இட்லி சத்தான காலை சிற்றுண்டியா??? விளக்கம்...Is Idli Really a good Healthy Indian Breakfast ??

இட்லியினை பற்றிய உங்களுடைய கருத்துக்களை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றிகள்.

இட்லி என்பது பெரும்பாலும் அனைவருடைய காலை நேர சிற்றுண்டியாக திகழ்கின்றது. 
இட்லி என்பது இட்டு + அவி + அளி என்பதில் இருந்து வருகின்றது…இட்லியினை , இட்லி தட்டில் இட்டு, அதனை அவித்து பின்பு அளிக்கவும் என்பது இதன் பொருள்.

ஆறு மாதம் குழந்தையில் இருந்து அறுவது வயது தாத்தா வரை விரும்பிசாப்பிட்டும் உணவுவகையில் இந்த இட்லியும் ஒன்று.

அதுவும் இட்லியினை சாம்பார், சட்னி அல்லது பொடியுடன் சாப்பிட எப்பொழுதும் மிகவும் சூப்பராக இருக்கும். (எந்த கல்யாணத்திலும் காலையில் பறிமாறபடும் விருந்தில் இட்லியிற்கு எப்பொழுதும் தனி இடம் தான்….இதுவே இட்லியின் பெறுமையினை உணர்த்துகின்றது அல்லவா……)

சிறு குழந்தைகளுக்கு திடமான உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது முதலில் தரப்படுவது இந்த இட்லி தான். எளிதில் ஜீரணமாகிவிடும்.

அதே போல உடல் நலமில்லாமல் இருக்கும்பொழுதும் இதே இட்லி + சக்கரை தான் பெரும்பாலும் சாப்பிடுவோம். எளிதில் ஜீரணமாகிவிடும் என்ற காரணத்தினால்.

அரைத்த அரிசிமாவு + உளுத்தமாவு + உப்பு சேர்த்து புளிக்கவைத்து, பிறகு அந்த மாவில்  இட்லியினை செய்வோம்.

தயிரினை புளிக்கவைக்க, காய்ச்சிய பாலுடன் சிறிது தயிர் சேர்த்து புளிக்கவைப்போம். ஆனால், அது போல் இல்லாமல், இட்லிமாவிற்கு அப்படியே புளிக்க சக்தி இருக்கின்றது. அதற்கு காரணம், உளுத்தம் பருப்பு. உளுத்தம்மாவினை சேர்ப்பதால், இட்லி மாவு சீக்கிரமாக புளிக்கின்றது. இதில் நிறைய நல்ல Bacteria இருக்கின்றது.

சக்கரை நோயளிகளிடம் செய்த ஒரு ஆய்வில், இட்லியினை இரண்டு நபர்களுக்கும், வெண்பொங்கலினை இரண்டு நபர்களுக்கும் கொடுத்து சாப்பிட சொன்னார்கள்..பின்பு அவர்களுக்கு இரத்தபரிசோதனை செய்தனர்….ஆச்சர்யம்…பொங்கலினை சாப்பிட்டவர்களை விட இட்லியினை சாப்பிட நபர்களுக்கு தான் சக்கரை அளவு அதிகமாக இருந்தது.

சுமார், முன்று வருடங்களுக்கு முன்பு நான் படித்தது.. ஒரு பிரபலமான நாளிதழில் வெளியிட்ட செய்து இது………..ஒரு ஆய்வின் கடைசியில் நிருப்பிக்கபட்டது….

இட்லியில் வெரும் Carbohydrate மற்றும் குறைந்த அளவு பிரோட்டின் (Protein) தான் இருக்கின்றது. இதனை தவிர இதில் வேறு எந்த விட்டமின்ஸும் அல்லது மினரல்ஸும் கிடையாது. (Vitamins & Minerals)

ஆறு மாதகுழந்தைக்கு தாய்பாலினை தவிர , நம்முடைய மக்கள் அறிமுகபடுத்தும் உணவுவகையில் இட்லியிற்கு தான் முதல் இடம். (காரணம் சிறிய குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும்.)

