பார்லி பருப்பு அடை & தாளித்து அரைத்த தேங்காய் சட்னி - Barley Paruppu Adai & Coconut Chutney - Side Dish for Idly and Dosa - Barley Indian Recipe


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 மணி நேரம்
தேவையான பொருட்கள் :     
·         பார்லி - 2 கப்
·         கடலை பருப்பு – 1/4 கப்
·         துவரம் பருப்பு – 1/4 கப்
·         பாசிப்பருப்பு – 1/4 கப்
·         உளுத்தம் பருப்பு -1/4 கப்
·         காய்ந்த மிளகாய் – 4
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க  வேண்டிய பொருட்கள் :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         உடைத்த உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
·         சின்ன வெங்காயம் – 6
·         கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை :
v  பார்லி + கடலை பருப்பு, துவரம் பருப்பினை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊறவைக்கவும். உளுத்தம் பருப்பு + பாசிப்பருப்பினை தனி தனியாக இரண்டு பாத்திரத்தில் போட்டு ஊறவைக்கவும். குறைந்த்து 2 – 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

v  வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும். தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து வைத்து கொள்ளவும்.
  
v  பார்லி + காய்ந்த மிளகாய் + கடலை பருப்பு,துவரம் பருப்பினை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அடைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். உளுத்தினை மைய அரைத்து கொள்ளவும்.

v  பார்லி மாவு + உளுத்தம் மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மாவுடன், தாளித்த பொருட்கள் + உப்பு + தேங்காய் துறுவல் + பாசிபருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

v  கலந்த மாவினை, மெல்லிய அடைகளாக சுடவும்.v  சுவையான சத்தான பார்லி பருப்பு அடையினை சட்னியுடன் பரிமாறவும்.


தாளித்து அரைத்த தேங்காய் சட்னி
பொதுவாக நாம் எப்பொழுதும் சட்னியினை அரைத்த பின்பு தாளிப்பு சேர்ப்போம். ஒருமுறை, தாளித்த பொருட்களையும் சட்னியின் சேர்த்து அரைத்து பாருங்கள்…மிகவும் சூப்பராக சுவையாக இருக்கும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 3 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         தேங்காய் துறுவல் – 1/4 கப்
·         காய்ந்த மிளகாய் – 3
·         உப்பு - தேவைக்கு
தாளித்து சேர்க்க :   
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :
தேங்காய் துறுவல் + காய்ந்தமிளகாய் + உப்பு + தாளித்த பொருட்கள் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். சுவையான சட்னி ரெடி.

21 comments:

எல் கே said...

வழக்கம் போல் சுவையான சத்தான சமையல் வகை

Menaga Sathia said...

அடையும்,சட்னியும் அருமை!!

Pavithra Srihari said...

super adai... super chutney

SathyaSridhar said...

adai migavum arumaiya iruku athuvum thengai chutney koooda nalla irukkum..

Asiya Omar said...

அருமையாக இருக்கு.இப்பவே சாப்பிடனும்போல இருக்கு,நான் பார்லியை இதுவரை சமைக்க பயன்படுத்தியதில்லை.

Chitra said...

நீங்க பார்லி + ஓட்ஸ் சமையல் குறிப்பு புத்தகம், எப்பொழுது வெளியிட போறீங்க? :-)

ஜெய்லானி said...

இந்த அடை மாவை வடை மாதிரி சுட்டு( பொரித்து ) சாப்பிட்டா சூப்பரா இருக்கும். தெரிந்தவர்கள் சொல்லுங்க!!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

tips and pictures are super keep it up........one plate parcel...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்திக்...நன்றி மேனகா...நன்றி பவித்ரா...நன்றி சத்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஆசியா அக்கா...கண்டிப்பாக ஒரு முறை சமைத்து பாருங்கள்...அப்புறம் அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்விங்க...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா....//நீங்க பார்லி + ஓட்ஸ் சமையல் குறிப்பு புத்தகம், எப்பொழுது வெளியிட போறீங்க? :-)//கூடிய சீக்கிரத்தில் எதிர்பார்க்லாம்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்லானி ...//இந்த அடை மாவை வடை மாதிரி சுட்டு( பொரித்து ) சாப்பிட்டா சூப்பரா இருக்கும். தெரிந்தவர்கள் சொல்லுங்க!!!//அடடே அடுத்த குறிப்புக்கு ஐடியா கொடுத்துவிட்டிங்க...சூப்பர்ப்...அந்த மாதிரி செய்து பதிவு போடுகிறேன்..பாருங்கள்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீகிருஷ்ணா...

Cool Lassi(e) said...

Happy Earth day to you dear.Adai looks splendid! I am bookmarking this dish. I have some Barley that I would like to use up. I usually have avial with Adai. Will that combo be good with this Barley Adai?

GEETHA ACHAL said...

தங்களுக்கும் இனிய earth Day...கண்டிப்பாக செய்து பாருங்கள்..மிகவும் சுவையாக இருக்கும்...அவியலுடன் சூப்பராக இருக்கும்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்...நன்றி

சாருஸ்ரீராஜ் said...

அடையிம் சட்னியும் சூப்பர்....

Priya Suresh said...

Adaiyum thanga chutneyum yenna paathu vanga vanga saapidalam'nu solluthu...super healthy dish..

Gita Jaishankar said...

Both looks so tempting Geetha...lovely and healthy combination...I am getting hungry now :)

Dershana said...

ithu nanum try panniyirukken , geetha. aanal koode konjam arisiyum poduven. arumayana pictures.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா...நன்றி பரியா...நன்றி கீதா...நன்றி தர்ஷினி...

Anisha Yunus said...

கீதாக்கா,

இன்னைக்கு இதான் எங்க வீட்டு டிஃபன். நான் தேங்காய் சேக்கலை. உளுத்தம் பருப்புக்கு பதிலா உருட்டு உளுந்து, அதே அளவு சேர்த்திகிட்டேன். அடை என்றாலே எனக்கு எப்பவும் கொஞ்சம் பயமா இருக்கும், நெஞ்செரிச்சலும், கெட்டியாகவும் இருப்பதால். ஆனா சும்மா சொல்லக்கூடாது, இந்த அடை பயங்கர சாஃப்ட்டாகவும், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனை இல்லாமலும் வந்துச்சு(கடைசில மாவோட ரெண்டு இஞ்ச் இஞ்சியும் சேர்த்து அரைச்சுகிட்டேன்). எங்க மாமனார் மாமியார் ஒரிஸ்ஸால இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் சக்கரை இருப்பதால் உங்க ரெசிபி டெஸ்ட் பண்ணிட்டு சொல்றது வழக்கம்...இன்னிக்கு எங்க வீட்டுக்காரரும் சேர்ந்து பயங்கர ரெகமன்டேஷன். ரொம்ப நன்றிங்கக்கா.

Related Posts Plugin for WordPress, Blogger...