சௌசௌ வறுவல் - chow-cow Varuval/ Chayote Varuval

சௌசௌ தண்ணீர் காய் என்பதால் பெரும்பாலும் அதில் யாரும் வறுவல் செய்யமாட்டாங்க..ஆனா ஒரு முறை செய்தாங்க என்றால் எப்பொழுதும் அதிலேயே செய்ய வேண்டும் என்று ஆசைபடுவாங்க..

உருளைகிழங்கு வறுவல் மாதிரியே இருக்கும். மிகவும் அருமையாக இருக்கும். டயபெட்டிக் உள்ளவர்கள், வயதனாவர்கள் மற்றும் உருளைகிழங்கினை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாருக்கும் இந்த சௌசௌ வறுவல் ஒரு நல்ல மாற்றம்.

இந்த வறுவலிற்கு எண்ணெயும் மிக குறைவாக தாளிக்க மட்டும் உபயோகித்தால் போதும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்     
தேவையான பொருட்கள் :
·         சௌசௌ -  2
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்புதேவைக்கு


முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகுசிறிதளவு
·         கருவேப்பில்லை – 4 இலை


செய்முறை :
v  முதலில் சௌசௌயினை ஒரே அளவாக, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


v  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும், கடுகு தாளித்து பின் சௌசௌ துண்டுகள் + கருவேப்பில்லை + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.


v  குறைந்த தீயில் சௌசௌயினை வேகவிடவும். (வேகும்பொழுது தட்டு போட்டு முடி வேண்டாம்அதேபோல, தண்ணீரும் ஊற்றி தேவையில்லை(சௌசௌயில் இருந்து வெளிவரும் தண்ணீரே போதுமானது.))v  சுவையான சத்தான சௌசௌ வறுவல் ரெடி. இதனை சாதம், சாம்பார், ரசம், தயிர் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

44 comments:

மன்னார்குடி said...

வித்தியாசமா இருக்கு. சூப்பர்.

Srividhya Ravikumar said...

wow.. it sounds new to me geetha.. going to try tmrw..

சாருஸ்ரீராஜ் said...

கீதா நானும் அடிக்கடி செய்வேன் , என்னவர் முதன் முதலா சொல்லும் போது அது எல்லாம் நல்லா இருக்காது அப்படின்னு சொன்னேன்.ஆனா ஒரு முறை செய்தவுடன் அதன் சுவை பிடித்து , இப்போ வாரம் ஒரு நாள் இந்த வருவல் இருக்கும் பசங்களும் விரும்பி சாப்பிடுவாங்க , ரொம்ப நல்லா இருக்கு

எல் கே said...

வழக்கம் போல் வித்தியாசமான உணவு., நன்றி கீதா

SathyaSridhar said...

Geetha,,,varuval rombha nalla irukku paa paarkum poedhu potato maadiri fry aagi irukku...rombhavum super..

Nithu Bala said...

amam Geetha..ethuvarai chow-chow-la varuval seidhathey illai..kandippa seidhu parka vendiya recipe..nandri..

Nithu Bala said...

amam Geetha ethuvarai cho-chow la varuval seidhathey illai..kandipa seidhu parka vendiya recipe..evlo nalla recipe kuduthathukku nandri:-)

Menaga Sathia said...

சௌ சௌ வறுவல் நானும் செய்ததில்லை.பார்க்க உருளை வருவல் மாதிரி இருக்கு.சூப்பர்ர்!!

Raks said...

thanks for thst wonderful recipe,here after i am going to make tis often!

vanathy said...

Geetha, I never heard about Bulgur. Your recipe looks very yummy.

Shama Nagarajan said...

nice idea dear...looks yummy

Cool Lassi(e) said...

Like Nithu, enakkum ithu romba puthusu. Sticky chow chow transformed to crispy varuval. Fabulous!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மன்னார்குடி...நன்றி ஸ்ரீவித்யா...நன்றி கார்த்திக்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி சாரு அக்கா...நன்றி சத்யா..

GEETHA ACHAL said...

நன்றி நிது...கண்டிப்பாக செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும் உருளை வறுவல் மாதிரியே இருக்கும்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...நன்றி வானதி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜி...நன்றி ஷாமா...நன்றி கூல்

kamalabhoopathy said...

