பார்லி ஆறுசுவை சாலட்- Barley Saladஇந்த சாலடில் ஆறு வகையான சுவைகளையும் சேர்த்து செய்து இருப்பதால், மிகவும் அருமையாக இருக்கும்…ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் விதவிதமான சுவையினை சாப்பிடும் பொழுது நாம் உணரலாம்..

·         இனிப்பு சுவை – மாம்பழம்
·         புளிப்பு சுவை – எலுமிச்சை சாறு
·         கசப்பு சுவை – எலுமிச்சை தோல்
·         துவர்ப்பு சுவை – அவகோடா
·         உவர்ப்பு சுவை – உப்பு
·         கார சுவை – பச்சை மிளகாய்

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த பார்லி – 1 கப்
·         மாம்பழம் – 1
·         அவகோடா – 1
·         எலுமிச்சை பழம் – 1
·         கொத்தமல்லி , புதினா – சிறிதளவு
·         பச்சைமிளகாய் – 1
·         உப்பு – தேவைக்கு

செய்முறை :

v  மாம்பழம் + அவகோடாவினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

v  எலுமிச்சைபழத்தில் இருந்து மேல் தோலினை சிறிது துறுவி கொண்டு, பிறகு அதில் இருந்து சாறினை எடுத்து வைக்கவும்.

v  கொத்தமல்லி + புதினா + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

v  வேகவைத்த பார்லி + மாம்பழம், அவகோடா துண்டுகள் + எலுமிச்சை தோல் + எலுமிச்சை சாறு + கொத்தமல்லி,புதினா, பச்சைமிளகாய் + உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

v  சுவையான சத்தான சாலட் ரெடி. இதனை சிறிது நேரம் ப்ரிஜில் வைத்து குளிர்சியாக பரிமாறினால், கூடுதல் சுவையாக இருக்கும்.

28 comments:

Chitra said...

Looks very good. Thank you for the recipe.

Unknown said...

lovely salad luks colourfull.Thanks for posting such a healthy salad,..

எல் கே said...

hmm some thing different Geetha. thanks for ur healthy food list

சசிகுமார் said...

//சமைக்க தேவைப்படும் நேரம் 5 நிமிடங்கள்//

இப்படி தாங்க இருக்கணும். அத உட்டுபுட்டு அரைமணிநேரம் நெருப்பில் வேகவேண்டும். நல்ல பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

பாக்கவே சூப்பரா இருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

healthy salad

SathyaSridhar said...

Geetha,,unmailiye ithu arusuvai salad thaanga,,rombha healthy aana kalavai salad dear..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...நன்றி கார்த்திக்...நன்றி பிரேமலதா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சசிகுமார்....நன்றி ஜெய்லானி...நன்றி சாரு அக்கா...நன்றி சத்யா...

Cool Lassi(e) said...

Very colorful and healthy too!

Priya Suresh said...

Barley salad, pakkura pothey yedhuthu saapidanam pola irruku...puthumai and arumayana salad Geetha..

தக்குடு said...

வெரி குட் கீதா, தக்குடு கொழந்தை அடிக்கடி உங்க ப்ளாக் வருது என்பதால் இப்பொ எல்லாம் நிறையா வெஜ் அயிட்டமா போஸ்ட் போடரேளே!!!!! ...:)

@ ப்ரியா - இங்கேந்து எல்லாம் எடுத்து சாப்டக் கூடாது! இது எனக்காக பண்ணிவச்சது, நீங்க தனியா பண்ணி சாப்டுங்கோ! சரியா!!!..;)

kamalabhoopathy said...

Looks so colourful good for this summer.

Gita Jaishankar said...

Nice healthy salad Geetha..such a wonderful flavor combination...looks superb :)

Asiya Omar said...

பார்லி ஆறுசுவை சாலட் அருமை.க்லர்ஃபுல்.

Jaleela Kamal said...

ஸ்ஸ்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு கீதா ஆச்சல்

சுவீட் 16 அதிரா:) said...

கீதா ஆச்சல், இன்றுதான் பார்லிஅரிசியில் இப்படியும் செய்யலாம் என அறிகிறேன். நல்ல குறிப்பு. என்னிடம் பார்லி அரிசி இருக்கு, அதை அவித்து தண்ணீரைக் குடித்தால் உடம்பு மெலியும், உடலுக்கு நல்லது என்பது மட்டும்தான் எனக்கு இத்தனை காலமும் தெரியும்.

Menaga Sathia said...

பார்லி சாலட் பார்க்கவே சாப்பிடனும்போல் இருக்கு,அருமை!! பாராட்டுக்கள் கீதா!!

Mrs.Mano Saminathan said...

Such a very nutritious salad, Geetha!!
Nice photograph with beautiful colours!

பித்தனின் வாக்கு said...

புதுவகை சலாட்டும், பார்லி பருப்பு அடையும் பிரமாதம். ஒரு ஆறு அடை மற்றும் ஒரு பிளோட் சாலட்டும் பார்சல் பண்ணி அனுப்பி விடுங்கள். மிக்க நன்றி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கூல்...நன்றி ப்ரியா...நன்றி கமலாபூபதி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி தக்குடு...எப்படியோ நீங்க ப்ளாக் பக்கம் வந்தா சரி...வேண்டுமானால் உங்களுக்கு தனியாக பர்சல் அனுப்பிவிடுரேன்..கவலையைவிடுங்க...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கீதா...நன்றி ஆசியா அக்கா...நன்றி ஜலிலா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அதிரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் சூப்பராக இருக்கும்..அதே போல பார்லியில் பல குறிப்புகள் கொடுத்து இருக்கின்றேன் பாருங்கள்...அதனையும் செய்து பாருங்கள்..பார்லி தண்ணீரை குடிப்பதைவிட, வேகவைத்த பார்லியினை சாப்பிட்டால், சீக்கிரமாக உடல் எடை குறையும்....கொலஸ்டிரால், சக்கரை அளவு எல்லாமும் உடலில் நல்ல முறையில் குறையும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா..நன்றி மனோ ஆன்டி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சுதகார் அண்ணா...//ஒரு ஆறு அடை மற்றும் ஒரு பிளோட் சாலட்டும் பார்சல் பண்ணி அனுப்பி விடுங்கள்//பர்சல் அனுப்பிவிட்டேன்...சீக்கிரத்தில் வந்துவிடும்..சாப்பிட்டு சுவைத்தபின் திரும்பவும் பின்னுட்டம் கொடுக்க வேண்டுமாக்கும்......

Valarmathi Sanjeev said...

Looks healthy and yummy. You always rock with healthy recipes.

Anonymous said...

Can you let me know how to cook barley? How much water to be added+time? Thanks.

Related Posts Plugin for WordPress, Blogger...