பாகற்காய் சிப்ஸ் (அவன் செய்முறை) - Bitter Gourd Chips (Oven Cooking)

பாகற்காய் என்றால் மிகவும் கசக்குமே…எங்கள் வீட்டில் யாரும் அவ்வளவாக விரும்பி சாப்பிட மாட்டாங்களே…வேண்டுமானால் பாகற்காய் உடலிற்கு நல்லது என்று எப்பொழுதாவது வீட்டில் சாப்பிடுவோம்…அதுவும் மிகவும் குறைச்சல் தான்…என்று நம்மில் பலரும் கூறுவோம்….பாகற்காயினை இப்படி சிப்ஸ் அல்லது வறுவல் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்…அப்புறம் என்ன அடுத்தமுறை ஷாப்பிங் லிஸ்டில் பாகற்காயினை வாரத்திற்கு ஒரு முறையாவது இடம் பெறும்…பாகற்காயினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,

• சக்கரை நோயளிகளுக்கு மிகவும் நல்லது. சக்கரையின் அளவினை காட்டுபடுத்துகின்றது.

• பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தினை சுத்தம் செய்கின்றது.(Blood Purifier)

• புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.

• உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவதால் நல்ல பயன் கண்டிப்பாக கிடைக்கும்.

• நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.பாகற்காயில் அதிக அளவு Iron, விட்டமின்ஸ் ஏ, பி, சி (Vitamins A, B6, C) , நார்சத்து(Dietary Fibre)இருக்கின்றது. இதில் குறைந்த அளவு கொலஸ்டிரால் இருக்கின்றது. 100 கிராம் பாகற்காயில், சமைத்தபின்னர் சுமார் 25 – 30 கலோரில் தான் இருக்கின்றது.சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

• பாகற்காய் – 1/4 கிலோ

• பூண்டு – 2 பல்

• இஞ்சி – சிறிய துண்டு

• எண்ணெய்(Oil Spray) - சிறிதளவு

தூள் வகைகள் :

• கடலை மாவு – 1 மேஜை கரண்டி

• அரிசி மாவு – 1 மேஜை கரண்டி

• மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

• மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

• பெருங்காயம் தூள் – சிறிதளவு

• உப்பு – தேவையான அளவு

செய்முறை :

 பாகற்காயினை சிறிய சிறிய வட்டவடிவமாக வெட்டி கொள்ளவும்.அவனை 450Fயில் Broil Modeயில் முற்சூடு செய்யவும்.

 பூண்டு + இஞ்சியினை காரட் துறுவலில் துறுவி வைக்கவும்.

 பாகற்காய் + துறுவிய பொருட்கள் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும்.


 அவன் ட்ரேயில், பாகற்காயினை ஒவ்வொன்றாக தனிதனியாக அடுக்கவும். அதன் மீது சிறிதளவு Oil Spray செய்யவும்.


 இப்பொழுது ட்ரேயினை முற்சூடு செய்யப்பட்ட அவனில், 450F Broil Modeயில் 10 நிமிடங்கள் வைக்கவும்.

 10 நிமிடங்கள் கழித்து ட்ரேயினை வெளியில் எடுத்து, பாகற்காயினை திருப்பிவிடவும்.

 மீண்டும் பாகற்காய் ட்ரேயினை மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும். சுவையான சத்தான எளிதில் செய்யகூடிய பாகற்காய் சிப்ஸ் ரெடி.


கவனிக்க :

பாகற்காய் வட்ட துண்டுகளாக நறுக்கியபின், 1 – 2 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து கழுவினால் கசப்பு தெரியாது…


37 comments:

சாருஸ்ரீராஜ் said...

பாகற்காய் சிப்ஸ் அருமை

Menaga Sathia said...

சூப்பர்ர்!! நானும் இதே முறையில் செய்து வைத்துள்ளேன்.இனிதான் போஸ்ட் போடனும்..

அண்ணாமலையான் said...

ஆஹா மிக அருமையாக இருக்கிறது...

Vijiskitchencreations said...

கீதா நன்றாக இருக்கு. நான் முன்பு ஒரு தடவை செய்திருக்கேன். எனக்கு க்ரிஸ்ப்பியா வரல்லை. லைட்டா வேகாமல் கூட இருந்தது, அதன் பிறகு செய்யவில்லை.

Pavithra Elangovan said...

Thats my sons very fav one geetha...he is asking me for the long time .. yumm.

Ammu Madhu said...

my all time favorite.super.

Priya Suresh said...

My favourite, looks fantastic..

மங்குனி அமைச்சர் said...

மேடம் இதுவும் அந்த அவசர சட்னி மாதிரி அடுதவுங்களுக்கு தானே

Unknown said...

