அவசர சட்னி - Chutney - Side Dish for Idly and Dosa

திடீர் விருந்தினர் வந்து இருக்காங்களா…அல்லது காலையில் டிபன் செய்ய லேட்டாகிட்டதா…இதோ 2 – 3 நிமிடங்களில் இந்த சட்னியினை செய்துவிடலாம்…எதையும் வதக்க தேவையில்லை…வேலையும் மிச்சம்.

எந்த பொருளையும் வதக்காமல் செய்வதால் caloriesயும் அதிகரிப்பதில்லைகொடுத்துள்ள அளவில் சட்னி செய்தால், வெரும் 100 – 110 calories தான் இருக்கும். அதனால், டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சட்னி இது…..

சமைக்க தேவைப்படும் நேரம் : 3 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

• வெங்காயம் – 1

• தக்காளி – 1 பெரியது

• பச்சை மிளகாய் – 3 (அல்லது) 4

• கொத்தமல்லி – சிறிதளவு

• உப்பு – தேவைக்குகேற்ப

தாளித்து சேர்க்க வேண்டிய பொருட்கள் :

• நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி

• கடுகு – 1/4 தே.கரண்டி

• பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

 வெங்காயம் + தக்காளி + பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

 வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாயினை மிக்ஸியில் போட்டு Pulse Modeயில் 2 – 3 தடவை விட்டுவிட்டு அரைக்கவும். (கவனிக்க : ஒன்றும்பாதியுமாக அரைக்கவும். மைய அரைத்துவிட வேண்டாம்.)

 அரைத்த கலவையுடன் கொத்தமல்லி + உப்பு சேர்த்து கலக்கவும்.

 தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய அவசர சட்னி ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :

இந்த சட்னியினை நல்லெண்ணெயில் தாளிப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையெனில் எண்ணெயினை சிறிது கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.

27 comments:

Chitra said...

Indianized salsa????? Awesome! Very good idea.

Shama Nagarajan said...

comfort yummy chutney

Srividhya Ravikumar said...

Really interesting ...

Kanchana Radhakrishnan said...

easy chutney

அண்ணாமலையான் said...

அட .....

Devasena said...

Good one Geetha!

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப ஈசியா இருக்கு கீதா காலை நேரத்திற்கு உதவும்.

மங்குனி அமைச்சர் said...

எதுக்கு மேடம் இவ்வளோ டென்சன் , யாராவது திடீர்ன்னு விருந்தினர் வந்து கதவ காலிங் பெல் ) தட்டினா பேசாம உள்ள இருந்துகிட்டு

"பிளீஸ் செக் த டோர், யு ஹேவ் நாக்குடு (தட்டியது )
நீங்கள் தட்டிய கதவை சரி பார்க்கவும் ......................"

அப்படின்னு ரெண்டு வாட்டி சொன்னா , பேசாம வந்தவுக தப்பான வீட்டுக்கு வந்துட்டோம்னு திரும்ப போயடுவாக ,
(சாரி மேடம் , சும்மா காமெடிக்கு )

Aruna Manikandan said...

Yummy chutney sounds new to me..
Thx. for sharing:-)

மனோ சாமிநாதன் said...

இந்த அவசர சட்னி நன்றாக இருக்கிறது, கீதா! நானும் ஒரு அவசர சட்னி செய்வதுண்டு. வற்றல் மிளகாய், புளி சேர்த்து அரைப்பது அது. நீங்களும் ஒரு அவசரசட்னியை வேறு விதமாக எழுதியிருப்பது கண்டு ஆச்சரியமாக இருந்தது!

Menaga Sathia said...

very nice& easy chutney!!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...இந்த சட்னி பல வருடங்களாக எங்கள் வீட்டில் மிகவும் பேமஸ்...இந்த சட்னியினை என்னுடைய மாமியார் அவங்க அம்மாவிடம் இருந்து கற்றுகொண்டது...அந்த காலத்தில் எல்லாம் நிறைய பேர் வீட்டில் இருப்பாங்க..அதனால அரைத்த சட்னி எல்லாம் காலியாகிவிடுமாம்...அப்புறம் என்ன கடைசியில் சாப்பிடுறவங்களுக்கு இந்த அவசர சட்னி தானாம்...ஆனால் இப்பொழுது எல்லாம் சட்னி அரைக்காமலே இந்த அவசர சட்னியினை தான் நான் directஆக செய்து விடுகிறேன்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா...நன்றி ஸ்ரீவித்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கஞ்சனா...நன்றி தேவசேனா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணாமலையான்...நன்றி சாரு அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மங்குனி அமைச்சர்...//எதுக்கு மேடம் இவ்வளோ டென்சன் , யாராவது திடீர்ன்னு விருந்தினர் வந்து கதவ காலிங் பெல் ) தட்டினா பேசாம உள்ள இருந்துகிட்டு

"பிளீஸ் செக் த டோர், யு ஹேவ் நாக்குடு (தட்டியது )
நீங்கள் தட்டிய கதவை சரி பார்க்கவும் ......................"
//நாங்க எப்பொழுதும் அப்படி தான் பண்ணுவது(காமடிக்கு தான்...)...ஒரு வேளை எல்லாரும் அப்ப்டி பண்ணுவாங்க என்று தெரியாமல் எழுதிவிட்டேன்...போல...பல நல்லவங்க இன்னும் இருக்காங்க இல்ல....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அருணா...நன்றி மேனகா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி. இதே மாதிரியும் சட்னியினை எங்க மாமியார் வீட்டில் செய்வாங்க...இந்த சட்னியினை எல்லாம் இப்பொழுது vacationயிக்கு இந்தியா சென்ற பொழுது கற்றுகொண்டது தான்...நன்றி

Raks said...

Oh,my mom also makes similar one,love this a lot with hot hot idlies!

Menaga Sathia said...

இன்று இட்லிக்கு இந்த சட்னி செய்தேன்.மிக அருமை.2 இட்லி அதிகம் சாப்பிட்டேன்...ரொம்ப பிடித்துவிட்டது.இனி இந்த சட்னிதான் நம்ம லிட்ஸ்ல....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜேஸ்வரி...

GEETHA ACHAL said...

மேனகா...உடனே செய்துபார்த்து பின்னுட்டம் அளித்தில் மிகவும் மகிழ்ச்சி...நன்றி மேனகா...

Nithu Bala said...

roombha vithyasama chutney..seidhu pakkaren..ethu matiri neraya post pannungha..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...கண்டிப்பாக இது மாதிரி குறிப்புகளை இனிமேல் நீங்கள் எதிர்பார்கலாம்...நன்றி

Ammu Madhu said...

எங்க அம்மா இதே மாறி பண்ணுவாங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஒரே ஒரு வித்யாசம் அரைக்கரப்போ கொஞ்சம் கறிவேப்பிலை சேர்ப்பாங்க.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி அம்மு...கருவேப்பில்லை சேர்த்தால் கண்டிப்பாக இன்னும் சுவையாக இருக்கும்...சூப்பர்ப்...நன்றி

Meera Pradeep said...

Hi, really nice recipes, i comes to about your blog thru Aval Vikatan few days before only. I am very much interested to cook. This blog is gift for all the ladies. Superb menus, thanks pa.--Meera Pradeep

Related Posts Plugin for WordPress, Blogger...