கு தான் தாத்தா, பாட்டி, பெரியம்மா,சித்தி….மாமா…என்று ஒரே நியாபகமாக இருக்கின்றாள்..

Menaga Sathia said...

nice pachadi looks gr8!!

Ammu Madhu said...

அக்கா வெல்கம் பேக்.வெகேஷன் எப்டி இருந்துச்சு.

Priya Suresh said...

Welcome back Geetha, ooruku poytu vanthutingala, yeppadi irrunthuchu ooru payanam..Kovakkai pachadi pakkave arumaiya irruku,samachida vendiyathu than...

prabhadamu said...

கீதாக்கா ரொம்ப நாள் கழித்து உங்க பதிவு வாழ்த்துக்கள் அக்கா. நான் தினமும் பார்ப்பேன் ஆனால் இன்று தான் பதிவு பார்த்தேன். நன்றிக்கா. நீங்கள் வீட்டில் குழந்தை நலமா?

Menaga Sathia said...

pls collect ur award from my blog

http://sashiga.blogspot.com/2010/03/blog-post_27.html

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அம்மு...வெகேஷன் எல்லாம் சூப்பராக போச்சு...என்ன இன்னும் கொஞ்சம் நாள் இருந்து இருக்கலாம் என்று தோனுது...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...ஊர் பயணம் எல்லாம் சூப்பர்ப்...அதுவும் 4 வ்ருடம் கழித்து சென்றதால் ஒரே விருந்து..ஊர் சுற்றுதல்..உறவினர் வருகை என்று நல்லா போச்சு பா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பிரபா...அக்ஷ்தா மிகவும் நன்றாக இருக்கின்றாள்...மிகவும் சந்தோசம் மா...நான் இல்லாமல் இருந்தாலும் என் ப்ளாக் பக்கம் அடிக்கடி வந்ததற்கு...இனிமேல் அடிக்கடி வாங்க...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் விருத்துக்கு நன்றி மேனகா

Kanchana Radhakrishnan said...

nice pachchadi

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கஞ்சனா...

Srividhya Ravikumar said...

super pachadi.. great.. nice to see posts in tamil.. following you

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீ வித்யா...

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு.

Related Posts Plugin for WordPress, Blogger...