பார்லி சக்கரை பொங்கல் - Barley Sweet Pongal


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..இந்த புத்தாண்டில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மனநிம்மதியுடன், மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று இறைவனிடன் வேண்டுவோம்…
சமைக்க தேவைப்படும் நேரம் : 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பார்லி – 1 கப்
·         பாசிபருப்பு – 1/2 கப்
·         பொடித்த வெல்லம் – 1/2 கப்
·         ஏலக்காய் – 2 (பொடித்து கொள்ளவும்)
·         நெய் – 2 தே.கரண்டி
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         முந்திரி, திராட்சை – சிறிதளவு
செய்முறை :
v  பார்லி + பாசிப்பருப்பினை நன்றாக தண்ணீரில் கழுவி கொள்ளவும். இத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் சுமார் 6 – 7 விசில் வரும் வரை வேகவிடவும்.
v  ஒரு பாத்திரத்தில், வெல்லம் + 3/4 கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, மண் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.
v  பிரஸர் அடங்கியதும், குக்கரினை திறந்து, வேகவைத்துள்ள பார்லியுடன் வடிக்கட்டி வைத்துள்ள வெல்லம் + ஏலக்காய் + நெய் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் குழைய வேகவிடவும்.
v  முந்திரி , திராட்சையினை நெயில் வறுத்து, கடைசியில் இத்துடன் சேர்க்கவும். சுவையான சத்தான பார்லி சக்கரை பொங்கல் ரெடி.

28 comments:

Chitra said...

பார்லியில் - ஓட்சில் இத்தனை வகை ஐட்டங்கள், நமது ருசிப்படி செய்யலாம் என்பதை உங்கள் பதிவுகளில் அறிந்து கொண்டேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல் கே said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி. சத்தான ஆரோக்யமான உணவு பற்றி சொன்னதற்கு நன்றி

prabhadamu said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

படத்தில் பார்பதற்க்கே நாக்கில் எச்சில் ஊறுகிறது. இன்னும் சாப்பிட்டால் எப்படி இருக்கும் ஆஹா.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

தோழி ஏன் தமிளிஷ் ஓட்டு பட்டையை இணைக்கவில்லை

Dershana said...

iniya tamil puthandu vazhthukkal, geetha

Dershana said...

iniya tamil puthandu vazhthukkal, geetha

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

பார்லி இனிப்பு பொங்கல் பார்க்கவே சூப்பராயிருக்கு...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா!!

Ammu Madhu said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Gita Jaishankar said...

Tamil puthandu vazhthukkal Geetha :) Great recipe....delicious and healthy!

koini said...

கீதா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.பார்லி சர்க்கரை பொங்கல் நன்றாக இருக்கிரது.நன்றி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...நன்றி கார்த்திக்...நன்றி ப்ரபா...நன்றி சசி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி தர்ஷினி...நன்றி சாரு அக்கா...நன்றி மேனகா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மு...நன்றி கீதா...நன்றி கினோ...

Cool Lassi(e) said...

Happy New Year to u too!Sweet Pongal pramaadham!That too with barley!Who would have thought..:)

ஸாதிகா said...

பார்லியில் பொங்கல்.வித்தியாசமா இருக்கே!

இமா க்றிஸ் said...

Happy New Year Geetha.

Kanchana Radhakrishnan said...

பார்லி இனிப்பு பொங்கல் சூப்பராயிருக்கு...

Priya Suresh said...

Iniya puthaandu nal vaazhuthukal Geetha...Barley pongal panni kamichi kalakitinga ponga..super delicious sakkarai pongal..

Valarmathi Sanjeev said...

Tamil puthaandu vazthukkal. Nice recipe, looks yummy.

Kanchana Radhakrishnan said...

பார்லி இனிப்பு பொங்கல் ரொம்ப நல்லா இருக்கு கீதா..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கூல் ...நன்றி ஸாதிகா அக்கா...நன்றி இமா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கஞ்சனா...நன்றி ப்ரியா...நன்றி வளர்மதி...

Mrs.Mano Saminathan said...

கீதா!

பார்லி சர்க்கரைப் பொங்கல் பார்க்கவே மிக அழகாய் சாப்பிடத் தூண்டுகிறது!
அடிக்கடி இப்படி சத்தான பொருள்களை வைத்து சிறப்பான சமையல் குறிப்புகள் கொடுத்து வரும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!

Priya dharshini said...

geetha..puthandu valthukal..nee thirumba vanthu kalakuringa..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்து நன்றி மனோ ஆன்டி.உங்களிடம் இருந்து பாரட்டு பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..நன்றி..

GEETHA ACHAL said...

ப்ரியா, எப்படி இருக்கின்றிங்க...தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி..

Related Posts Plugin for WordPress, Blogger...