அதே போல ஜுரம், காய்ச்சல் போன்ற சமயங்களிலும் இட்லியினை தான் சாப்பிடுகிறோம்…( சத்தான திடமான உணவினை சாப்பிடுகின்றோம் என்ற நினைப்பில்…)

அப்படிபட்ட, இட்லியில் வெரும் கார்போஹேடேரேட் மற்றும் சிறிது பிரோட்டின் மட்டும் இருந்தால் போதுமா???...வளரும் சின்ன குழந்தைகளுக்கு இப்படி கொடுத்தால் எப்படி அவர்களுடைய உடம்பு ஆரோகியமாக இருக்கும்….அதே உடம்பு சரியில்லாமல் இருக்கும் பொழுது நமக்கு விட்டமின்ஸ் மற்றும் மின்ரல்ஸ் வேண்டாமா??

நுடுல்ஸ்….பர்கர்…பிஸ்ஸா.. மட்டும் அனைத்து நாடுகளிலும் பிரபலம்…ஆனால் என்ன தான் இட்லி மிகவும் பிரபலம் என்றாலும், அதனை அனைவராலும் ஏற்கொள்ளபடவில்லை…காரணம்,அதில் இல்லாத சக்துகள் தான்..( மற்ற உணவுகள் என்னதான் உடம்பிற்கு கெடுதல் என்றால், அவற்றில் சில விட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கதான் செய்கின்ற என்று தெரிவித்தனர்….என்ன கொடுமை பாருங்கள் என்று நினைத்து கொண்டேன்)( சிறிது நாட்களுக்கு முன்பு இட்லியினை ஏற்றுமதி செய்யவேண்டும் என்று நம்நாட்டில் திட்டதினை செயல்படுத்த முயர்ச்சி செய்கின்றனர்…என்று படித்தேன்…பார்ப்போம்…)

இப்படிபட்ட கேள்விகள் விவாதிக்கபட்டன்…கடைசியில் அதற்கு விடையும் கண்டறியபட்டது…

இட்லிமாவினை கரைத்து புளிக்கவைத்த பிறகு தான் இட்லி செய்வோம்…அப்படி புளிக்க வைக்கும் பொழுது எப்பொழுதும் தயிர் சேர்த்து புளிக்க வைத்தால், அதில் நிறைய சத்துகள் கிடைப்பதாக வெளியிட்டனர்.

எப்பொழுதும் தயிர் சேர்த்து புளிக்க வைக்கபிடிக்கதவர்கள், இட்லியிற்கு மாவு அரைக்கும் பொழுது, அத்துடன் சிறிது கொண்டகடலையினையும் சேர்த்து அரைத்து, பின்பு புளிக்கவைக்க சொல்கின்றனர்…

இப்படி கொண்டைகடலை மாவு அல்லது தயிர் சேர்த்து புளித்த மாவில் இட்லியினை செய்வதால், அது சத்து நிறைந்த உணவாக மாறுகின்றது என்று கூறி ஆய்வினையும் முடித்தனர்….

விரும்பியர்கள், அவர்கள் விருப்பத்திற்கு எற்றாற் போல், புதினா இட்லி, கொத்தமல்லி இட்லி, கீரை இட்லி, வெஜிடேபுள் இட்லி, கேரட் இட்லி, கோதுமை இட்லி, கோதுமைரவை இட்லி, கேழ்வரகு இட்லி, பார்லி இட்லி, ஒட்ஸ் இட்லி, கம்பு இட்லி, பாசிபருப்பு இட்லி, தானிய இட்லி என்று விதவிதமான இட்லியினை செய்து சாப்பிடலாம்….

இட்லியினை ஆவியில் வேகவைப்பதால், தோசையை விட இட்லி சாப்பிடுவது தான் நல்லது…

அதனை படித்த பிறகு, அடிக்கடி நான் இந்த கொண்டைகடலை இட்லியினை செய்வோன்…நீங்களும் செய்து பாருங்கள் …மிகவும் சுவையாகவும், உண்மையில் சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றது……(கவனிக்க:…நானும் ஒரு இட்லி விரும்பி…அப்படியே சாப்பிட்டுவிடுவேன்…)

சரி...இப்பொழுது அனைவருக்கும் இட்லி சத்தான காலை சிற்றுண்டியா இல்லையா என்று புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்....

