தாமரை தண்டு சிப்ஸ் (அவன்செய்முறை) - Lotus Root Chips( Oven Cooking)

தாமரை தண்டில் அதிக அளவு நார்சத்து , விட்டமின்ஸ் பி மற்றும் சி ( Vitamins B6 & C )இருக்கின்றது. இதனை சாப்பிடுவதால் கொலஸ்டாரிலினை (Cholesterol )கட்டுபடுத்துகின்றது.

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவது நல்லது. இது உடலிற்கு மிகவும் குளிர்ச்சி என்பதால் வாரத்திற்கு 1 – 2 முறை சாப்பிடுவது நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

• தாமரை தண்டு நறுக்கியது – 1 கப்

• எண்ணெய் – 2 மேஜை கரண்டி

• எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

• மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

• மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

• உப்பு – தேவையான அளவு

செய்முறை :

 அவனை 450 F, Broil Modeயில் முற்சூடு செய்யவும். தாமரை தண்டினை சுத்தம் செய்து, சிறிய சிறிய வட்ட துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


 தூள் வகைகள் + எலுமிச்சை சாறு + வெட்டி வைத்துள்ள தாமரை தண்டுகளை சேர்த்து கலந்து , 5 நிமிடம ஊற வைக்கவும்.

 பின்னர் தாமரை தண்டுகள், அவன் ட்ரேயில் ஒவ்வொன்றாக அடுக்கி சிறிது எண்ணெயினை அதன் மீது ஸ்பேரே செய்யவும்.


 இப்பொழுது தாமரை தண்டினை அடுக்கிய ட்ரேயினை அவனில் 10 நிமிடங்கள் 450F யில் Broil Modeயில் வைக்கவும்.

 10 நிமிடம் கழித்து ட்ரேயினை வெளியில் எடுத்து, தாமரை தண்டியினை திருப்பிவிட்டு, மீண்டும் அந்த ட்ரேயினை மேலும் 5 நிமிடங்கள் அவனில் வைக்கவும்.

 சுவையான மொரு மொருப்பான தாமரை தண்டு சிப்ஸ் ரெடி.

27 comments:

அண்ணாமலையான் said...

aahaa....

Mrs.Menagasathia said...

சூப்பராயிருக்கு....

Deivasuganthi said...

தாமரைத்தண்டு நான் வாங்கினதேயில்ல. இது ஈசியாவும் இருக்கு. செஞ்சு பாத்திரலாம்.

Chitra said...

looks very crispy...... yummy!

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணாமலை...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சுகந்தி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...

Ammu Madhu said...

அக்கா இது எங்க கிடைக்கும்?வால்மார்ட்டில் கிடைக்குமா?பாக்கவே அழகா இருக்கு.

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு பார்க்கவே மொரு மொருப்பா அச்சு முருக்கு போல இருக்கு

மனோ சாமிநாதன் said...

தாமரைத்தண்டு வற்றல் பார்ப்பதற்கு மிகவும் அழக்கயிருக்கிறது, கீதா! அவனில் செய்வதால் எண்ணெய் செலவும் மிச்சமாவதுடன் உடம்புக்கு ஆரோக்கியமானதும்கூட! இதை மைக்ரோஅவனில் செய்து பார்த்திருக்கிறீர்களா?

Priya said...

Super chips, such a guilt free chips to enjoy..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...ஆமாம் அக்கா, இந்த சிப்ஸ் மிகவும் மொருமொருப்பாக சூப்பராக இருக்கும்...

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி...ஆமாம் அவனில் செய்வதால் எண்ணெயும் மிச்சம், உடலிக்கும் நல்லது...இதனை மைக்ரோஅவனில் செய்தால், இவ்வளவு மொருமொருப்பாக கிடைக்காது...ஆனாலும் நல்ல தான் இருக்கும் என்று நினைக்கிறேன்...நான் மைக்ரோஅவனில் இதனை செய்தது இல்லை...நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அம்மு...இது chinese கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும்...வால்மார்ட்டில் நான் பார்த்தது இல்லை...நன்றி அம்மு...

kino said...

Geetha lotus thandu chips superaa irukku.....but ithu shopsil kidaikkumaa???
seymuraiyum kurippugalum Arumai.Thanks.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கொயினோ...இது சைனீஸ் கடைகளில் கிடைக்கும்..செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்...நன்றி...

Kanchana Radhakrishnan said...

yummy.......

asiya omar said...

நானும் க்லர் அப்பளமோ என்று நினைத்தேன்,தாமரைத்தண்டு சிப்ஸ் அருமையாக இருக்கு.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி கஞ்சனா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஆசியா அக்கா...தாமரை தண்டு சிப்ஸ் செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும் ..நன்றி

my kitchen said...

Heard about lotus stem,but never tried,thanks for sharing.looks crispy & tempting

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி செல்வி..

Vijis Kitchen said...

கீதா வாவ் சூப்பர் சிப்ஸ். என்ன சைனிஸ் கடையில் கிடைக்கிறதா. அடுத்த ஷாப்பிங் லிஸ்டில் இது எழுதிட்டேன். அவசியம் செய்கிறேன். என் தோழி மைக்ரோவேவில் செய்தாங்க இந்த அளவுக்கு க்ரிஸ்ப்பியா இல்லை.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி விஜி...கண்டிப்பாக செய்து பாருங்கள்..அருமையாக இருக்கும்...மைக்ரோவேவில் செய்தால் ஆமாம் க்ரிஸ்பியாக இருக்காது...

kamalabhoopathy said...

Never tried or tasted this looks yummy.

Related Posts Plugin for WordPress, Blogger...