Hi geetha bitter gourd chips superba irukku....thanks..

SathyaSridhar said...

woow,,,pavarkai chips rombha murumuruppa vanthurukke,,,kandippa rusiyagavum irukkum,,,pavarkai udalukku romba nallathu,,,

Raks said...

My hubby loves this,oven method is a cool idea!

தெய்வசுகந்தி said...

வாவ்!!! ஈசியான வழியா இருக்குது!!!!

Shama Nagarajan said...

nice one...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா...நன்றி மேனகா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்து மிகவும் நன்றி அண்ணாமலையான்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி விஜி...கண்டிப்பாக இன்னொரும்முறை செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்...நாம் பல முறை இப்படி செய்து இருக்கின்றேன்...நன்றாக வந்து இருக்கின்றது...எப்பொழுதும் இது மாதிரி சிப்ஸ் செய்யும் பொழுது கடைசியில் பிராயில் செய்யுங்கள்...கிரிஸ்பியாக இருக்கும்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா...குழந்தைக்கு செய்து கொடுங்க...சூப்பர்ப்...சின்ன வயதிலேயே இப்படி பழகுவது நல்லது..நல்ல அம்மா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி அம்மு...நன்றி ப்ரியா...நன்றி கொயினோ

GEETHA ACHAL said...

//மேடம் இதுவும் அந்த அவசர சட்னி மாதிரி அடுதவுங்களுக்கு தானே//தங்கள் கருத்துக்கு நன்றி மங்குனி ...ஆமாம்...உங்களுக்கு தான் இந்த பாகற்காய் சிப்ஸ்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி சத்யா...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜேஸ்வரி...நன்றி சுகந்தி...நன்றி ஷாமா...

Padhu Sankar said...

Bitter gourds chips looks yummy!!

Asiya Omar said...

ஓவன் பாகற்காய் சூப்பர்.நிச்சயம் செய்து பார்க்கணும்.

மங்குனி அமைச்சர் said...

//Geetha Achal said...

//மேடம் இதுவும் அந்த அவசர சட்னி மாதிரி அடுதவுங்களுக்கு தானே//தங்கள் கருத்துக்கு நன்றி மங்குனி ...ஆமாம்...உங்களுக்கு தான் இந்த பாகற்காய் சிப்ஸ்...///


ஆகா , இதுக்கு பேர் தான் தான் தலைலே தானே மன்ன வாரி போட்டுகுரதுன்னு சொல்லுவாங்களோ

Gita Jaishankar said...

Dear Geetha, the chips have turned out so good and crispy...love your low fat oven version...I am going to try this soon :)

Kanchana Radhakrishnan said...

ஓவன் பாகற்காய் சூப்பர்

சசிகுமார் said...

பயனுள்ள பதிவு தோழி, பாகற்காய் நான் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பத்மா...நன்றி ஆசியா அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

//மேடம் இதுவும் அந்த அவசர சட்னி மாதிரி அடுதவுங்களுக்கு தானே//தங்கள் கருத்துக்கு நன்றி மங்குனி ...ஆமாம்...உங்களுக்கு தான் இந்த பாகற்காய் சிப்ஸ்...//

ஆகா , இதுக்கு பேர் தான் தான் தலைலே தானே மன்ன வாரி போட்டுகுரதுன்னு சொல்லுவாங்களோ//கரெக்டாக கண்டுபிடித்துவிட்டிங்களே(எல்லாம காமடிக்கு தானே...)...தங்கள் கருத்துக்கு நன்றி மங்குனி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...நன்றி கஞ்சனா....

GEETHA ACHAL said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சசிகுமார்...

எல் கே said...

முதல் முறை உங்க பதிவுக்கு வரேன். எனக்கு பிடிக்காத காய பத்தி எழுதி இருக்கீங்க.. ஹ்ம்ம் நல்ல இருக்கும் . எங்க ஊட்டு அம்மணிய பண்ணி சாப்பிட சொல்லணும்

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கார்த்திக்...கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்..நன்றி

எல் கே said...

// Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கார்த்திக்...கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்..நன்றி//
varugiren aana parunga namaku asaivam pidikaathu appalam nan escape aiduven

Pavithra Elangovan said...

Oh wow My family fav one.. guilfree chips... will surely try this in oven.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா...

GEETHA ACHAL said...

நானே என்னிக்கோ ஒரு முறை தான் அசைவ குறிப்பினை கொடுப்பேன்...கரெக்டாக அன்று வந்து இருக்கின்றிங்களே...கார்திக்...இருந்தாலும் வந்தமைக்கு நன்றிகள் பல..

Related Posts Plugin for WordPress, Blogger...