கொண்டைக்கடலை இட்லி

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
·         இட்லி அரிசி – 3 கப்
·         கொண்டைகடலை – 1 கப்
·         உளுத்தம் பருப்பு – 1/2 கப்
·         வெந்தயம் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
v  அரிசி + கொண்டைகடலை + உளுந்து , வெந்தயம் எல்லாவற்றினையும் தனி தனியாக ஊறவைக்கவும்.
v  ஊறவைத்த பொருட்களை, மாவாக அரைத்து கொள்ளவும்.
v  அரைத்த மாவினை சுமார் 6 – 8 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
v  பிறகு மாவினை, இட்லி தட்டில் ஊற்றி வேகவிடவும். சுவையான சத்தான இட்லி ரெடி.

50 comments:

Priya Suresh said...

I did the same idli with sprouted channa, but none at home like it, i finished batter as making dosa, loved the write up about idlies..fantastic..

jo said...

இனி எது சத்து என்ற கேள்வியில் என்ன வரப்போகுது...பாப்போம்....டட்டடோங்...

இது கும்மிங்க இல்லாட்டி பின்னூட்டம் போட்ட மாதிரியே இல்ல...

jo said...

கடையில் டோஃபு என்றே கேட்க்க வேண்டுமா?பன்னீர் மாதிரி இருக்கும் என்று சொல்றேங்க அப்போ இது ஃப்ரோஜன் ஐட்டமா?

கேள்வி பட்டது இல்லை...

இதுக்கு பதில் சொல்லீறுங்க...

jo said...

உங்கள் பதிவுகள் எல்லாமே சூப்பர்...

பக்கத்தில் இருந்தால் டேஸ்பாத்திருக்கலாம்...குடுப்பின இல்ல..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...நான் முளைவிட்ட பயிறில் செய்தது கிடையாது...கண்டிப்பாக இந்த செய்முறையில் செய்து பாருங்கள்...இட்லியும் சூப்பராக பூசுபூசு , சுவையாக இருக்கும்...நன்றி

GEETHA ACHAL said...

//இனி எது சத்து என்ற கேள்வியில் என்ன வரப்போகுது...பாப்போம்....டட்டடோங்...

இது கும்மிங்க இல்லாட்டி பின்னூட்டம் போட்ட மாதிரியே இல்ல..///நடத்துங்க மலர்...தங்கள் கருத்துக்கு நன்றி மலர்..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மலர்...ஆமாம்பா, tofu என்று கேட்டு பாருங்கள்..கண்டிப்பாக கிடைக்கும்...இது frozen item எல்லாம் கிடையாது...இது freshஆக கிடைக்கும்..அப்படி தான் நான் பார்த்து இருக்கின்றேன்...(இதனை நான் frozen sectionயில் தேடியது கிடையாது...)

GEETHA ACHAL said...

//உங்கள் பதிவுகள் எல்லாமே சூப்பர்...

பக்கத்தில் இருந்தால் டேஸ்பாத்திருக்கலாம்...குடுப்பின இல்ல//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மலர்...உங்களுக்கு எந்த ஊர் என்று சொல்லுங்கள்..உங்கள் வீட்டில் வந்துவிடுகிறேன்...நன்றி

Gita Jaishankar said...

Very interesting post da....you have given some god info about idlis especially about idlis for diabetics. For us most of time we go for oatmeal rather than idlis, it has been quite a while since I made idlis for breakfast.

Chitra said...

But we don't eat idlis plainly. Idlis are eaten with coconut chutney and sambar (protein + veg.+ vitamins).
I think, the whole package benefit is to be seen and not as a separate dish. It is like giving the values of bread/bun in a burger.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி

GEETHA ACHAL said...