Geetha pudhumaiyana arumaiyana varuval nalla irukku.

Malar Gandhi said...

Chow chow fry looks great, never spiced up chayote' so far, will try this recipe soon.

Unknown said...

Wow looks yum.....havent thought of this with chow chow...spicy roast!

ஸ்வர்ணரேக்கா said...

சௌசௌ கூட்டு தான் தெரியும்.. இது புதுசா இருக்கே... ஒருமுறை ட்ரை பண்ணிபாக்கணும் கீதா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கமலா...

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள்..மிகவும் சுவையாக இருக்கும்...நன்றி மலர்...நன்றி ஷர்மிலி...

GEETHA ACHAL said...

ஸ்வர்னாரேகா, எப்படி இருக்கின்றிங்க...தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...கண்டிப்பாக செய்து பாருங்கள்..அருமையாக இருக்கும்...

Nithya said...

Super.. paarkave arumaya irukku :) with curd rice best ah irukum :)

ஹர்ஷினி அம்மா said...

கீதா நான் நல்லா இருக்கேன்பா...நீங்க இந்தியாவுக்கு போனதில் இருந்தே என் பதிவும் காணமே போச்சுபா.:-)

கொஞ்சம் வேலை அதிகமாக இருக்குபா அதான்...உங்க விசாரிப்பில் மகிழ்ச்சி ...விரைவில் பதிவுடன் வருகிரேன்

ஹர்ஷினி அம்மா said...

நல்ல ரெசிபி ..பாத்ததும் சாப்பிடனும் போல இருக்கு :-)

Chitra said...

with sambar - perfect combo. :-)

Dershana said...

new recipe with chow chow !

Unknown said...

wow nice recipe,thanks for posting will try it.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் அன்பான விசாரிப்புக்கும் மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா...உங்களுடைய பதிவுகளை சீக்கிரத்தில் எதிர்பார்க்கும் உங்கள் தோழி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா...நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி தர்ஷினி...நன்றி ப்ரேமலதா...

Jaleela Kamal said...

சௌ சௌ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இங்கு ஒரு சௌ சௌவின் விலை நம்ம ஊர் ரேட்டுக்கு 190 ரூபா வருது ஆகையால் ஆசைக்கு ஒரே ஒரு தடவை வாங்கி செய்து சாப்ப்பிட்டு விட்டு, நாக்க கொஞ்சம் அடக்கியாச்சு, ஊருக்கு போனா தான் நல்ல சாப்பிடனும்.

Priya Suresh said...

chow chow varuval super ponga, udane seithu saapida solluthu..

GEETHA ACHAL said...

ஊருக்கு போகும் பொழுது வேண்டுமானால் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அக்கா...அப்புறம் , திரும்பவும் துபாய் வந்தவுடன், விலை அதிகமாக இருந்தாலும் வாங்கி சாப்பிட ஆசை வந்துவிடும்..உருளையினை பார்க்கும் பொழுது, சௌசௌ நல்லது தானே..நன்றி ஜலிலா அக்கா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா..

தக்குடு said...

போட்டோவை போட்டு உசுப்பேத்தும் கீதா அக்காவை அன்புடன் கண்டிக்கிறேன்.

இப்படிக்கு,
தக்குடு
கரண்டியும் கையுமாக இருப்போர் சங்கம்,
தோஹா.

தெய்வசுகந்தி said...

சௌ சௌல வறுவலா?புதுசா இருக்குது கீதா!!

Anonymous said...

Yummy.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சுகந்தி, நன்றி விஜி

sonaramji said...

something new, never told never tried. thanks

GEETHA ACHAL said...

தங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி ராம்...

apsara-illam said...

ஹாய் கீதா...,செளசெள காயில் இப்படி ஒரு அருமையான வறுவல் செய்யமுடியும்னு இப்பதானுங்க பார்க்கிறேன்.பார்க்கும்போது உருளை வறுவல் போலவே இருக்கு.யாருக்கும் காய் பேரு சொன்னாதான் தெரியும்.
செய்து பார்க்க வேண்டியதுதான்.
வாழ்த்துக்கள் கீதா...

அன்புடன்,
அப்சரா.

Related Posts Plugin for WordPress, Blogger...