பல்கர் என்றால என்ன??????? - பல்கர் உப்புமா / Bulgur uppuma

பல்கர்( Bulgur) என்றால் என்ன? பல்கர் என்பது கோதுமை ரவை..

அப்படி என்றால்,பல்கருக்கும் கோதுமை ரவைக்கும்(Cracked Wheat) என்ன வித்தியாசம்???????
கோதுமையினை ரவையாக அப்படியே உடைத்தால் அது கோதுமை ரவை…ஆனால் கோதுமையினை, வேகவைத்து பின்னர் சிறிது நேரம் அதனை காயவைத்து பின், ரவையாக உடைத்தால் அது தான் பல்கர்..(அதாவது புழுங்கல் அரிசிக்கும் பச்சரிக்கும் இருக்கும் வித்தியாசம் போல)

கோதுமை ரவை போல் இல்லாமல், பல்கர் வேக மிகவும் குறைந்த அளவு நேரமே எடுக்கும்.

பல்கரில் அதிக அளவு நார்சத்து- Dietary Fiber, Maganese இருக்கின்றது…இதில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பதால்…. அனவைருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது….

பல்கரில் , பிரவுன் ரைஸியை (Brown Rice) விட அதிக அளவு நார்சத்து இருக்கின்றது, கலோரியும் குறைவாக இருக்கின்றது..

சரி…இவ்வளவு சத்துகள் உள்ள பல்கரினை வைத்து நான் செய்த பல்கர் உப்புமா….

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பர்கல் – 1 கப்
·         வெங்காயம் – 1
·         பச்சை மிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 4 இலை
·         உப்பு - தேவைக்கு
முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி
செய்முறை :
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பருப்பினை போட்டு வறுக்கவும். வெங்காயம் + பச்சை மிளகாயினை நறுக்கி வைக்கவும்.
·         அதன் பின், வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
·         இத்துடன், 2 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
·         கொதிவந்த உடன், பல்கரினை சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
·         சுவையான சத்தான பல்கர் உப்புமா ரெடி.


36 comments:

Mrs.Menagasathia said...

சூப்பர் விளக்கம்..உப்புமா அருமையாக யிருக்கு!!

மன்னார்குடி said...

நல்லாயிருக்கு.

LK said...

பர்கர் கேள்வி பட்ருக்கேன் இப்பதான் பல்கர் கேள்வி படறேன். இங்க கிடைக்குமானு தெரியல கேட்டு பார்க்கணும்

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...நன்றி மன்னார்குடி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி கார்த்திக்...கிடைத்தால் செய்து பாருங்கள்...நன்றாக இருக்கும்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உப்புமா ரொம்ப சுவையா இருக்கும்போல..

கீதா ஆச்சல், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

Anonymous said...

enga kidaikkum?

Cool Lassi(e) said...

Same pinch to you..:). I am posting something made of Bulgur Wheat today. Yeah, I knew it was a something similar to cracked wheat..thanks for pointing out the exact difference.
Bulgur Uppma nalla vanthirukku!

தக்குடுபாண்டி said...

உப்புமாவில் கருவேப்பிலை போடர்துக்கு மறந்துடீங்க போலருக்கே??...;)

சூடாக ஒரு ப்ளேட் உப்புமா பார்சல் அனுப்பி வைக்கவும்!...:)

ஹுஸைனம்மா said...

இப்பத்தான் புரியுது. விளக்கத்திற்கு நன்றி கீதா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்டார்ஜன்...

Geetha Achal said...

ஸ்ரீவிஜி, இதனை நான் இங்கு உள்ள Local American Groceryயில் தான் வாங்கினேன்...நீங்களும் அங்கு தேடி பாருங்கள்..இல்லை என்றால் Walmartயில் தேடி பாருங்கள்...கிடைக்கும்...இது பொதுவாக ஒட்ஸ் இருக்கும் sectionயில் தான் இருக்கும்..நன்றி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கூல்..நன்றி ஹுஸைனம்மா...

Geetha Achal said...

//சூடாக ஒரு ப்ளேட் உப்புமா பார்சல் அனுப்பி வைக்கவும்!...:)//உங்களுக்கு ஒரு ப்ளேட் பார்சல் அனுப்பியாச்சு...கருவேப்பில்லை சேர்த்து இருக்கின்றேன்...படத்தினை பாருங்கள்..நன்றி

Shobana senthilkumar said...

Hi geetha,
thx for the in bulger wheat will surely tfo...bought bulger wheat last week ...will surely try ur recipe:0

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

Gita Jaishankar said...

Thanks for the explanation about regular and bulgur wheat Geetha...really usefull...bulgur upma is very interesting and looks very tasty :)

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷோபனா...நன்றி கீதா...

Chitra said...

I have never used Bulgar before. This recipe looks very tempting. :-)

Premalatha Aravindhan said...

First time here,u have very nice recipe collection...gr8.following u.

RAKS KITCHEN said...

Thats new to me,nice idea and nice recipe Geetha@

நட்புடன் ஜமால் said...

இதை சாப்பிட்டிருக்கலாம், ஆனால் இந்த பெயர் இப்ப தான் தெரியும் ...

நன்றிங்க.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்...சுவை அருமையாக இருக்கும்..நன்றி . . .தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேமலதா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜி....நன்றி ஜமால் அண்ணா.....

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா பல்கர் இங்கு கிடைக்குமா ,

Sharmilee! :) said...

Nice info of bulgar and upma with that sounds gud!

Deivasuganthi said...

போன வாரம்தான் ஒரு storeல பல்கர் பாத்துட்டு அது என்னனு google பண்ணனும்னு நெனச்சிட்டு, வழக்கம் போல மறந்துட்டேன். விளக்கத்துக்கும் செய்முறைக்கும் நன்றி கீதா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா...எங்க அக்கா சொன்னாங்க அங்கும் இது கிடைக்கும் என்று...ஆனால் கரெக்டாக தெரியவில்லை...திரும்பவும் வேண்டுமானால் கேட்டு சொல்கிறேன்...நன்றி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷர்மிலி...நன்றி சுகந்தி...அனவருக்கும் பயன்படும் என்று தான் அதனை விளக்த்துடன் எழுதினேன்..இதனால் அனைவருக்கும் பயன்படுகின்றது என்பதில் மகிழ்ச்சி..நன்றி

Jaleela said...

விளக்கமும் , உப்புமாவும் அருமை. ஓட்டு தான் போட முடியல ஏன் தெரியல‌

Priya said...

Bulghur upma arumaiyo arumai..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலா அக்கா..நன்றி ப்ரியா..

Kuppuswamy K said...

Very nice bulghur up puma. I am living in remote village of tamil nadu.very nice taste

Kuppuswamy K said...

Very nice bulghur up puma. I am living in remote village of tamil nadu.very nice taste

Gomathi Kc said...

really toooo tasty....

Gomathi Kc said...

really too tasty.... :)

Related Posts Plugin for WordPress, Blogger...