//But we don't eat idlis plainly. Idlis are eaten with coconut chutney and sambar (protein + veg.+ vitamins).
I think, the whole package benefit is to be seen and not as a separate dish. It is like giving the values of bread/bun in a burger.//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...நாம் எப்பொழுதும் இட்லியுடன் எதாவது சட்னி, சாம்பார் என்று தான் வைத்து சாப்பிடுவோம்...உண்மை தான்...ஆனால் இட்லியினை மட்டும் தனியாக கானும் பொழுது அதுவும் சத்து நிறைந்ததாக இருக்கவேண்டுமே...அதுவும் கருத்தில் கொண்டது சிறிய குழந்தைகளும், உடல் நிலைமுடியாமல் இருப்பவர்களுக்கும் தான் அதில் முக்கியத்தும் இருந்தது...அதனாலே தான் இட்லியினை தனியாக கருத்தில் கொண்டும் ஆரயபட்டது...

M.S.R. கோபிநாத் said...

நல்ல அருமையான விளக்கம். இட்லியில் உளுந்து சத்து இருக்கிறதே.. அதில் ஏதும் விட்டமின் இல்லையா? தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன். எங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி உப்புமா உண்டு.

எல் கே said...

நீங்க ஒரு கேள்வி கேக்கறப்பவே நினச்சேன் ? இப்படி எதாவது சொல்ல போறீங்கன்னு,

இது புதுசா இருக்கு. செஞ்சு பாக்கறேன். எங்க வீட்டு சின்ன அம்மணிக்கு தோசைதான் பிடிக்கும் இட்ல்யியா விட

Ann said...

Rombha nalla info! Nandri. Kondakadalai sethu seiyara idea nalla iruku, intha recipe-a try pannarean.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ரொம்ப ரொம்ப நல்ல தகவல்,,,,

Jaleela Kamal said...

இட்லி பற்றி பெரிய அலசல் போல

முன்பு ஒரெ ஸ்கூலுக்குவாரம் ஒரு முறை இட்லி தான் , ஒரே வெருத்து போய் இடையில் இட்லி சாப்பிட்வதையே நிருத்திட்டேன், அப்பரம் நானே வித விதமா செய்ய ஆரம்பித்ததும் விரும்பி சாப்பிட ஆரம்பிச்ச்சு, இட்லி மீன் சால்னா ந்ன் ஒரு பிடி தான்.

அதெ போல் தக்காளி சட்னி, சாம்பார், கால் பாயா, அதுவும் நல்ல இருக்கும்.

Unknown said...

இட்டு + அவி + அளி]] நல்ல விளக்கம்.

இட்லியை சத்தானதாக்க நல்ல டிப்ஸ், இதை அவசியம் சொல்கிறேன் வீட்டில்.

நன்றி.

ஹுஸைனம்மா said...

கீதா, அருமையான பதிவு!!

இட்லியின் சத்துக்கள் குறித்த விவரங்கள் அறிந்தேன். யோசித்துப் பார்த்தால், நமது, அரிசி, கோதுமை, போன்ற மெயின் கோர்ஸ் உணவுகள் எல்லாமே கார்போஹைட்ரேட்தானே!! கோதுமைகூட இப்போ “fortified with minerals & vitamins" என்றுதானே விளம்பரம் செய்கிறார்கள்.

அவற்றை மற்ற சைட் டிஷ்களோடு சேர்த்து உண்ணும்போதுதான் complete food ஆகிறது, இல்லியா?

ரொம்ப அவசியமான விஷயங்கள் தெரிந்துகொண்டேன். நன்றி கீதா.

ஒரு சந்தேகம், நான் மொத்தமாக இட்லி மாவை அரைத்து வைத்துக் கொள்வேன். அதில் சிலசமயம் மட்டும், மஞ்சள் நிற ஏடு படிந்திருப்பதைப் பார்க்கிறேன். என்ன காரணம் தெரியுமா? நான் சந்தேகப்பட்டுப் பயந்து மாவைக் கொட்டிவிடுவேன். (வெந்தயம் சேர்த்து அரைப்பேன்).

Menaga Sathia said...

இட்லி பற்றிய விளக்கம் அருமை கீதா!! இனி சென்னா சேர்த்து அரைக்கிறேன்.பகிர்வுக்கு நன்றி....

எல் கே said...

வெந்தயம் சேர்ப்பதால் அந்த நிறம் வருகிறது என்று நினைக்கிறன் . தவறாக இருந்தால் திருத்தவும்

சாருஸ்ரீராஜ் said...

இட்லி பற்றிய விளக்கம் ரொம்ப நல்லா இருந்தது கீதா .....

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா,
இட்லி மாவு நானும் ஒரு வாரத்துக்கு அரைத்து வைப்பேன்.

இது வரைமஞ்சள் ஆனதில்ல


நீங்க மாவு அரைத்ததும் அதில் சோடா, உப்பு எதுவும் போடாமல் புளிக்க வையுங்கள்.

தேவைக்கு அப்ப அப்ப எடுத்து கரைத்து கொள்ளுஙக்ள். வாரம் ஒரு முறை 5 டம்ளர் அளவிற்கு அரைத்து வைப்பேன். முதல் நாள் அரைத்து வைத்தார் போல் அப்படியே இருக்கும்/

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

புதினா இட்லி, கொத்தமல்லி இட்லி, கீரை இட்லி, வெஜிடேபுள் இட்லி, கேரட் இட்லி...
இட்லி,
இட்லி,
இட்லி,...

Padhu Sankar said...

Nice informative post!! Will try making idlis with channa

தெய்வசுகந்தி said...

நல்ல தகவல் கீதா. சென்னா சேர்த்து செய்து பார்க்கிறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கோபிநாத்...//இட்லியில் உளுந்து சத்து இருக்கிறதே.. அதில் ஏதும் விட்டமின் இல்லையா? //உளுத்தம் பருப்பிலும் அதிக அளவு கார்பேஹேடேரேட் , பிரோட்டின் தான் இருக்கின்றது..அதில் சிறிதளவு கல்சியம் மற்றும் இரும்பு சத்தும் இருக்கின்றது...

GEETHA ACHAL said...

//நீங்க ஒரு கேள்வி கேக்கறப்பவே நினச்சேன் ? இப்படி எதாவது சொல்ல போறீங்கன்னு,

இது புதுசா இருக்கு. செஞ்சு பாக்கறேன். எங்க வீட்டு சின்ன அம்மணிக்கு தோசைதான் பிடிக்கும் இட்ல்யியா விட//தங்கள் கருத்துக்கு நன்றி கார்த்திக்...கண்டிப்பாக குட்டி அம்மாவிற்கு, தோசை தான் பிடிக்கும் என்றால், இப்படி மாவு கலந்து தோசை செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி Ann...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி boniface

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...எதோ எனக்கு தெரிந்தது...படித்தது...அவ்வளவு தான்...நீங்கள் சொன்ன அனைத்தும் இட்லியுடன் சூப்பராக இருக்கும்...இப்படியா ஆசைகாட்டுவது...

GEETHA ACHAL said...

//இட்லியை சத்தானதாக்க நல்ல டிப்ஸ், இதை அவசியம் சொல்கிறேன் வீட்டில்.
//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி

GEETHA ACHAL said...

//இட்லியின் சத்துக்கள் குறித்த விவரங்கள் அறிந்தேன். யோசித்துப் பார்த்தால், நமது, அரிசி, கோதுமை, போன்ற மெயின் கோர்ஸ் உணவுகள் எல்லாமே கார்போஹைட்ரேட்தானே!! கோதுமைகூட இப்போ “fortified with minerals & vitamins" என்றுதானே விளம்பரம் செய்கிறார்கள்.//
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹுஸைனம்மா…

//அவற்றை மற்ற சைட் டிஷ்களோடு சேர்த்து உண்ணும்போதுதான் complete food ஆகிறது, இல்லியா? //உண்மை தான்……அதனால் தான் இத்துடன் காய்கறி, கீரை போன்றவகைகளை அடிக்கடி சேர்த்து கொளவது மிகவும் அவசியம்.

//ஒரு சந்தேகம், நான் மொத்தமாக இட்லி மாவை அரைத்து வைத்துக் கொள்வேன். அதில் சிலசமயம் மட்டும், மஞ்சள் நிற ஏடு படிந்திருப்பதைப் பார்க்கிறேன். என்ன காரணம் தெரியுமா? நான் சந்தேகப்பட்டுப் பயந்து மாவைக் கொட்டிவிடுவேன். (வெந்தயம் சேர்த்து அரைப்பேன்).//ப்ரிஜில் வைத்த மாவில், மாவு கரைக்கும் பொழுது அதிக தண்ணீர் சேர்த்து இருந்தால், மாவு மேலே, சிறிது தண்ணீர் கொஞ்சம் பழுப்பு நிறமாக இருக்கும்…(அதுவும் 4 – 5 நாட்கள் கழித்து பார்த்தால்….)அதனை கீழே கொட்டி விடுங்கள்..மற்றபடி மாவினை உபயோகிக்கலாம்…
அதே போல, மொத்தமாக மாவு அரைக்கும் பொழுது உப்பு சேர்க்காமல் ப்ரிஜில் வைத்துவிடுங்கள்… தேவைக்கு சிறிது சிறிதாக எடுத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்….

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கார்திக்...பதில் கொடுத்தமைக்கு...

GEETHA ACHAL said...

தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...நன்றி சாரு அக்கா..

GEETHA ACHAL said...

தங்கள் கருதுக்கு நன்றி நிஜாம்...நன்றி பது...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுகந்தி..கண்டிப்பாக செய்து பாருங்கள்...

Raks said...

So far I have been thinking,our basic idly recipe is by itself is a balanced one,thanks for the eye opener!

மனோ சாமிநாதன் said...

இட்லி பற்றிய விளக்கங்கள் அருமை, கீதா!

Ammu Madhu said...

paakkarapove eduthu sapdanum pola iruku:)

தக்குடு said...

idlykku thani post pootta geetha akkavukku 8 idly satni saambarooda paarcelll...:)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜி...நன்றி மனோ ஆன்டி...நன்றி அம்மு...மிகவும் நன்றி தக்குடு..உங்கள் இட்லி, சாம்பார் கிடைத்தது...நன்றி

Asiya Omar said...

கீதாஆச்சல் ஆய்வுக்கட்டுரை சப்மிட் செய்தாச்சா?நல்ல பகிர்வு.பாராட்டுக்கள்.இதில் கொண்டைக்கடலை இட்லி தான் ஹைலைட்.பாராட்டுக்கள்.

GEETHA ACHAL said...

ஆசியா அக்கா...கட்டுரையினை சப்மிட் செய்தாச்சு...நன்றி...

SathyaSridhar said...

Geetha,,,rombha usefull ahana information idli pathi,,kandippa ini chana serthu araichu paarkiren..

Umm Mymoonah said...

Nice to see a blog in tamil,interesting information about idli

apsara-illam said...

ஹாய் கீதா...,உங்களுடைய பகுதியை பார்வையிட்ட போது எனக்கு இது கண்ணில் பட்டது.மிகவும் அருமையான இட்லி விளக்கம்.இட்லி மாவு கைய்யில் இல்லையென்றால் எங்கள் வீட்டில் சரிவராது.எனவே வாரம் ஒரு முறை ஒரு வாரத்திற்க்கு ஏற்றார் போல் அரைத்து வைத்துக் கொள்வேன்.
இந்த கொண்டகடலை இட்லியை எப்படியும் இந்த வாரம் அரைத்து விடுகின்றேன்.ரிசல்ட்டோடு உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.

அன்புடன்,
அப்சரா.

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி அப்சரா..கண்டிப்பாக இன்னும் பல பகுதிகள் இருக்கின்ரது...அதனையும் படித்து பாருங்க..

கண்டிப்பாக இந்த இட்லியினை செய்து பார்த்துவிட்டு கருத்தினை சொல்லுங்க...நன்றி...

Anonymous said...

இட்லி சாப்பிட்டு நிம்மதியா இருந்தேன் சகோதரி. இப்ப அதுக்கும் ஆப்பா. தகவல்கள் அருமை. யாராச்சும் காட்டுவாசி டயட் இருந்தா செல்லுங்கப்பா, சமைக்கரது இப்பவே கண்ணைகட்டுதே.

Related Posts Plugin for WordPress, Blogger...